விபத்தில்லா வாழ்க்கை
திங்கட்கிழமை 20/01/14 அன்று பள்ளி மாணவ/மாணவிகள் விபத்தில்லா வாழ்க்கை பெற சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி மாநிலம் முழுதும் நடந்தது.
நெல்லை மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி மேல் நிலை பள்ளியில் திரு மு.செல்லையா - செயலர், கல்வி சங்கம், திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் - வரவேற்க,
திரு.ப.தி.சிதம்பரம் -ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் தலைமை வகிக்க,
சிறப்பு விருந்தினர், திரு.ச.தங்கவேலு-R.T.O., திருநெல்வேலி, தேசியக்கொடி ஏற்றினார்.
பாரதியார் படித்த பள்ளி அல்லவா? மாணவ/மாணவிகள், கடவுள் வாழ்த்தாக
"ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் -பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்"
என்ற பாரதி பாடலும் தமிழ்த் தாய் வாழ்த்தும் கோரஸாக பாடினர்.
திரு செந்தில்குமார் -M.V.I .Gr.I., வாசிக்க, எல்லோரும் விபத்தில்லா தமிழகம் உருவாக்கிட உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
முன் தினம் பள்ளியில் நடந்த பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளும், N S S மாணவர்களுக்கு
T ஷர்ட்டும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் திரு.S.வடிவேல் முருகன், திரு K.G.கிருஷ்ணன் -முறையே தலைவர், பொருளாளர், பஸ் உரிமையாளர்கள் சங்கம், திரு.சீ.வ.ஜானகிராம் அந்தோணி-மாநில செயற்குழு உறுப்பினர், பஸ் உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனம் ஆகியோரும் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர், திரு சூ.அழகிய சுந்தரம் நன்றியுரை அளித்தார்

திரு.தங்கவேலு, "ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்ட வேண்டாம். உரிமம் பெற R.T.O., அலுவலத்தில் ஏற்பாடு செய்கிறோம். சாலை விதிகளை மதிக்க வேண்டும்" என்றும் கூறினார்.