Saturday, September 19, 2009

புத்தகமா? அப்படினா என்னப்பா?

2090-ம் ஆண்டில் குழந்தைகள் இப்படி கேட்பார்களோ?


ஏட்டுச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள். மரத்தை கூழாக்கி காகிதம் செய்ய அறிந்ததும், இறகு முனையை சீவி, எழுதுகோல் செய்து மை தொட்டு எழுதினார்கள். கையெழுத்து பிரதிகள் எல்லோரையும் சென்றடைய காலதாமதமானது. அச்சு எந்திரம் கண்டு பிடிக்கப்பட்டதும், அச்சுத் தொழில் பெருகி புத்தகம் ஆனதும் , விரைவில் பல பிரதிகள் விற்பனையாளர்களையும், நூலகங்களையும் மக்களையும் அடைந்தது. முதன்முதலாக ப்ரிண்ட் ஆனது பைபிள் தான். படிக்கும் ஆர்வமும் தூண்டிவிடப்பட்டது. நிறைய எழுத்தாளர்கள் உருவானார்கள். கதை, கவிதை நாவல் என்று பல வடிவங்களில் புத்தகங்கள் வந்தன. செய்திப் பத்திரிகைகள், மாத/வார பத்திரிகை எல்லா நாட்டிலும் அச்சாகி விற்பனை ஆகிறது. படிப்பது ஒரு பொழுது போக்காக அமைந்தது. புத்தகங்கள் வாங்கி படித்தோம், நூலகம் சென்று படித்தோம்.

புத்தகம் படிக்க இப்போ எப்படியெல்லாம் தூண்டுகிறார்கள் பாருங்கள். அமேஸான் நிறுவனம் இன்று புத்தகங்கள், செய்தித்தாள்கள் எல்லாவற்ரையும் Kindle (தூண்டுதல் என்றே சொல்வோமா) மூலம் விற்பனை செய்கிறது. $399 க்கு இதை வாங்கி, அதில் நாம் விரும்பும் புத்தகத்தை $9.99 (பேட்டா விலை) டெளண்லோட் செய்து கொள்ளலாம்



அதன் சைஸை பாருங்களேன்






பென்சில் கனம்தான்


தினசரிகளுக்கு அதற்குரிய சந்தா கட்டினால், தினம் காலையில் நம்பர் ஒன் பேப்பர் இன்னும் வரலையே என்று வாசலைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். தூண்டுதலில் 300 புக் பதிவு செய்து கொள்ளலம். யார் வீட்டிலும் இனி புக் ஷெல்ஃப் இருக்காது.


பயணங்களில் நிறைய புக் எடுத்துச் செல்லாமல் ஒரு தூண்டுதல் கொண்டு போனால் போதும். ஷிப் ரெக் ஆகி ஆளில்லாத தீவில் நீ இருக்க நேர்ந்தால் உனக்கென்ன வேண்டும் எனக் கேட்டால், ஒரு தூண்டுதல் போதும் என்பான் புத்தகப்புழு.

கனடாவில் ஒரு புக் ஷாப் முன் உள்ள படிப்பாளி சிலை

டிவி வந்ததும் படிப்பது குறைந்தது. கம்ப்யூட்டர், இன்டெர்நெட் எல்லாம் வந்ததும் செய்திகள் விரைவில் உலகம் முழுக்க பரவ முடிகிறது.

9/11 நிகழ்ச்சியை முதன்முதலில் உலகறிந்தது இன்டெர்நெட் மூலம்தான். வலைப்பதிவில் இன்று நாம் தினம் எழுதுகிறோம். ஆயிரக்கணக்கானவர்கள் அதைப் ப்டிக்க முடிகிறது. இதை நாம் பத்திரிகைக்கு அனுப்பினால் அப்படியே அச்சிட மாட்டார்கள். ஆசிரியர் குழு தேர்வு செய்து அதை திருத்தி, எடிட் செய்து, சுருக்கிதான் அச்சிடுவார்கள்.

உலக புத்தக தினம், புத்தகக் கண்காட்சி எல்லாம் நடத்துகிறோம். இப்போ உலகெங்கும் விற்பனை குறைந்து வருவதாக தெரிகிறது. நம்முடைய பொறுப்பு எவ்வளவு கூடுமென்று பாருங்கள்.

டெக்னாலஜி நம்மை அன்ஃபிட் ஆக்கி விட்டதா என்று டிவி விளம்பரத்தில் ஒரு பெண் கேட்பாரே. எப்படியோ நம்மை சோம்பேறி ஆக்கி விடும் போலிருக்கிறது. இனி பாடப்புத்தகங்கள் கூட வராதோ? பள்ளிக்கு மாணவர்கள் லாப்டாப் கொண்டு போவார்கள். நோட்புக் கிடையாது. பாடப்புத்தகமெல்லாம் தூண்டுதலில் வந்து விடும். கீபோர்டிலேயே எழுதுவார்கள். இப்போ எல்லாம் நாம் பேப்பரில் எழுதுவதே குறைந்துவிட்டது.

டெக்னாலஜி நம் கையெழுத்தை மட்டுமில்லை, நம் தலையெழுத்தையே மாற்றி விடும்.

Tuesday, September 1, 2009

ஜே ஜே எங்களுக்கு ஜே ஜே

டோனிடவுன், அர்கன்ஸாஸ் ஸ்டேட்டில் வசிக்கும் ஜிம் பாப்(44), மிஷெல் டுகர்(42) தம்பதிக்கு பத்தொன்பதாவது குழந்தை பிறக்கப் போகிறதாம். நாம் இருவர்-நமக்கு ஒருவர் எல்லாம் எங்களுக்கு இல்லை. முதல் பையனுக்கு வயது 21, சின்னவளுக்கு 8 மாதம். இன்னும் 12 வாரத்தில் எங்கள் கடைக்குட்டி பிறந்திடும், என்று டிவி பேட்டியில் சொல்கிறார்கள்


மூத்த பிள்ளை ஜோஷ், சீக்கிரம் அவர்களை தாத்தா, பாட்டி ஆக்கப் போகிறாராம். எல்லோருடைய பெயரும் ஜே -ல் தான்.



ஜோஷ் 21 : ஜானா, ஜான் டேவிட் 19(twins)


ஜில் 18 : ஜெஸ்ஸா 16 : ஜிங்கர் 15 ஜோஸப் 14


ஜோஸையா 13 : ஜாய் அன்னா 11


ஜெடிடியா, ஜெரெமையா 10 (twins)


ஜேஸன் 9 : ஜேம்ஸ் 8 : ஜஸ்டின் 6


ஜாக்ஸன் 5 : ஜொஹன்னா 3


ஜெனிஃபர் 2 : ஜோர்டன் கிரேஸ் 8 மாதம்


கடைக்குட்டிக்கும் ஜே யில் பெயர் யோசிக்கிறார்கள்.

பிள்ளைகள் ஜே யில் ஆண்/பெண் பேர்கள் லிஸ்ட் எடுத்து ரெடியாக இருக்கிறார்கள்.


ஜே யில் பெயர்களை தங்களுக்கு PEOPLE.com மூலம் அனுப்புமாறு ஜிம் பாப் தம்பதி கேட்கிறார்கள்.
நானும் நம்ம ஊர் பேராக யோசித்தேன்.


ஆண்- ஜம்பு, ஜெகன்


பெண்- ஜானகி, ஜாஸ்மின்
நல்லாயிருக்கா? நீங்களும் எழுதுங்களேன்







தம்பதிக்கு ஜே ஜே.


வாழ்த்துக்கள்


நன்றி - msn.com , people.com



Saturday, August 29, 2009

வீட்டிலே இருக்கும்போது லாண்ட்லைனில் பேசுறது காமன் சென்ஸ்

டிவி விளம்பரங்கள் பார்க்கிறோம். அதில் தினம் கேட்கும் வார்த்தைகள் எங்காவது கேட்டால்...........


நேற்று பகல் ஹோட்ட்லில் சாப்பிட்டு வெளியே வந்தோம். சர்வர் பின்னால் ஓடி வந்து, சார் பையை மறந்துட்டீங்களே. நீங்கள் எதிரே ரிஜிஸ்ட்ரார் ஆபீசிலிருந்து சாப்பிட வந்ததை பார்த்தேன். இந்தாங்க, உங்க பத்திரம், பத்திரமா பார்த்துக்கங்க, என்றான்

நண்பன் லட்டு தந்தான். ஓ, திருப்பதி போனியா? ரொம்ப கூட்டமோ, செலவு என்ன ஆச்சுனு கேட்டேன். சே என்னை மொட்டை அடிச்சுட்டான்யான்னு சொல்றான்.

டப்பாவில் இருந்த கடைசி சாக்லெட்டை வாயில் போடுற நேரத்தில் அவள் வந்துட்டா.எந்த ஸ்கூல்? டீச்சர் சொல்லிக்கொடுக்கலே, ஷேரிங் அப்படின்னா. ஒண்ணுதான் இருக்கு எப்படி பாதியாக்கனு கேட்டா,
சும்மா கடிச்சுடுங்கங்கிறா.

வீட்டில் ஒரு நாள் என் செல்ஃபோனை எங்கே என்று தேடினேன். அவசரமா பேசணும் யாராவது பார்த்தீங்களா என்றேன். வீட்டிலே இருக்கும்போது லாண்ட்லைனில் பேசுறது காமன் சென்ஸ் அப்படினு சொல்றா என் பேத்தி.

ராமு, சோமு, சீனு மூவரும் வந்தார்கள். சீனு சட்டை எல்லாம் மண்ணா இருந்தது. என்னை பார்த்ததும் நான் விழுந்துட்டேன் என்று சொன்னான். ராமு நீ தள்ளி விட்டாயான்னு கேட்டா சொல்றான் , நா தள்ளல ஸார். சோமு, நீயான்னா, அவனும் நா தள்ளல ஸார்ங்கிறான்

Friday, August 14, 2009

.ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்



பூரி(ஒரிஸா) கடற்கரையில் ஒருவர் பூரிச்சுப் போய் அமைத்த சுதந்திர தின வாழ்த்து.

Monday, August 10, 2009

உங்கள் கம்ப்யூட்டர் ரிப்பேரா? டெக்னிஷியனிடம் தரப் போகிறீர்களா?

லண்டனில் நட்ந்த ஒரு டெஸ்ட். இதைப் படியுங்கள். புதிய நியூஸ்வீக் பத்திரிகையில் இன்று நான் படித்தேன்

Shifty PC repair
How trustworthy are PC repair technicians? Looking for possible ripoffs, British TV's Sky News and PC Pro magazine, created a simple problem in a notebook by loosening a memory chip. Then they took the computer - loaded with fake files and software that could track what techinicians did - to six London repair outlets.

All the shops quickly discovered the dislodged chip, with five of them dishonostly telling the "cusomer" that extensive repairs were necessary. At two of those shops technicians also looked through "vacation photos" the notebook contained (pictures of the customer clad in a bikini). One tried to cover his tracks. The other copied the snapshots to his USB drive. he also tried to log into a faux online bank account planted on the laptop.(He was reported to the police).


The shop that passed the ethics test? Let's hear it for Pix4 in Shepherds Bush. Wrote PC Pro: "The staff promptly discovered the loose chip, popped it back into place, and told us with a smile, there would be no charge." :- Arik Hasseldahl

Friday, August 7, 2009

இதயத்தை எப்படி எல்லாம் கசக்கி பிழியப் போகிறார்களோ

இதயம். புத்தம்புதிய மெகா தொடர். சன் டிவியில் காணத் தவறாதீர்கள்

நான் டாக்டர் சாய் கல்யாணி. தினம் கேட்கும் குழந்தை அழுகைதான் எனக்கு சங்கீதம்.

தாலிக்கொடி மூலம் எனக்கு ஒரு தாய் கிடைப்பாள் என்று நான் நினைக்கலை

ஒரு நல்ல மனைவி கிடைத்தால் அவன் தான் பணக்காரன்.

ஏன் ஆண்களுக்கு மட்டும் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது. அவர்கள் நிறைய ரகசியங்களை நெஞ்சில் பதித்துக் கொள்வதால்

என் மருமகள் மகளாக இருக்கணும். ஏன்னா நான் தாயா இருப்பேன்.

இப்படி பல முன்னூட்டங்களுடன் விரைவில் வர இருக்கிறது,


இதயம்.


புதிய சீரியல். சீதா மற்றும் பலர் நடித்தது.

Wednesday, July 29, 2009

மேடைப் பேச்சிலும் சர்ப்ரைஸ்.

ஒரு மீட்டிங் போயிருந்தேன். நிகழ்ச்சி நிரல் தந்தார்கள். யார் யார் என்ன பேசப் போகிறார்கள் என்று லிஸ்ட் இருந்தது. அதில் மூன்றாவதாக பேசுபவர் என்ன டாபிக்னு போடவில்லை.முதல் இருவரும் தங்களை அழைத்ததும், எல்லோரையும் வணங்கி விட்டு என்ன சொல்லப் போகிறோம் என்று சொல்லி தொடங்கினார்கள்.

மூன்றாமவர் தன் முறை வந்ததும் மேடை ஏறினார். மைக் முன் வந்ததும் அவருடைய செல்போன் சிணுங்கியது. எடுத்து ஹலோ என்றவர்.

...............ராமனா.......நான் நல்லா இருக்கேன், நீஎப்படி இருக்கே....... இங்கே ஒரே வெயில், அங்கே மழை உண்டா..........சரி குற்றாலம் போனியா, சீசன் நல்லா இருக்காமே.......சரி சரி, நான் அப்புறமா பேசறேன், நான் மீட்டிங்கில் இருக்கேன். அடுத்து நான் தான் பேசணும்
என்று மைக் முன் நின்று பேசினால் ஸ்பீக்கரில் கேட்கும் என்றோ, டிவியில் "Walk when you Talk "னு டாக்டர் சொன்னதாலோ மேடையிலேயே அங்குமிங்கும் நடந்து கொண்டு பேசியவர்
...சரி எழுதிக்கிறேன் என்று, தன் சட்டைப் பையில் பேனா இல்லாமல், இறங்கி முன் வரிசையில் அமர்ந்திருந்த என்னிடம் வாங்கி, தன்னுடன் பேசியவரின் போன் நம்பரை எழுதி, ஓகே, நான் கூப்பிடுகிறேன்னு சொல்லி போனை ஆஃப் பண்ணி பாக்கெட்டில் வைத்தார்.

சபையில் இருந்த எல்லோருக்கும் எப்படி இருந்திருக்கும். ஆனால் இது தற்செயலாக நடந்தது இல்லை. விழா ஆர்கனைசரிடம் முன்பே சொல்லியதால் அஜென்டாவில் அவர் டாபிக் போடவில்லை. சரியாக அவர் மேடை ஏறியதும் கடைசி வரிசையில் இருந்த அவர் ஆள் ஒரு மிஸ்ட் கால் கொடுத்தார். எல்லாம் செட் அப் தான்.

மீண்டும் மைக் முன் வந்தவர், எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். இன்று நான் பேச வந்தது செல்போன் Etiquette (சரியான தமிழ் வார்த்தை ஒழுங்கு முறை என்று சொல்லலாமா) பற்றி, என்றார். முதலிலேயே என்ன செய்யக் கூடாதுனு செய்து காண்பித்து விட்டு பின் விவரமாக பேசினார்.

பப்ளிக் ஸ்பீக்கிங் என்று ஒரு புத்தகத்தில் பேச தொடங்குமுன் Startle the Audience என்று இந்த ஐடியா சொல்லியிருந்தது. அதை படித்ததும் உண்டான கற்பனைதான்.
எப்படி இருக்கு?