Thursday, January 2, 2014

சோனியா



   நேற்று சூப்பர் ஸிங்கர் பார்த்தேன். ரொம்ப நல்லா பாடியும் சோனியா ஏனோ தேர்வாகவில்லை. மறைந்திருந்து பார்த்து மார்க் போட்டது யாருன்னு தெரியலை.
 
 அவள் குரலில் என்ன நேர்ந்தது? அதை நடுவர்கள் சொல்லிச் சொல்லி காரணம் காட்டினார்கள்.
 
  அழகு மலராட என்று அன்று தன் சொந்த சோகத்தையே பாடிய சோனியாவுக்கு ஜானகி அம்மா, தானே மேடைக்கு வந்து பாராட்டியது யாருக்கும் கிடைக்காத பரிசு. அன்று ஆனந்தக் கண்ணீர் விட்ட பெண் நேற்று அழுவதை பார்த்த எனக்கே பார்க்க சங்கடமாகி விட்டது.
 
  சூப்பர் ஸிங்கராகி அருண் எக்ஸெல்லோ வழங்கும்  ஃப்ளாட்டை சோனியா வென்றதும்,  பாட்டு பாடுகிறாள்  என்று இவளை விட்டுப் பிரிந்த போன கணவன் வீடு திரும்பணும் என்பதே என் ஆசை.

   நிறைவேறுமா எண்ணம் நிறைவேறுமா?