டிவி விளம்பரங்கள் பார்க்கிறோம். அதில் தினம் கேட்கும் வார்த்தைகள் எங்காவது கேட்டால்...........
நேற்று பகல் ஹோட்ட்லில் சாப்பிட்டு வெளியே வந்தோம். சர்வர் பின்னால் ஓடி வந்து, சார் பையை மறந்துட்டீங்களே. நீங்கள் எதிரே ரிஜிஸ்ட்ரார் ஆபீசிலிருந்து சாப்பிட வந்ததை பார்த்தேன். இந்தாங்க, உங்க பத்திரம், பத்திரமா பார்த்துக்கங்க, என்றான்
நண்பன் லட்டு தந்தான். ஓ, திருப்பதி போனியா? ரொம்ப கூட்டமோ, செலவு என்ன ஆச்சுனு கேட்டேன். சே என்னை மொட்டை அடிச்சுட்டான்யான்னு சொல்றான்.
டப்பாவில் இருந்த கடைசி சாக்லெட்டை வாயில் போடுற நேரத்தில் அவள் வந்துட்டா.எந்த ஸ்கூல்? டீச்சர் சொல்லிக்கொடுக்கலே, ஷேரிங் அப்படின்னா. ஒண்ணுதான் இருக்கு எப்படி பாதியாக்கனு கேட்டா,
சும்மா கடிச்சுடுங்கங்கிறா.
வீட்டில் ஒரு நாள் என் செல்ஃபோனை எங்கே என்று தேடினேன். அவசரமா பேசணும் யாராவது பார்த்தீங்களா என்றேன். வீட்டிலே இருக்கும்போது லாண்ட்லைனில் பேசுறது காமன் சென்ஸ் அப்படினு சொல்றா என் பேத்தி.
ராமு, சோமு, சீனு மூவரும் வந்தார்கள். சீனு சட்டை எல்லாம் மண்ணா இருந்தது. என்னை பார்த்ததும் நான் விழுந்துட்டேன் என்று சொன்னான். ராமு நீ தள்ளி விட்டாயான்னு கேட்டா சொல்றான் , நா தள்ளல ஸார். சோமு, நீயான்னா, அவனும் நா தள்ளல ஸார்ங்கிறான்