Thursday, October 22, 2009

"எனை ஆளும் மேரிமாதா துணை நீயே மேரிமாதா

மிஸ்ஸியம்மா படம் பார்த்திருக்கீங்களா? இன்று கே டிவியில் பார்த்தேன்.
உடனே உங்களுக்கு, "பிருந்தாவனமும் நந்தகுமாரனும்.." ஞாபகம் வரும்.
அதில் எல்லா பாட்டுக்களுமே நன்றாக இருக்கும்.

ஜெமினியும் சாவித்திரியும் வேலை கிடைக்காமல் ஒரு பள்ளிக்கூடத்திற்கு ஆசிரிய/யை வேண்டும். தம்பதிகளாக இருக்கவேண்டும் என்ற விளம்பரத்தை பார்த்து இருவரும் வந்து, அப்படி சொல்லி சேர்ந்து கொள்வார்கள். பள்ளி நடத்தும் எஸ்.வி.ரெங்காராவின் மகள் மகாலக்ஷ்மிதான் மேரியாக கிறிஸ்துவ தம்பதியிடம் வளர்ந்தவள். தங்கவேலுதான் அதை கண்டுபிடிப்பார்.
நல்ல சிரிப்பு படம். நிறைய அருமையான பாடல்கள்.
படத்தில் சாவித்திரி (பி.லீலா பின்னணி) பாடும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

"எனை ஆளும் மேரிமாதா
துணை நீயே மேரிமாதா, என்றும்
துணை நீயே மேரிமாதா

பரிசுத்த ஆவியாலே
பரபுத்ரன் ஈன்ற தாயே
பிரபு யேசுநாதன் அருளால்
புவியோடு புனிதம் அடைந்தாய்
எனை ஆளும் மேரிமாதா...

நெறி மாறி வந்ததாலே
நகைப்பானதே என் வாழ்வே
கணமேனும் சாந்தி இல்லையே
அனுதினமும் சோதியாதே
எனை ஆளும் மேரிமாதா...." .

Monday, October 12, 2009

அசத்தப் போவது நானு.

அசத்தல் ரசிகர்களே, எல்லோருக்கும் நெல்லை சகாவின் வணக்கம்.

100 வாரம் தாண்டி நடக்கும் இந்த நிகழ்ச்சியை கடந்த 5 மாதங்களாகத தான் பார்க்கிறேன். ஸ்டாண்ட் அப் காமெடி - மதுரை முத்து போல - பண்ண நினைக்கிறேன். போலாமா? நன்றி.

இன்னிக்கி திங்கள் கிழமை, கொலம்பஸ் தினம். அமெரிக்காவில் பள்ளி விடுமுறை. சனிக்கிழமையன்றே கொலம்பஸ் பற்றி சொல்ல நினைத்த டீச்சர், க்ளாஸில் ஜானியை அழைத்து உலக வரைபடத்தில் வட அமெரிக்கா எங்கே? காட்டு என்றார். கரெக்ட்னு சொல்லி, "க்ளாஸ்! அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்" என கேட்க, எல்லோரும் 'ஜானி' என்றனர்.

இரவு படுக்குமுன், கடவுளே, நேபிள் ஐ இத்தாலியின் தலைநகராக மாற்றிவிடு என்று வேண்டினான் பையன். ஏண்டான்னு அப்பா கேட்டால், நான் டெஸ்டில் அப்படித்தான் எழுதியிருக்கிறேன் என்கிறான்.

பள்ளி விண்ணப்பம் எழுதும் போது தாய் மொழியா? தமிழ்னு எழுதுன்னார் அப்பா. அதுக்கு ஏன் தாய் மொழினு பேருன்னு பையன் கேட்டதும், ஏன்னா வீட்டில உன் அம்மாதானே பேசிக்கிட்டே இருக்கா, அதான்.

ஆபரேஷனுக்கு முன்னாடி, டாக்டர் பேஷண்ட் கிட்டே, உங்களுக்கு லோகல் அனெஸ்தீஸியா கொடுக்கப் போகிறேன் என்று சொல்ல, "டாக்டர், இம்போர்ட்டட் அனெஸ்தீஸியா இருந்தாலும் கொடுங்க எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை"னு சொன்னார் பேஷண்ட்.


டாக்டரிடம், அந்த இளம் நர்ஸ் சொன்னாள், "டாக்டர், நான் இவருக்கு எப்ப பல்ஸ் ரேட் பார்த்தாலும் ஜாஸ்தியா இருக்கு".

'நீ அவர் கண்ணைக் கட்டி விட்டு பல்ஸ் பார்' என்றார் டாக்டர்.


அந்த டாக்டருக்கும் நர்ஸ் மேல ஒரு இதுதான். அவளுக்கு ஒரு லவ் லெட்டர் எழுதினார். எப்படி? "ஐ லவ் யு சிஸ்டர்.........."

லாயர்கள் பற்றியும் நிறைய ஜோக்ஸ் உண்டு. வீட்டு வாசலில் ஒரு போர்டு. எங்கே ஆசை இருக்கிறதோ அங்கே வழி உண்டு. எங்கே வழியோ அங்கே சட்டம் உண்டு. எங்கே சட்டம் உண்டோ அங்கே ஓட்டை உண்டு. எங்கே ஓட்டை உண்டோ அங்கே லாயர் உண்டு. வாங்க.

அபியும் நானும் படத்தில் சர்தார்ஜி எப்படி உழைக்கிறார்கள், அவர்கள் பிச்சை எடுப்பதே இல்லை என்று தெரிஞ்சுக்கிட்டேன். அதனால் சர்தார்ஜி ஜோக் இனி சொல்ல மாட்டேன்.

வேலைக்காக இன்டர்வியூ போனான் நம்மாளு. பேட்டி எடுப்பவர் அவனிடம், ஆபீஸில் சுத்தம்தான் ரொம்ப முக்கியம். நீ வரும்போது ஃப்ளோர்மேட்டில் காலை துடைத்து விட்டு தானே வந்தாய் என்று கேட்டார். அவன் நன்றாக துடைத்து தான் வந்தேன்னதும், அவர், எனக்கு பொய் சொன்னால் பிடிக்காது. வாசலில் ஃப்ளோர்மேட்டே இல்லை என்றார்.

வீட்டிலே ஒரு நாள் சுப்பாண்டி மாதிரி ஒரு வேலையாளிடம், யாராவது வந்தால், நீங்க
யாருன்னு கேட்டு, பணம் கேட்டு வந்தால் நான் ஊரில் இல்லைனு சொல்லிடுன்னார். கொஞ்ச நேரத்தில் ஒருவர் வந்து பெல் அடிக்கவும் சுப்பாண்டி கதவை திறந்து யார் நீங்க? அவரை எதுக்காக பார்க்கணும்?னு கேட்டான்.

அவர், ஒரு பில் இருக்குனு சொல்லவும், சுப்பாண்டி "அவர் நேற்று மாலையே ஊருக்கு போயிட்டார்"னான். வந்தவர், அந்த பில்லுக்கு பணம் தரத்தான் வந்தேன். நீ சொல்லிடு, அப்புறம் வரேன்னு கிளம்பினார். "ஸார், ஸார், அவர் இன்று காலையே வந்து விட்டார், இருங்க கூப்பிடுறேன்"னான் சுப்பாண்டி.


புதிதாக வேலையில் சேர்ந்தவன் மறுநாளே லேட்டா வரவும், மேனேஜர் அவனிடம், நீ காலை 10 மணிக்கே வந்திருக்கணும்னார்.

அவன் கேட்டான் "ஏன் ஸார், என்ன நடந்தது"

அமெரிக்காவிலிருந்து டில்லி வந்த சுற்றுலா பயணிகள் அழைத்துக்கொண்டு போனார் ஒரு கைடு. செங்கோட்டை பார்த்ததும், அவரிடம் இதை எத்தனை ஆண்டுகளில் கட்டினார்கள்னு கேட்டார் ஒரு பயணி. 20 ஆண்டுன்னதும் அமெரிக்காவில் இதை 5 ஆண்டுகளில் கட்டி விடுவோம் என்றார். ஆக்ராவில் தாஜ்மஹால் 10 ஆண்டுகள்னதும் நாங்கள் 2 1/2 ஆண்டுகளில் கட்டி விடுவோம்னார். இப்படி எல்லா இடங்களிலும் அவர் சொன்னதும் கைடு அவர்களை குதுப் மினார் கூட்டிச் சென்றார். பயணிகள் கேட்கும் முன் கைடு சொன்னார், "நேற்று நான் வந்தபோது இது இங்கே இல்லையே"


நண்பர்கள் கூட்டத்தில் சினிமா பற்றி கேள்விகள் கேட்டார்கள். அப்பா/மகன், அக்கா/தங்கை எல்லாம் நடித்தார்கள். ஒரு அண்ணன்/தங்கை சொல்லுங்கள் என்று ஒரு கேள்வி. ஒருவன் உடனே எம்.என்.நம்பியார், எம்.என்.ராஜம் என்றான். இனிஷியல் ஒண்ணா இருக்கே அப்படிங்கிறான்.


தினம் தங்கள் வாழ்க்கையிலேயே அசத்தும் அசத்தல் மன்னர்கள் இருக்கிறார்கள்.


கலைஞர் முதன்முறை முதலமைச்சர் ஆன சமயம். சட்டசபை உறுப்பினர், திரு,கருத்திருமன், அவரிடம், "நீங்கள் நாடார்களுக்கு உதவி செய்ய மாட்டீர்கள்னு சொல்றாங்களே அப்படியா?" என்று கேட்டார்.

கலைஞரின் பதில், "என்னை நாடினோர்க்கு நான் உதவுவேன்னுதான் சொன்னேன். நாடார்க்கு உதவ மாட்டேன் என்று அர்த்தமில்லை."

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றபோது, என்ன சாப்பிடுகிறீர்கள், டீயா காபியா என்று கேட்டார்களாம். "டீயே மதுரம்" என்றாராம் கலைவாணர்.

"இன்னிக்கு இட்லி இல்லை. உங்களுக்கு பூரி படிக்குமா"ன்னு நண்பர் கேட்டதும், "ஜகந்நாதனுக்கு பூரி பிடிக்காமல் போகுமா?" என்று சொன்னாராம் கி.வா,ஜ.

வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு என்று கலைவாணர் பாடினார்.

மனிதன் மட்டும் ஏன் சிரிக்கிறான்? அவன் தான் அதிகம் துயரடைகிறான்.அதனால் அவன் சிரிப்பை கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று என்று யாரோ சொன்னதைப் படித்திருக்கிறேன்.

நன்றாக சிரித்துக் கொண்டிருங்கள். நன்றி, நன்றி, நன்றி.









Sunday, October 11, 2009

கார் - ஷோ ரூமில் இல்லை, ஷோ கேஸில்



அக்டோபர் போட்டோ போட்டிக்கு.

Monday, October 5, 2009

அ முதல் ஃ வரை : ஏ டு இஸட் வரை

இந்த வரிசைகளில் அறம், ஆறுவ்து......என்றும் அம்மா, ஆசை என்ற வரிசைகளில் எழுதி விட்டார்கள். நாம் என்ன் எழுதலாம் என நினைத்த போது, அ,ஆ வரிசையில் சினிமாவும், ஏ டு இஸட் வரிசையில் நமக்குப் பிடித்த கார் பெயர்களும்தான் ஈஸின்னு தோன்றியது. கதை, நடிப்பு, பாட்டு என்று என்னால் மறக்க முடியாத படங்கள் நினைவு வந்தன.
அ : அடுத்த வீட்டுப் பெண்
நல்ல காமெடி. அஞ்சலிதேவி, தங்கவேலு நடித்தது.
"வனிதாமணியே...நீ வாராய் அமுத கனியே..
ஹம்ஸத்வனி ராகம்னு நினைக்கிறேன்.
ஆ : ஆடிப்பெருக்கு.
"தனிமையிலே இனிமை காண முடியுமா..." நல்ல பாட்டு. இந்த காட்சியில் சரோஜாதேவி அழகாக நடித்திருப்பார்.
இ : இல்லறஜோதி.
மாடர்ன் தியேட்டர்ஸ் படம். கண்ணதாசன் வசனம். அனார்கலி நாடகத்தில் சிவாஜிதான் சலீம். ஓ.ஏ.கே தேவர் (ராஜாமான்சிங்) அனார்கலியிடம், "நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்,
நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்" என்று சொல்வார்.
"உனக்கும் எனக்கும் உறவு காட்டி உலகம் சொன்னது கதையா" -
ஜிக்கி பாடிய நல்ல பாட்டு.
ஈ : ஈரம்
ஒற்றை எழுத்தில் தீ, நீ என்று படங்கள் உண்டு. ஈ வந்ததா?
ஊருக்கு வந்ததும் நான் பார்க்க நினைக்கும் படங்களில் ஒன்று.
உ : உத்தமபுத்திரன்
பி.யு.சின்னப்பா படமும் உண்டு. நான் சொல்வது சிவாஜி கணேசன் படம். "யாரடி நீ மோஹினி கூரடி என் கண்மணி.." பாட்டுக்கு ஹெலனுடன் அழகாக ஆடுவார். பியுசி படிக்கும்போது க்ளாஸ் கட் பண்ணி மேட்னி பார்த்தேன். அண்ணனுக்கு தெரிஞ்சு என்னை திட்டினார். நல்ல வேளை அப்பாவிடம் சொல்லவில்லை.
ஊ : ஊர்க்காவலன்
ரஜினியின் இன்னொரு ஃபார்முலா படம்
எ : எதிர்பாராதது
ஸ்ரீதர் வசனம். சிவாஜி, பத்மினி, நாகையா நடித்தது.
"சிற்பி செதுக்காத பொற்சிலையே."
ஜிக்கி பாடும் இப்பாட்டை ஏ.எம்.ராஜா சோகமாக பாடுவார்
ஏ : ஏழை படும் பாடு
Les Miserable என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல். நாகையா நடித்தது.
Javert என்ற் போலீஸ்காரராக சீதாராமன் நடித்ததால் ஜாவர் சீதாராமன் ஆனார்.(பட்டணத்தில் பூதமாக வருவாரே)
ஐ : ஐந்து லட்சம்
ஐ என்றதும் நினைவு வந்த படம்
ஒ : ஓளி விளக்கு
எம்.ஜி.ஆர் நடித்த ஜெமினி படம். அவர் ஆஸ்பத்திரியில் இருந்த சமயம்.
"ஆண்டவனே உன் காலடியை நான் கண்ணீரில் நீராட்டினேன் - இந்த ஓருயிரை வாழவைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன் முருகையா
என்று ஒரு பாட்டு.
ஓ : ஓர் இரவு
"துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா"
ஒள : ஒளவையார்
றம்....றுவது என வரிசையில் பாடியவர். அந்த நாளில் நடிக்க ஒரு லட்சம் வாங்கிய நடிகை கே.பி.சுந்தராம்பாள். சின்ன ஒளவையாக பேபி சச்சு, குமரியாக குசலகுமாரி தோன்றினார்கள்.
எங்க அப்பாவுடன் நாங்கள் சேர்ந்து பார்த்த ஒரே படம்.
ஆயுத எழுத்து
இது அக்கன்னாவுக்காக.
மணிரத்னம் படம்


A to Z கார்கள் பார்க்கலாமா?

Austin A 40.
சித்தப்பா காரில்தான் நான் ஓட்டப் பழகியது.


Buick. Lacrosse தான் டாப் ஆஃ தி லைன். கனடாவில் ஃப்ரென்ச் பேசும் இடங்களில் மட்டும் அது Allure எனப்படுகிறது. ஃப்ரென்சில் வேறு அர்த்தமாம்.
Chevrolet.
எங்க வீட்டு கார். அப்பா 1947ல் வாங்கினார். பழைய மாடல் கார்கள் எதையுமே அமெரிக்க சாலையில் காணமுடியவில்லை. இது கூகிளில் எனக்கு கிடைத்த படம். எங்க காரைப் போலவே ரெஸ்டோர் ப்ண்ண வேண்டிய நிலையில்தான் இங்கேயும் இருக்கின்றன


இது யார் தெரிகிறதா?

Citroen

Dodge
Edsel-
ஒரு போர்ட் கார்.
ஹென்றி ஃபோர்டின் மகன் பேராம் Edsel கொஞ்ச ஆண்டுகள் தான் வந்தது.
Fiat. அப்பா எனக்கு வாங்கித் தந்தது பியட் 1100.
Grand Prix. போனியாக்(Pontiac) காரின் ஒரு மாடல்.
Hillman அந்நாளில் இந்தியாவில் நிறைய கார்கள் வந்தன.
Imperial . க்ரைஸ்லரின் டாப் கார்
Jaguar யு கே யில் தயாராகும் ஸ்போர்ட் கார்.
Kaiser அமெரிக்க கார். இப்போ தயாரிப்பில் இல்லை
Lincoln Continental

ப்ரெஸிடென்ட் கென்னடி இந்த திறந்த காரில் செல்லும் போது தான் சுடப் பட்டார்
Morris Minor 50களில் இந்தியாவில் வந்தது.
Nova செவர்லேயின் 4 சிலிண்டர் கொண்ட சின்ன கார். நோவா என்றால் ஸ்பானிஷ் மொழியில் Won't go என்று அர்த்தமாம். பின்னாளில் வரவில்லை. இப்போ சின்ன கார்கள் செய்ய மூன்று கம்பெனிகளும் நினைக்கின்றன.
Nissan அமெரிக்காவில் 3 வது இடத்தில் இருக்கிறது
Odyssey ஹான்டாவின் வேன். மகள் எனக்கு டைரக்ஷன் சொல்ல நான் அமெரிக்க சாலைகளில் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்
Opel ஜெனரல் மோட்டார்ஸின் ஜெர்மன் கார்
Plymouth இது ஒரு ராக் பெயராம்.
50களில் இந்தியாவில் ப்ரீமியர் ஆட்டொமொபைல்ஸ் தயாரித்தது.
Quest நிஸானின் ஒரு மாடல். நம்முரில் Qualis (டொயோடா) இருக்கிறதே

Rolls Royce







சார்ல்ஸ் ரோல்ஸ் -ம் ஹென்றி ராய்ஸ் சேர்ந்து தயாரித்தது.
Studebaker
Thunderbird
Vauxhall ஜெனரல் மோட்டார்ஸின் பிரிட்டிஷ் கார்.
Willys ஜீப்
Xylo மஹிந்திரா இன்னோவா வுக்கு போட்டியாக தயாரிக்கும் கார்
Yaris டொயொடாவின் இன்னொரு மாடல்
Zodiac , Zephyr
Zen. மாருதி கார்
நிறைய கார் படங்கள் பதிய வேண்டும் என்று நினைத்தேன். போதுமா









Friday, October 2, 2009

அக்டோபர் 2 அன்று சாஸ்திரியை மறக்கலாமோ?

1951 - 56 ல் ரயில்வே மினிஸ்டர் ஆக இருந்தார். 1956ல் மஹபூப்நகரில் நடந்த ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததால் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார்.

02/10/1904 - 10/01/1966

பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஒப்புக்கொள்ளாததால் தொடர்ந்து பதவியில் இருந்தார். அதன் பின் 3 மாதம் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறந்ததும் பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தந்தார். அதை அங்கீகரித்த பிரதமர், பார்லிமெண்டில் இதை சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு, இது ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று சொன்னாராம்.
1964 ல் நேரு மறைவுக்குப் பின், அன்று காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜ், லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கினார்.

2016 ஒலிம்பிக் அமெரிக்காவுக்கு கிடைச்சுட்டா

சிகாகோ மேயர் டாலி, மிஷேல் ஒபாமா, ஓப்ரா மூவரும் கோபன் ஹாகனில் ஒலிம்பிக் கமிட்டி மீட்டிங் போது என்ன பேசியிருப்பார்கள்.

மேயர் டாலி : நமக்கு கிடைச்சா உங்க காட்டுல மழை தான்



மிஷேல் ஒபாமா : நாங்கல்லாம் ஃபர்ஸ்ட் லேடிதான். ஒலிம்பிக் அமெரிக்காவுக்கு கிடைச்சுட்டா நீங்கதான் முதல் லேடி ப்ரெஸிடென்ட்.
ஓப்ரா : எத்தனை நாள் டிவியில் டாக் ஷோ நடத்துரது. நீங்க சொன்னது பலிச்சா இனி செனட்லதான் டாக் ஷோ.

Thursday, October 1, 2009

"தங்கமோ வெள்ளியோ செல்வம் இல்லை. ஆரோக்கியமே செல்வம்".

சொன்னது யார்?


"In prayer it is better
to have a heart without words
than words without a heart".

"It is health that is real wealth
and not pieces of gold and silver."

"It is the quality of our work
which will please God and not the quantity"
.

"Happiness is when what you think,
what you say, and what you do are in harmony."

"I believe in equality for everyone,
except reporters and photographers".
"You must be the change
you wish to see in the world".

"Whatever you do may seem insignificant to you,
but it is most important that you do it".

"Prayer is a confession of one's own
unworthiness and weakness".

"The good man is the friend of all living things".

"The weak can never forgive.
Forgiveness is the attribute of the strong".

"There is a higher court than courts of justice
and that is the court of conscience.
It supercedes all other courts"

சொன்னவர்.