Saturday, October 31, 2009

"நான் என்ன எம்.என்.நம்பியாரா இல்லை பி.எஸ்.வீரப்பாவா?

நேற்று சாயங்காலம் பீச்சில் கொஞ்சம் இருக்கலாம் என்று வந்தால் அப்போது வந்த பெண்மணி, "முகுந்தா, இங்கே வா. நீ எழுதிய மொட்டை கடிதத்தினால் உன் தம்பி கிருஷ்ணன் என்ன பாடு படுகிறான். கொஞ்சம் கூட கவலைப்படாமல், வேலை வெட்டி இல்லாமல், வீட்டோடு மாப்பிள்ளையாக் இருக்கும் உன் மாமாவுடன் சேர்ந்து சொத்து விவகாரம் பண்ணிக்கிட்டிருக்கே" என்று திட்டினார்.

இன்று காலை பேங்க்கில் பணம் எடுத்து விட்டு வெளியே வருமுன், எதிரில் வந்த மாமி,
"ரவி, இது உனக்கே நல்லாயிருக்கா? லீலா நல்ல பெண். உன் சந்தேகத்தினால் அவளை ஏன் கொடுமை படுத்தறே? பாவம் அவள்". என்றார்.

நேற்று டி.வியில் 'நானும் ஹீரோதான்' - நிழல்கள் ரவி நடித்த படம் பார்த்தேன். அதில் சினிமா ஷூட்டிங் ஒரு கிராமத்தில் நடக்கிறது. அங்கெல்லாம் ஹோட்டல் ரூம் எல்லாம் கிடைக்காதே, அதனால் நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லோரும் கிராமத்து வீடுகளில் விருந்தினர் போல தங்கினார்கள். ஒரு வீட்டில் நம்பியாரையும் வீரப்பாவையும் பார்த்து விட்டு, அந்த வீட்டுப் பெண்மணி, இவர்கள் இருவரும் ரொம்ப கெட்டவர்களாச்சே, இவங்க்ளுக்கு நான் இடம் தர மாட்டேன்னு சொன்னாங்க. அது போல என்னைப் பார்த்தவர்கள் எல்லாம் கேட்கிறார்கள்".
டிவி சீரியல் பார்க்கும் பெண்கள் அழுவார்கள் என்று ஜோக்ஸ் படித்தேன். இப்படி நம்மையே கேட்கிறார்களே என்று நினைத்தேன்

-----சீரியல் நடிகர் ராஜ்காந்த் சொல்வதாக ஒரு கற்பனை.


எல்லா சீரியலிலும் அவர் ரோல், இப்படித்தான் அமைகிறது. சினிமாவில் சண்டை காட்சிகளில் மட்டுமே நான் பார்த்த ஆரியன் அன்று கே டிவி பேட்டியில் அழகாக சிந்து பைரவியில் வரும் "தொம் தொம்தனம்..."பாட்டை மிக அழகாக பாடினார். தான் நடித்த படம் ஒன்றை தியேட்டரில் பார்க்கும் போது, திரையில் அவர் சீன் வந்ததும் ரசிகர்கள் அவரை கெட்டவார்த்தைகளால் திட்டினார்களாம். இது தான் வில்லன்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் என்றார், ஆரியன்

நடிகர்களை ஹீரோ, வில்லன், காமெடியன் என்று முத்திரை குத்திவிடாமல் அவர்களின் திறமைகளை அறிந்து வித்தியாசமான ரோல்கள் தர க்ரியேட்டிவ் ஹெட்கள் யோசிக்க வேண்டும்

Wednesday, October 28, 2009

புதிய ஓவியர் சில்பி

அன்று விகடன், கல்கி இதழ்களில் சில்பி வரைந்த கோவில்கள், சிலைகளின் படங்களையெல்லாம் பார்த்து ரசித்திருக்கிறோம். சில்பி, தான் வரைய நினைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அங்கேயே இருந்து வரைவார்.


கங்கைகொண்ட சோழபுரம்


திருவாலங்காடு சிவன் கோவில்


Autism என்பது மூன்று வயதிற்குள் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு மன வளர்ச்சி குன்றிய நோயாம். பேச முடியாத நிலை. ஆனால் தாங்கள் நினைப்பதை படம் வரைந்து வெளிப்படுத்தும் ஒரு திறமை அவர்களுக்கு உருவாகுமாம்.

Stephen Wiltshire இப்படி பாதிக்கப்பட்டவர். சிறு வயது முதலே படம் வரைவதில் கெட்டிக்காரராம். லண்டனில் வசிக்கும் இவர் பல நாடுகள் சென்று ஊரை, மனதில் படம் பிடித்து வந்து, வரைந்து தள்ளியிருக்கிறார்.இந்த சில்பி தன்னுடைய சப்ஜெக்டை பார்த்து விட்டு, ஞாபகத்தில் கொண்டே தன் ஸ்டூடியோவில், துல்லியமாக போட்டோவை பார்த்து வரைவது போல வரைகிறார். பலநாடுகளின் நகரங்களை வரைந்திருக்கிறார்.

35 வயதாகும் ஸ்டீஃபன், தன் படங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார். படங்களை விற்று கிடைக்கும் பணத்தை நல்ல காரியங்களுக்கு நன்கொடையாக தருகிறார்.

நேற்றுதான் கூகுளில் பார்த்தேன். Stephen Wiltshire என்று search செய்தால் பார்க்கலாம்

சில்பி அவர்கள் வரைந்த திருநெல்வேலி மாவட்ட (அப்போ தூத்துக்குடியும் சேர்ந்தது) கோவில்கள், சர்ச், மசூதி எல்லாம் டி வி எஸ் நிறுவனம் வெளியிட்ட புத்தகம் என்னிடம் இருக்கிறது. அதையெல்லாம் பதிவிட ஆசைதான். அதற்கு அனுமதி பெற்று பிறகு செய்கிறேன். இந்த பதிவில் உள்ள சில்பி படங்கள் இரண்டும் varalaaru.blogspot.com மிலிருந்து எடுத்தேன். பதிவர்களுக்கு என் நன்றி

Monday, October 26, 2009

60 மைல் கல்களை கடந்தவர்கள்.

இரண்டாம் உலகப்போர் நடந்த நாளில்,James McAndrews-ன் பார்பர் ஷாப்புக்கு வருபவர்கள் போர் செய்திகள் அறிந்து கொண்டு, ட்வுனில் நடப்பது பற்றி பேசி, ஹேர்கட் செய்து கொண்டு போவார்கள்.
இன்று 90 வயதாகும் ஜேம்ஸ் தன் வாழ்வின் மூன்றில் இரண்டு பகுதியை, தான் வாழும் ஊரின் பிரபல பார்பராகவும், நாடித்துடிப்பாகவும் இருக்கிறார் என்று கூறும் அளவு பிரசித்தமானவர்.ஊரில் நிறைய மாற்றங்கள் நேர்கின்றன. புதிய தொழில்கள் தோன்றி விரைவில் மறைகின்றன. இவரது ஷாப் இந்த அறுபது ஆண்டு வளர்ச்சியில் ஐந்து இடங்களில் உள்ளன.

"நாம் யாரையும் திருத்த முடியாது. நான் ஒரு டெமாக்ரட். அதனால் என் ஷாப்பில் நாங்கள் அரசியல் பேசுவதில்லை" என்று சொல்லும் ஜேம்ஸ், "வியாபாரிகளும் நகரவாசிகளும் முன்னை போல நெருக்கமாக இருப்பதில்லை. எங்கள் பகுதியில் யாராவது இறந்து விட்டால், அவரை புதைக்கவும், அவரது வாரிசுகளுக்கு வேண்டிய பொருட்கள் வாங்கித் தரவும் நாங்கள் வீடு வீடாக சென்று பணம் வசூல் செய்வோம். இப்போ நாள் முழுதும் அலைந்தாலும் ஒரு சென்ட் கூட கிடைக்காது", என்று மிகவும் வருந்துகிறார்.

உடல்நிலை சரியில்லாத நிலையிலும் புதிய ஷாப்களில் உள்ளது போல் பெரிய டிவி எல்லாம் இல்லாமல் அவருடைய பார்பர் ஷாப் நடந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய நான்கு குழந்தைகளையும் கல்லூரி வரை படிக்க வைத்து ஆளாக்கி, தான் செய்யும் தொழிலை மதித்து, வாடிக்கையாளர்களை நேசித்து, அறுபது ஆண்டுகளாக நட்த்திய பார்பர் ஷாப்பை தன் தொண்ணூறாவது வயதில், அக்டோபர் 30 அன்று மூடப்போகிறார்.

நம் ஊரின் (McHenry) சரித்திரத்தில் இடம் பெற்ற ஜேம்ஸ்ஸை இனி மெயின் ரோடில் செல்லும்போது பார்க்க முடியாது என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை
என்கிறாராம் மேயர், சூஸன் லோ.

மைல் கல்லை கடந்த மேலும் இருவர்., Peg and Leroy Greathouse தம்பதியர், 25, ஆகஸ்ட் 1949-ல் திருமணமானவர்கள்.
தங்கள் (அறுபதாம் கல்யாணமில்லை)அறுபதாவது கல்யாண ஆண்டு விழாவை கொண்டாடினார்கள். . சினிமாவில் ஃப்ளாஷ் பேக் என்றால் ப்ளாக் & வொய்ட்-ல் காட்டுவார்களே, அது போல அன்று எடுத்த படத்துடன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் படத்தை பாருங்கள்

தகவல்- சிகாகோ ட்ரிப்யூன்