Saturday, September 26, 2009

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும், வீடும் ஒரு நாள் வண்டியில் ஏறும்

சிகாகோ வந்ததும் பரம சன் டிவி பக்தன் ஆகி விட்டேன். அன்று ஒரு லோகல் சானல் பார்க்கலாம்னு ரிமோட்டை அழுத்தினால் இந்த காட்சிஉடனே டிவி ஸ்க்ரீனையே போட்டோ எடுத்தேன்.முன்னால் செல்லும் வண்டியிலிருந்து திருப்பங்களில் டைரக்ஷன்.வீட்டை நமக்கு பிடித்த இடத்தில் கொண்டு வைத்துக் கொள்ளலாமோ?
Friday, September 25, 2009

"சினந்தென்னை அடித்தாலும் பரிந்தென்னை அணைத்தாலும்......."

இன்று பகல் டிவியில் ஜெமினியின் இரும்புத்திரை படம். இது எத்தனை தடவை பார்த்து விட்டீர்கள். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க என்றாள் தாமரை. முதலில் ஒரு பாட்டு வரும். அதை கேட்டு விட்டு வந்து விடுவேன் என்றேன். நல்லா இருக்கே, யார் பாடியதுனு கேட்டாள்.என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே உமையே , என்னை நீ
என்ன செய்தாலும்...

சின்ன வயது முதல் உனை நம்பினேனே
சினந்தென்னை அடித்தாலும்,
பரிந்தென்னை அணைத்தாலும்
என்ன செய்தாலும்...

முன்வினையால் இன்பதுன்பங்கள் விளைந்தாலும்
மூடமதி கொண்டு உன்னை நோவதென் பேதமை
என்விதியால் இடர் ஆயிரம் சூழினும், எல்லாம்
உன் திருவிளையாடல் என்றெண்ணி நீ
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே


இசை: எஸ்.வி.வெங்கட்ராமன்
பாடியது: ராதா ஜெயலக்ஷ்மி
எழுதியவர்: கொத்தமங்கலம் சுப்பு

சிடி கிடைத்தால் கேட்டுப் பாருங்களேன்

Sunday, September 20, 2009

"அண்ணா ஒரு பைத்தியமா ஆயிருச்சு"

நூற்றாண்டுக்கும் இதற்கும் சம்பந்தமில்லீங்க.
திகம்பர சாமியார்னு எம்.என்.நம்பியார் பல வேஷங்களில் நடித்து 50/51ல் வந்த படம்.

நரசிம்ம பாரதியும் திரொளபதியும் தான் ஜோடின்னு ஞாபகம்.

எத்தனையோ பழைய படங்களை தியேட்டரிலோ டிவியிலோ பார்க்க முடிகிறது. இது மாதிரி சில நல்ல படங்களை ஏன் பார்க்க முடிவதில்லை.
அதிலே ஒரு பாட்டு.

அண்ணா ஒரு பைத்தியமா ஆயிருச்சு
அண்ணி மேலே சொக்கி சொக்கி
ஓ அண்ணா சொக்கி சொக்கி
தூங்காம அண்ணாவையே சுத்தி சுத்தி
ஓடுராளே மக்கு மக்கு
ஓ அண்ணி மக்கு மக்கு.

எங்க வீட்டு ராஜாவை எங்கிருந்தோ
ராணி வந்து இழுத்து வளைச்சுக்கிட்டா பார்த்தியா
இது ரெட்டமாட்டு வண்டியாச்சு பாத்தியா
இனி வேளைக்கு நீ வீடு வந்து சேரணும்
சொந்த வேலையெல்லாம் மூட்டி கட்டி ஆகணும்
நாளுக்கொரு வேட்டி சட்டை மாத்தணும்
நடராஜா போல் நடை நடந்து காட்டணும்
டக்கு டக்கு டக்கு டக்கு
அண்ணா ஒரு பைத்தியமா.....

ஒண்ணோட் ஒண்ணு இங்கே ரெண்டாச்சு -இந்த
ரெண்டோட ஒண்ணு வந்து மூணாகும்
அண்ணியோட நீ தனியா பேசுவே- அப்போ
அந்த பையன் குடுகுடுனு ஓடுவான் -இனி
என்னை நீயும் ஏரெடுத்து பார்ப்பியா- எந்தன்
பாட்டையுமே நீ ரசிச்சு கேப்பியா
டக்கு டக்கு டக்கு டக்கு"
அண்ணா ஒரு பைத்தியமா ........

எங்க பெரிய அண்ணனுக்கு கல்யாணமான புதிது. அப்ப எனக்கு வயசு 12/13. நல்லாவே பாடுவேன். இந்த பாட்டை என்னை பாடச்சொல்லி என் அம்மா ஆசையா கேட்பாள்.
நாலு நாளுக்கு முன் இந்த படத்தைப் பற்றி யாரோ வலையில் நம்பியார் 10 வேஷங்களில் நடித்தது பற்றி எழுதி இருந்தார்கள். அதை க்ளிக் செய்தால் எனக்கு கிடைக்கவே இல்லை. அப்போதான் இந்த பாட்டு நினைவு வந்தது.
முதல் சரணத்தின் வரிகள் மறந்து போச்சு.யாராவது சொல்லுங்களேன் என்று எழுதி இருந்தேன். நான் எதிர்பார்த்தது போல நானானி சொல்லிட்டாங்க. நன்றியுடன் சேர்த்து எழுதி விட்டேன்.