Friday, July 10, 2009

ஒரு ஆர்த்தோ சர்ஜன் சொல்கிறார், முயன்று பாருங்களேன்

சில வினாடிகள் செய்யுங்கள். திரும்ப திரும்ப முயன்றாலும் முடியாது.


1. கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வலது காலை சிறிது தூக்கி clockwise ல் சுற்றுங்கள்
2. காலை சுற்றியபடி வலது கையால் எண் 6 காற்றில் எழுதுங்கள்.
காலும் சுற்றும் வசம் மாறும்.

நீங்கள் என்ன செய்தாலும் கால் சொன்னது கேட்காது. இது உங்கள் மூளையில் முன்னேயே ப்ரோக்ராம் செய்யப்பட்டது.

ஈ-மெயிலில் இன்று எனக்கு கிடைத்த தகவல்

Thursday, July 9, 2009

துணிக் கடைகளில் என்ன நடக்கிறது?

மகாராணிகளே, கஜானா ஜாக்கிரதை..
Aaddi தள்ளுபடி

Wednesday, July 8, 2009

ஓட்டாத கார் இல்லை, இதுதானே பாக்கி

அநேகமாக எல்லா கார்களும் ஓட்டியிருக்கிறேன். இந்த காரை சிகாகோ Six Flags தீம் பார்க்கில் ஒரு ரவுண்ட் ஓட்டினேன்.மேட்டுப்பாளையம், கன்னியாகுமரி, கொச்சின் இங்கெல்லாம் தீம் பார்க் உண்டு. நான் எங்கும் போனதில்லை. இங்கேதான் முதலில் பார்த்து பிரமித்து விட்டேன்.
என்ட்ரி டிக்கெட் 15 டாலர். நுழைவு வாயிலில் நம் பைகளை திறந்து பார்க்கிறார்கள். உள்ளே நிறைய ரெஸ்டாரண்ட். அதனால் நாம் வீட்டில் ஏதாவது செய்து, கொண்டு போகக் கூடாது என்கிறார்கள். சரிதானே. அங்கங்கே dust binகள் உள்ளதால் வழியெங்கும் சுத்தமாக இருக்கிறது.
கார் பார்க்கிங் சார்ஜ் 15 டாலர். எத்தனை கார்கள் நிற்கின்றன பாருங்கள். ஒரு காரில் நாலு பேரென்றாலும் எத்தனை பேர் இந்த நிமிடம் உள்ளே இருப்பார்கள். week endல் எப்படி இருக்கும்.

தீம் பார்க்கில் எந்த விளையாட்டுக்கும் தனி சார்ஜ் கிடையாது. மதுமிதா உற்சாகமாக எல்லாவற்றிலும் விளையாடினாள்.


ரோலர் கோஸ்டரில் மட்டும் நாங்கள் விடவில்லை. அவளுக்கு துணையாக நாமும் போகலாம் என்றால் எங்களுக்கு பயம். "ஆ.......", "ஓ......" என்று கத்திக்கொண்டு ( அப்போதுதான் பயம் இருக்காதாம்) கோஸ்டரில் செல்வதை பார்க்க நன்றாக இருந்தது.என்னிடம் இப்படி பறக்கும் பஸ் கிடையாது

மதுவும் பாபுவும் ரயிலில்


இந்த Sky Trek Tower ல் உள்ள ரிங் சுற்றிக்கொண்டே மேலே வரை சென்று நமக்கு சுற்றிக்காட்டி இறங்குகிறது. அங்கிருந்து எடுத்த படங்கள்.


இன்று 1 2 3 4 5 6 7 8 9 தினமாம்.

தினம் சுடோகு தவறாமல் எழுதுபவர்கள் இது நமக்கான தினமோ என்று நினைக்கலாம். நேரத்தையும் நாளையும் சேர்த்து எழுதும்போது 1 முதல் 9 வரை வரிசையாக வரும் நாளாம்.

12:34:56 7/08/09

இன்று 12 மணி, 34 நிமி, 56 வினாடி ஆனதும் கொண்டாடுங்கள் என்று சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகை சொல்கிறது. நூறாண்டுகளில் ஒருமுறை அல்லது இரண்டு முறைதான் வருமாம்

12:34:56
ஒரு நாளில் இரண்டு முறை வருமே என்கிறீர்களா? 12:34 A.M என்றால் அது 00:34 A.M.

DD/MM/YY என்று எழுதும் நமக்கு எப்படி என நீங்கள் நினைப்பது சரிதான்.நமக்கு ஆகஸ்ட் மாதம் பாருங்கள்.

12:34:56 7/08/09

Monday, July 6, 2009

யார் எடுத்தாலும் அழுகையை நிறுத்தாத குழந்தை..

.. தன் தாய் தூக்கியதும் சிரிக்குமே (மாருதி கார் விளம்பரம் டிவியில் பார்த்தீர்களா) அது உண்மை. இன்றைய கார்களும் அது போலத்தான்.

கார் ரிப்பேர் தொழிலும் இப்போது நிறைய மாறி விட்டது. டீலரிடம் உள்ள பயிற்சி பெற்ற டெக்னிஷியன் தான் சர்வீஸ் செய்ய முடியும் என்றாகி விட்டது.

பியட், அம்பாஸடர் கார்கள் மட்டும் ஓடிய காலத்தில் டீலர்கள் அதிகம் சார்ஜ் செய்வதால் கார் ஒர்க் ஷாப்களை தேடி அன்று செல்ல முடிந்தது. டீலர்களோ எங்கள் மெக்கானிக்குகள் தான் உற்பத்தியாளரிடம் பயிற்சி பெற்றவர்கள், எங்களிடம் தான் ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கும் என்று சொன்னார்கள்.

புதுக்கார்கள் அதிகம் உழைக்கின்றன. முன்னைவிட குறைந்த மெயின்டனன்ஸ் போதும். டோர் லாக், கண்ணாடி எல்லாம் ஆட்டோமடிக். எலக்ட்ரானிக் சிப்ஸ் அதிகம் பயன் படுகிறது. இந்த மாற்றங்கள்/முன்னேற்றங்களில் வேலை செய்ய மெக்கானிக் எல்லோரும் டெக்னிஷியன்கள் ஆகி கட்டாயம் கம்ப்யூட்டர் பயிற்சி பெற வேண்டும்.

உங்கள் புது காரின் ஓனர் ஹாண்ட் புக் நன்றாக படியுங்கள். கிலோமீட்டர் கணக்கில் என்னென்ன சர்வீஸ் உண்டோ தவறாமல் டீலரிடம் தந்து செய்துகொண்டால் கார் பழுதாவதை தவிர்க்கலாம்.

குட் லக்