செஃப் அணியும் தொப்பிக்கு பேர் டக்(TOQUE). Scrabble விளையாடுபவர்களூக்கு Q கொண்டு ஒரு புது வார்த்தை கிடைத்ததா?
பல நூற்றாண்டுகளுக்கு முன் அரசைக் கைப்பற்ற ராஜாவுக்கு உணவில் விஷம் வைப்பார்களாம். அதனால் நம்பிக்கையான, ராஜவிசுவாசமுள்ள நபரே அரண்மனை செஃப் ஆக நியமிக்கப்படுவார். அதை ஒரு உயர்ந்த பதவியாக கருதி வெள்ளை துணியால் தொப்பியை கிரீடம் வடிவில் அமைத்தார்கள்.
இப்போ செஃப் தலைமுடி உணவில் விழாம்லும், தலை சொறிந்துகொண்டு எண்ணைக் கையால் கரண்டியை தொடாமலும் இருக்கவோ?
ஐஸ் ராஜா யார் தெரியுமா?
உலகம் தோன்றிய நாள் முதல் ஐஸ் இருந்திருக்கிறது. அதை காசாக்கும் எண்ணம், பாஸ்டனை சேர்ந்த Frederic Tudor க்குத்தான் முதலில் தோன்றியது. அவர் தன் அப்பாவின் உறைந்து ஐஸ் ஆகிப்போன குளத்திலிருந்து 130 டன் ஐஸை மரத்தூளால் கவர் செய்து 1805 முதல் ஐரோப்பாவுக்கும், கல்கத்தாவுக்கும் அனுப்ப ஆரம்பித்தார். அன்றைய டாஸ்மாக் காரர்கள் ஐஸை விரும்பி போட்டி போட்டு வாங்கினார்கள். அதனாலேயே அவர் ஐஸ் கிங் என்று அழைக்கப்பட்டார்.
ரெஃப்ரிஜெரேட்டர்/ஃப்ரீசர் எல்லாம் அமெரிக்க கிச்சனுக்குள் வந்தபின் 1933ல் Guy Tinkham என்பவர்தான் ஐஸ் க்யூப் ட்ரேயை டிசைன் செய்தார். ஆன் தி ராக்ஸ் சாப்பிடுபவர்கள்- இல்லை குடிப்பவர்கள்- அவருக்கு ஒரு டோஸ்ட் சொல்லுங்கள்.
சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகையின் வாரமலரில் நான் படித்தது.
ஏர் கண்டிஷனர், ப்ளாஸ்டிக் பை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்