Thursday, May 1, 2014

"ஆவணி ரோகிணியில் அஷ்டமியிலே.........."



1950களில்   GRUNDIG,  PHILLIPS  ஸ்பூல் டேப் ரிகார்டர்கள் பிரபலமாக தொடங்கியது. டாக்டர் ஆர்.சுப்பிரமணியமும் என் அண்ணன் முத்துவேலும் நெல்லை சங்கீத சபா கச்சேரிகளை ரிகார்ட் செய்து கேட்டு மகிழ்வார்கள். அப்போ எல்லாம் பாடுபவர்களும் அனுமதித்தார்கள். அண்ணனின் நண்பர் கிருஷ்ணனின் கல்யாணத்தில் திருமதி எம்.எல்.வசந்தகுமாரியில் கச்சேரி. அண்ணன் அதை டேப்பில் பதிவு செய்து வந்தார்.

அதில் நான் கேட்டு ரசித்த பாட்டுதான், 
"பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே பள்ளி கொண்டாய் ரெங்கநாதா......". ராஜாதேசிங்கு படத்தில் எம்.எல்.வி பாடியது.   கீர்த்தனை எல்லாம் பாடியதும் துக்கடாவில்தான் தமிழ் பாட்டுகளுடன் சினிமாவில் தாங்கள் பாடிய பாட்டு உட்பட பாடுவார்கள். அன்று இந்த பாட்டை ராகமாலிகையிலேயே பாடினாரோ என்னவோ. நாட்டிய பேரொளி பத்மினி படத்தில் பாடி ஆடுவார்.
அதில் சில  வரிகள்:
"எங்கிருக்கிறான்? ஹரி எங்கிருக்கிறான்.." என்று ஹிரண்யன் கேட்க, "எங்குமிருப்பான். தூணில் இங்குமிருப்பான் என்று மகன் பிரகலாதன் சொல்ல, நரசிம்மமாகவே தோன்றி பத்மினி ஆடுவார் பாருங்கள்.

ஆவணி ரோகிணியில் அஷ்டமியிலே அர்த்தசாம நேரத்திலே அவதரித்தோனே..ஆயர்பாடி மேவிய யசோதை நந்தபாலா..."என்று கிருஷ்ணன் அவதரிக்க, கோபியரும் சேர்ந்துகொள்ள அருமையான நடனம். நடன அமைப்பு யார் என்று நினைவில்லை.

பத்து அவதாரங்களையும் சொல்லும் பாடலின் சந்தங்களை பல ராகங்களில் அமைத்திருப்பார் இசைமேதை ஜி.ராமநாதன். பாட்டைக் கேட்டு என்னென்ன ராகங்கள் என்று யாராவது கமெண்டுங்களேன்.




நாளை ஜி.ஆர். எம்.எல்.வி, பத்மினி மூவரின் இன்னொரு திருவிளையாடல்  பாட்டு பற்றி எழுதுகிறேன்

3 comments:

தி.தமிழ் இளங்கோ said...

மலரும் நினைவுகள்! தொடர்ந்து எழுதுங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பாடல்....

எனக்கு ராகங்கள் எல்லாம் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்ல நானும் காத்திருக்கிறேன்.

நானானி said...

நெல்லை சங்கீத சபா கச்சேரியில் திருமதி எம். எல்.வசந்தகுமாரி அண்ணாச்சி டேப்ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். ஸ்பூல் ஒரு பக்கம் முடிந்ததும் அதை மாத்திப் போடும் வரை காத்திருந்து, 'ரெடியா?' என்று தலை அசைவால் கேட்டு பிறகுதான் பாடவாரம்பித்தார். என்ன ஒரு பெருந்தன்மை !!