Thursday, June 30, 2011
மதி தா என்று நான் கேட்ட ம.தி.தா பள்ளிக்கு 150 வயது
திருநெல்வேலி ஜங்ஷனில் அமைந்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி உயர்நிலைப் பள்ளி(ம.தி.தா இந்து......)யின் 150வது ஆண்டுவிழாவின் முதல் நிகழ்ச்சி நன்கொடையாளர் தினம்.
அந்நாளில் ரூ. 1,00,000 வழங்கிய வள்ளல்களை நினைவு கூறும் வகையில் பள்ளியின் கல்விச் சங்கம் இன்று 30/06/2011 கொண்டாடியது.
நெல்லை மாநகராட்சி மேயர் திரு,ஏ.எல்.சுப்பிரமணியன் எல்லோரையும் வரவேற்றுப் பேசினார். கல்விச் சங்க்த்தின் தலைவர் திரு.எஸ்.மீனாட்சிசுந்தரம் தலைமை உரையில் திருநெல்வேலியில் ம.தி.தா, புனித சேவியர், புனித யோவான் பள்ளிகள்தான் அந்நாளில் பிரபலம். அதில் ம.தி.தா முதலில் தோன்றியது என்றார்.
கல்விச் சங்கத்தின் செயலாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிய திரு.அம்மையப்ப முதலியாரின் திரு உருவப் படத்தை கல்விச் சங்கத்தின் நன்கொடையாளர் வழிவழி உறுப்பினர் திரு.T.சந்தீஷ் திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினர் திருமதி உஷாராமன் - முதல்வர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சங்கர்நகர்)தன் உரையில் மகாகவி பாரதி, வ.உ.சி, போன்ற கவியும் சுதந்திரப் போராட்ட வீரரும் பயின்ற பள்ளியின் ஆண்டுவிழாவில் தம்மை பேச அழைத்ததை பெருமையாக் கருதுவதாகக் கூறி மாணவ மாணவியருக்கு அந்த தலைவர்கள் போல வாழ வேன்டும் என்று அறிவுரை கூறினார்.
கல்விச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் திரு.தளவாய்.தி.ராமசாமி நன்றி கூறினார். வெள்ளி (01/07), சனி(02/07) இருநாளும் முனைவர்.கு.ஞானசம்பந்தன் நடுவராக பட்டிமன்றம் - சின்னதிரையும் வெள்ளித்திரையும் மக்களை பண்படுத்துகிறதா? பாழ் படுத்துகிறதா? -என்ற தலைப்பில் பட்டிமன்றம் உட்பட சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
பள்ளியின் பழைய மாணவனாக நானும் கலந்து கொண்டு நினைவுகளில் மூழ்கி எழுந்து வந்தேன். நினைவுகள் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்
Subscribe to:
Posts (Atom)