Thursday, June 30, 2011

மதி தா என்று நான் கேட்ட ம.தி.தா பள்ளிக்கு 150 வயது


திருநெல்வேலி ஜங்ஷனில் அமைந்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி உயர்நிலைப் பள்ளி(ம.தி.தா இந்து......)யின் 150வது ஆண்டுவிழாவின் முதல் நிகழ்ச்சி நன்கொடையாளர் தினம்.






அந்நாளில் ரூ. 1,00,000 வழங்கிய வள்ளல்களை நினைவு கூறும் வகையில் பள்ளியின் கல்விச் சங்கம் இன்று 30/06/2011 கொண்டாடியது.

நெல்லை மாநகராட்சி மேயர் திரு,ஏ.எல்.சுப்பிரமணியன் எல்லோரையும் வரவேற்றுப் பேசினார். கல்விச் சங்க்த்தின் தலைவர் திரு.எஸ்.மீனாட்சிசுந்தரம் தலைமை உரையில் திருநெல்வேலியில் ம.தி.தா, புனித சேவியர், புனித யோவான் பள்ளிகள்தான் அந்நாளில் பிரபலம். அதில் ம.தி.தா முதலில் தோன்றியது என்றார்.
கல்விச் சங்கத்தின் செயலாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிய திரு.அம்மையப்ப முதலியாரின் திரு உருவப் படத்தை கல்விச் சங்கத்தின் நன்கொடையாளர் வழிவழி உறுப்பினர் திரு.T.சந்தீஷ் திறந்து வைத்தார்.



சிறப்பு விருந்தினர் திருமதி உஷாராமன் - முதல்வர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சங்கர்நகர்)தன் உரையில் மகாகவி பாரதி, வ.உ.சி, போன்ற கவியும் சுதந்திரப் போராட்ட வீரரும் பயின்ற பள்ளியின் ஆண்டுவிழாவில் தம்மை பேச அழைத்ததை பெருமையாக் கருதுவதாகக் கூறி மாணவ மாணவியருக்கு அந்த தலைவர்கள் போல வாழ வேன்டும் என்று அறிவுரை கூறினார்.

கல்விச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் திரு.தளவாய்.தி.ராமசாமி நன்றி கூறினார். வெள்ளி (01/07), சனி(02/07) இருநாளும் முனைவர்.கு.ஞானசம்பந்தன் நடுவராக பட்டிமன்றம் - சின்னதிரையும் வெள்ளித்திரையும் மக்களை பண்படுத்துகிறதா? பாழ் படுத்துகிறதா? -என்ற தலைப்பில் பட்டிமன்றம் உட்பட சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பள்ளியின் பழைய மாணவனாக நானும் கலந்து கொண்டு நினைவுகளில் மூழ்கி எழுந்து வந்தேன். நினைவுகள் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்

Wednesday, May 25, 2011

திருநெல்வேலியில் பதிவர் சந்திப்பு

பதிவர் சந்திப்பு-அழைப்பு‏

அன்பு பதிவுலக சகோதர சகோதரிகளே!

வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.

இடம்: மிதிலா ஹால்,A/C.
ஹோட்டல் ஜானகிராம், மதுரை ரோடு,திருநெல்வேலி சந்திப்பு.

நாள்: 17.06.2011 - நேரம்: காலை 10.00 மணி

10.06.2011குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை செய்து விடலாம்.

எனது unavuulagam@gmail.com mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.என் செல் எண் 9442201331.ஜூன் பத்தாம் தேதிக்குள் விருப்பம் தெரிவித்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்ய உதவிடும்.

அவரவர் வலைப்பூவில், அழைப்பிதழை மலர செய்யுங்கள்.

பி.கு: ஆன் லைனில் நிகழ்ச்சியினை பதிவுலகில் கண்டு களிக்க, சகோதரர் நிரூபன் ஏற்பாடு செய்து வருகிறார்.


மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்.
உணவுஉலகம்
FOOD SAFETY

நெல்லை பதிவர்கள் எல்லோரும் வந்து கருத்து பரிமாற்றம் செய்ய நல்ல சந்தர்ப்பம். அமைப்பாளர்கள் சார்பில் நானும் வரவேற்கிறேன்.
சகாதேவன்

Sunday, April 10, 2011

ஹஸாரே -இந்த பேரை முன்னே கேட்ட மாதிரி இருக்கே

யோசித்துப் பார்த்தால் - முந்நாள் கேப்டன் விஜய் ஹஸாரே; வினு மன்காட்; நாரி கண்ட்ராக்டர் என்று கிரிக்கெட்டர்கள் பெயர் எல்லாம் ஞாபகம் வந்தது. அப்போ எல்லாம் டெஸ்ட் மாட்ச் தான். ஒன் டே மாட்ச் இல்லை. ட்வென்டி/ட்வென்டி வரலை. டிவி கிடையாது. ரேடியோவில் தான் கிரிக்கெட் கமென்டரி மக்கள் கேட்பார்கள். மறுநாள் பேப்பரில் பார்த்தார்கள்.

இன்று போல் அவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கவில்லை. பரிசு மழையும் பெய்யவில்லை. ஒருவேளை அந்த ஹஸாரேதான் தங்களுக்கும் ஹன்டே வெர்னா கார்கள்; பாரத் ரத்னா விருதுகளும் வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறாரோ என்று நினைத்தேன்.

மகாத்மா காந்தி போல அன்னா ஹஸாரே அவர்களின் அஹிம்சை போராட்டம் எவ்வளவு உயர்ந்தது. ஊழல் இல்லாத அரசு நாடு முழுதும் அமைய ஜன் லோக்பால் அமைப்பு முழு வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திப்போம்

Sunday, April 3, 2011

சத்யராஜின் அடுத்த வேஷம் என்ன?

மும்தாஜ் :- ஜெஹாம்பனா .பாண்டிய மன்னனைத் தொடர்ந்து பல்லவனும் சேரனும் தங்கள் நாட்டில் தொடங்கி விட்டார்கள். நாம் என்ன அவர்களுக்கு சளைத்தவர்களா? நீங்களும் உடனே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

ஷாஜஹான்:- என்ன பேகம் சொல்கிறாய். எந்த நாட்டின் மீது படை எடுக்க வேண்டும்? சொல்.

மும்தாஜ்:- படை இல்லை ஜெஹாம்பனா. உடை. எனக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் போல பட்டு சேலை உடுத்த வேண்டும் சுடிதார் அணிய வேண்டும் என்று ஆசை. ஔரங்கசீப்க்கும் விதம் விதமான பேண்ட் ஜீன்ஸ் எல்லாம் வேண்டுமாம்.

ஷாஜஹான்:- சரி நாம் எந்த கடைக்கு போகணும்?

மும்தாஜ்:- உங்களுக்கு ராஜாங்க வேலையே நாள் முழுதும் சரியாகி விடுகிறது. பேப்பர் படிப்பதில்லை. டிவி பார்ப்பதில்லை. உங்களுக்கு ஜி.கே ஸீரோதான்.

ஷாஜஹான்:- மந்திரியாரே ராணி என்ன சொல்கிறார்? உங்களுக்கு புரிகிறதா?

மும்தாஜ்:- நானே சொல்கிறேன் ஜெஹாம்பனா. நீங்கள் எனக்கு தாஜ் மஹால் ஒன்றும் கட்ட வேண்டாம். நம் நாட்டு மக்களுக்கு அழகான ஜவுளிகளின் ஆலயம் கட்டுங்கள். புரியலையா?போத்தீஸ்.

ஷாஜஹான்:- ஓ அதுவா? நானும் கேள்விப்பட்டேன். மந்திரியாரே உடனே தூதர்களை தமிழ்நாடு அனுப்பி போத்தீஸை அழைத்து வரச் சொல்லுங்கள்.

புனேயில் சிவாஜி/ ஹைதராபாத் நிஜாம்/ மைசூர் மகராஜா அரண்மனைகளில் என்ன நடக்கும் என்று சொல்லுங்களேன்.

Friday, March 11, 2011

பெயர் காரணம்

என் பெயருக்கு என்ன காரணம் தெரியாது. அப்பா அம்மா இட்ட பெயர் - நான் வடிவேல் முருகன் தான். வெடிவால் என்று என் தமிழாசிரியர் அழைத்த பெயர். காரணம் என் முதல் பதிவிலேயே சொன்னேன். தொடர் பதிவில் எழுதும் அளவு ஏதுமில்லை.

சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் இருவருக்கும் அந்தப் பெயர் வந்த காரணம் எல்லோருக்கும் தெரியும். அதுபோல வெண்ணிற ஆடை மூர்த்தி வெண்னிற ஆடை நிர்மலா பெயர் காரணமும் தெரியும்.
இவர்கள் பெயரின் காரணம் என்ன சொல்லுங்களேன்.

காத்தாடி ராமமூர்த்தி

கல்லாப்பெட்டி சிங்காரம்

கள்ளபார்ட் நடராஜன்

ஒருவிரல் கிருஷ்ணாராவ்

நிழல்கள் ரவி

ஜெயம் ரவி

ஜாவர் சீதாராமன்

காக்கா ராதாகிருஷ்ணன்

க்ரேஸி மோகன்

டெல்லி கணேஷ்

டெல்லி குமார்

Wednesday, February 16, 2011

மெய் மறந்தேன் ராஜா

வினாடிகள் மட்டும் ஓடும் டிவி விளம்பரங்கள் சில நம்மை மெய் மறக்க வைக்கின்றன.
ஜுவல்லரி விளம்பரத்தில் அந்த பெண் கோவிலில் பாடிக்கொண்டிருக்கிறாள். அழகாக கம்பீரமாக நடந்து வரும் இளையராஜா -மெய் மறந்தேன் கண்ணா- என்று முடிப்பார். தன்னை வணங்கும் அப்பெண்ணை ஆசீர்வதித்து ஆட்டோகிராப் போடுகிறார். நிஜமாக நான் மெய் மறந்தேன். இந்த வார குமுதத்தில் டைரக்டர் கிருஷ்ணா ராஜா தன்னிடம் எனக்கு எதற்கு மேக்கப். கறுப்பு போதாதா என்றும் கேமரா கோணங்கள் பற்றியும் கேட்டாராம். பாட்டும் ராஜாதான் எழுதினாராம். ஒளிப்பதிவு P.C.Sriram.

.

வீட்டு மொட்டை மாடியில் ஆவலுடன் காத்திருக்கும் சிறுமி கார் வருவதைப் பார்த்து இறங்கி ஓடி வருகிறாள். புதிய நானோவைப் பார்த்ததும் அவள் பிரமிப்பதும் தங்கள் காரை எல்லோரும் பார்க்கிறார்களே என்று தன் கண்ணில் இருந்து கண்மை எடுத்து காருக்கு திருஷ்டிப் பொட்டு வைக்கிறாள். அருமையான நடிப்பு.
அப்போ எனக்கு எட்டு வயது. எங்கள் வீட்டுக்கு புது கார் இன்று டிவிஎஸ்ஸிலிருந்து வரும் என்று அப்பா சொன்னார். அந்த கார் வரும் வரை நான் வாசலில் காத்திருந்த நினைவுதான் வந்தது.

Friday, January 28, 2011

ஹே ராம்




ஜவஹர்லால் நேரு பிர்லா ஹவுஸ் வெளியே கூடியிருக்கும் மக்களுக்கு மஹாத்மா காந்தி மறைந்து விட்டார் என்று என்பதை அறிவிக்கிறார். கார்டியர் ப்ரெஸ்ஸன் என்ற புகைப்படக்காரர் இரவில் ஃப்ளாஷ் இல்லாமல் விளக்குகளின் வெளிச்சத்திலேயே எடுத்த படம்.