Monday, May 18, 2009

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்





ஹெல்சின்கி, அகுரெய்ரி, ரெய்க்ஜாலிக் - இவங்கெல்லாம் யாருன்னு கேட்கிறீர்களா? எல்லாம் ஊர் பேருங்க. உச்சரிப்பு சரியான்னு தெரியலே


சென்ற சனிக்கிழமை, மே 9 அன்று திருவனந்தபுரத்திலிருந்து நானும் தாமரையும் கத்தார் ஏர்வேஸ்ஸில் சிகாகோ புறப்பட்டோம். கத்தாரின் தோஹா விமான நிலையத்தில் ஒரு பெரிய விமானம் மாறி வாஷிங்டனுக்கு நான் -ஸ்டாப் பயணம். டிவி ஸ்கிரீனில் எங்கே பறந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தது. உலக வரை படத்தில் மேலே ஏறி, ரஷ்யா, ஃபின்லாண்ட், ஸ்வீடன், நார்வே, ஐஸ்லண்ட், கனடா எல்லா நாடுகளின் மேலேயும் பறந்து வந்து வாஷிங்டனில் இறங்கினோம். ஸ்கிரீனில் நான் பார்த்த, கேட்டிராத, இப்போ தெரிஞ்சுக்கிட்ட ஊர்கள்தான், HELSINKI (Finland), AKUREYRI, REYKJAVIK (Iceland)

ஒரு நான் -ஸ்டாப் பயணம் ஏன் இவ்வளவு தூரம்? சென்ற முறை நாங்கள் வந்தபோது ஏர் இந்தியா விமானம் ஃப்ராங்க்ஃபர்ட், லண்டன் வழியாக

நியூ யார்க் வந்தது. லண்டனில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டதாக கூட ஞாபகம். கத்தாரில் எண்ணைக் கிணறுகள் நிறைய இருப்பதால் இது அவர்களுக்கு ஒரு பொருட்டில்லையோ? ஆனால் இந்த விமானம் எவ்வளவு மைல்/காலன் (mpg) தரும். ஏன் இப்படி சுற்றி செல்லவேண்டும் என்று எனக்கு ஒரே கவலை.


சிகாகோ வந்ததும் என் பேத்தியின் அட்லஸ் புத்தகத்தை புரட்டிப் பார்த்தபோதுதான், பூகோள வகுப்பில் உலகம் உருண்டை என்று நான் படித்ததும், சன் டிவியில் செய்திக்கு முன் பூமி சுற்றுமே அதெல்லாம் ஞாபகம் வந்தது. இத்தனைக்கும் என்னுடைய க்விஸ் கேள்வி வங்கி யில் ஒரு கேள்வி - "ரஷ்யா எல்லைக்கு மிக அருகாமையில் உள்ள யுஎஸ் ஸ்டேட் எது?"-- சொல்லுங்கள் பார்க்கலாம்.


எப்படி ஒரு குறுகிய நேர்வழியில் உலகைச் சுற்றினோம் என்று புரிஞ்சுக்கிட்டேன்