அசத்தல் ரசிகர்களே, எல்லோருக்கும் நெல்லை சகாவின் வணக்கம்.
100 வாரம் தாண்டி நடக்கும் இந்த நிகழ்ச்சியை கடந்த 5 மாதங்களாகத தான் பார்க்கிறேன். ஸ்டாண்ட் அப் காமெடி - மதுரை முத்து போல - பண்ண நினைக்கிறேன். போலாமா? நன்றி.
இன்னிக்கி திங்கள் கிழமை, கொலம்பஸ் தினம். அமெரிக்காவில் பள்ளி விடுமுறை. சனிக்கிழமையன்றே கொலம்பஸ் பற்றி சொல்ல நினைத்த டீச்சர், க்ளாஸில் ஜானியை அழைத்து உலக வரைபடத்தில் வட அமெரிக்கா எங்கே? காட்டு என்றார். கரெக்ட்னு சொல்லி, "க்ளாஸ்! அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்" என கேட்க, எல்லோரும் 'ஜானி' என்றனர்.
இரவு படுக்குமுன், கடவுளே, நேபிள் ஐ இத்தாலியின் தலைநகராக மாற்றிவிடு என்று வேண்டினான் பையன். ஏண்டான்னு அப்பா கேட்டால், நான் டெஸ்டில் அப்படித்தான் எழுதியிருக்கிறேன் என்கிறான்.
பள்ளி விண்ணப்பம் எழுதும் போது தாய் மொழியா? தமிழ்னு எழுதுன்னார் அப்பா. அதுக்கு ஏன் தாய் மொழினு பேருன்னு பையன் கேட்டதும், ஏன்னா வீட்டில உன் அம்மாதானே பேசிக்கிட்டே இருக்கா, அதான்.
ஆபரேஷனுக்கு முன்னாடி, டாக்டர் பேஷண்ட் கிட்டே, உங்களுக்கு லோகல் அனெஸ்தீஸியா கொடுக்கப் போகிறேன் என்று சொல்ல, "டாக்டர், இம்போர்ட்டட் அனெஸ்தீஸியா இருந்தாலும் கொடுங்க எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை"னு சொன்னார் பேஷண்ட்.
டாக்டரிடம், அந்த இளம் நர்ஸ் சொன்னாள், "டாக்டர், நான் இவருக்கு எப்ப பல்ஸ் ரேட் பார்த்தாலும் ஜாஸ்தியா இருக்கு".
'நீ அவர் கண்ணைக் கட்டி விட்டு பல்ஸ் பார்' என்றார் டாக்டர்.
அந்த டாக்டருக்கும் நர்ஸ் மேல ஒரு இதுதான். அவளுக்கு ஒரு லவ் லெட்டர் எழுதினார். எப்படி? "ஐ லவ் யு சிஸ்டர்.........."
லாயர்கள் பற்றியும் நிறைய ஜோக்ஸ் உண்டு. வீட்டு வாசலில் ஒரு போர்டு. எங்கே ஆசை இருக்கிறதோ அங்கே வழி உண்டு. எங்கே வழியோ அங்கே சட்டம் உண்டு. எங்கே சட்டம் உண்டோ அங்கே ஓட்டை உண்டு. எங்கே ஓட்டை உண்டோ அங்கே லாயர் உண்டு. வாங்க.
அபியும் நானும் படத்தில் சர்தார்ஜி எப்படி உழைக்கிறார்கள், அவர்கள் பிச்சை எடுப்பதே இல்லை என்று தெரிஞ்சுக்கிட்டேன். அதனால் சர்தார்ஜி ஜோக் இனி சொல்ல மாட்டேன்.
வேலைக்காக இன்டர்வியூ போனான் நம்மாளு. பேட்டி எடுப்பவர் அவனிடம், ஆபீஸில் சுத்தம்தான் ரொம்ப முக்கியம். நீ வரும்போது ஃப்ளோர்மேட்டில் காலை துடைத்து விட்டு தானே வந்தாய் என்று கேட்டார். அவன் நன்றாக துடைத்து தான் வந்தேன்னதும், அவர், எனக்கு பொய் சொன்னால் பிடிக்காது. வாசலில் ஃப்ளோர்மேட்டே இல்லை என்றார்.
வீட்டிலே ஒரு நாள் சுப்பாண்டி மாதிரி ஒரு வேலையாளிடம், யாராவது வந்தால், நீங்க
யாருன்னு கேட்டு, பணம் கேட்டு வந்தால் நான் ஊரில் இல்லைனு சொல்லிடுன்னார். கொஞ்ச நேரத்தில் ஒருவர் வந்து பெல் அடிக்கவும் சுப்பாண்டி கதவை திறந்து யார் நீங்க? அவரை எதுக்காக பார்க்கணும்?னு கேட்டான்.
அவர், ஒரு பில் இருக்குனு சொல்லவும், சுப்பாண்டி "அவர் நேற்று மாலையே ஊருக்கு போயிட்டார்"னான். வந்தவர், அந்த பில்லுக்கு பணம் தரத்தான் வந்தேன். நீ சொல்லிடு, அப்புறம் வரேன்னு கிளம்பினார். "ஸார், ஸார், அவர் இன்று காலையே வந்து விட்டார், இருங்க கூப்பிடுறேன்"னான் சுப்பாண்டி.
புதிதாக வேலையில் சேர்ந்தவன் மறுநாளே லேட்டா வரவும், மேனேஜர் அவனிடம், நீ காலை 10 மணிக்கே வந்திருக்கணும்னார்.
அவன் கேட்டான் "ஏன் ஸார், என்ன நடந்தது"
அமெரிக்காவிலிருந்து டில்லி வந்த சுற்றுலா பயணிகள் அழைத்துக்கொண்டு போனார் ஒரு கைடு. செங்கோட்டை பார்த்ததும், அவரிடம் இதை எத்தனை ஆண்டுகளில் கட்டினார்கள்னு கேட்டார் ஒரு பயணி. 20 ஆண்டுன்னதும் அமெரிக்காவில் இதை 5 ஆண்டுகளில் கட்டி விடுவோம் என்றார். ஆக்ராவில் தாஜ்மஹால் 10 ஆண்டுகள்னதும் நாங்கள் 2 1/2 ஆண்டுகளில் கட்டி விடுவோம்னார். இப்படி எல்லா இடங்களிலும் அவர் சொன்னதும் கைடு அவர்களை குதுப் மினார் கூட்டிச் சென்றார். பயணிகள் கேட்கும் முன் கைடு சொன்னார், "நேற்று நான் வந்தபோது இது இங்கே இல்லையே"
நண்பர்கள் கூட்டத்தில் சினிமா பற்றி கேள்விகள் கேட்டார்கள். அப்பா/மகன், அக்கா/தங்கை எல்லாம் நடித்தார்கள். ஒரு அண்ணன்/தங்கை சொல்லுங்கள் என்று ஒரு கேள்வி. ஒருவன் உடனே எம்.என்.நம்பியார், எம்.என்.ராஜம் என்றான். இனிஷியல் ஒண்ணா இருக்கே அப்படிங்கிறான்.
தினம் தங்கள் வாழ்க்கையிலேயே அசத்தும் அசத்தல் மன்னர்கள் இருக்கிறார்கள்.
கலைஞர் முதன்முறை முதலமைச்சர் ஆன சமயம். சட்டசபை உறுப்பினர், திரு,கருத்திருமன், அவரிடம், "நீங்கள் நாடார்களுக்கு உதவி செய்ய மாட்டீர்கள்னு சொல்றாங்களே அப்படியா?" என்று கேட்டார்.
கலைஞரின் பதில், "என்னை நாடினோர்க்கு நான் உதவுவேன்னுதான் சொன்னேன். நாடார்க்கு உதவ மாட்டேன் என்று அர்த்தமில்லை."
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றபோது, என்ன சாப்பிடுகிறீர்கள், டீயா காபியா என்று கேட்டார்களாம். "டீயே மதுரம்" என்றாராம் கலைவாணர்.
"இன்னிக்கு இட்லி இல்லை. உங்களுக்கு பூரி படிக்குமா"ன்னு நண்பர் கேட்டதும், "ஜகந்நாதனுக்கு பூரி பிடிக்காமல் போகுமா?" என்று சொன்னாராம் கி.வா,ஜ.
வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு என்று கலைவாணர் பாடினார்.
மனிதன் மட்டும் ஏன் சிரிக்கிறான்? அவன் தான் அதிகம் துயரடைகிறான்.அதனால் அவன் சிரிப்பை கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று என்று யாரோ சொன்னதைப் படித்திருக்கிறேன்.
நன்றாக சிரித்துக் கொண்டிருங்கள். நன்றி, நன்றி, நன்றி.