BASKET BALL விளையாட்டு ஜேம்ஸ் நெய்ஸ்மித் (JAMES NAISMITH) என்ற அமெரிக்கரால் 1891ம் ஆண்டு வடிவமைக்கப் பட்டது. முதல் விளையாட்டு தொடங்கிய போது, "NAISMITH GAME" என்று பெயரிடலாம் என்று எல்லோரும் சொன்னார்களாம். அவர்தான் விளையாட்டில் பாஸ்கெட் இருக்கு, பால் இருக்கு, ஏன் பாஸ்கெட் பால் என்று சொல்லக்கூடாது என்றாராம். நம்மூரில் கூடைப்பந்து ஆனது.
முதலில் வெறும் கூடை மட்டும் ஒரு போஸ்ட்டில் கட்டி விளையாடுவார்கள். கோல் போட்டதும் கம்பு கொண்டு கீழிருந்து தள்ளி எடுப்பார்கள்.
பிறகு கூடையிலிருந்து பந்து கீழே விழுமாறு ஓட்டை போட்டார்கள். 1906ல் தான் இரும்பு வளையம், வலைக்கூடை, கரும்பலகை எல்லாம் அமைக்கப் பட்டதாம்.Y M C A,, அமெரிக்க ராணுவ வீரர்கள், கல்லூரி/பள்ளிகளிலெல்லாம் ஆடத் தொடங்கி உலகளவில் பிரபலமானதாம்.
திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் உள்ள கூடை பந்து மைதானத்தை உலகத்தரத்திற்கு இணையாக, சுமார் 7 லட்சம் செலவில் புதுப்பித்து நேற்று 18/2/15, புதன் கிழமை மாலை 4.00 மணிக்கு, கல்விச் சங்கத் தலைவர் திரு மீனாக்ஷிசுந்தரம் திறந்து வைக்க, செயலர் திரு
மு.செல்லையா வரவேற்றார்.
இந்துக் கல்லூரி மாணவர்களும் இந்து மேல் நிலைப் பள்ளி மாணவர்களும் சேர்ந்து ஒரு அணி. வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் ஒரு அணியாகவும் ஆடத் தொடங்கி, இந்துக் கல்லூரி அணி
39 - 28 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்து மேல்நிலைபள்ளி முன்னாள் மாணவர் திரு. ராஜசேகர் படிக்கும் போது கூடைப் பந்து வீரர். அதன் பின் பல ஆண்டுகள் மாணவர்களுக்கு கோச் ஆக இருந்து ஆட்டம் கற்றுத் தந்தாராம். மாநில அளவில் பல பட்டங்களும் பரிசுகளும் வாங்கியவர். பணி ஓய்வு பெற்று நெல்லையில் வசிக்கிறார்.அவருக்கு கல்விச் சங்கத்தின் 'வாழ்நாள் சாதனையாளர்' விருதை, செயலர் திரு செல்லையா வழங்கினார்.
விளையாட்டு வீரர்கள், நடுவர்கள், எல்லோரும் நினைவுப் பரிசுகள் பெற்றார்கள்.