டோனிடவுன், அர்கன்ஸாஸ் ஸ்டேட்டில் வசிக்கும் ஜிம் பாப்(44), மிஷெல் டுகர்(42) தம்பதிக்கு பத்தொன்பதாவது குழந்தை பிறக்கப் போகிறதாம். நாம் இருவர்-நமக்கு ஒருவர் எல்லாம் எங்களுக்கு இல்லை. முதல் பையனுக்கு வயது 21, சின்னவளுக்கு 8 மாதம். இன்னும் 12 வாரத்தில் எங்கள் கடைக்குட்டி பிறந்திடும், என்று டிவி பேட்டியில் சொல்கிறார்கள்
மூத்த பிள்ளை ஜோஷ், சீக்கிரம் அவர்களை தாத்தா, பாட்டி ஆக்கப் போகிறாராம். எல்லோருடைய பெயரும் ஜே -ல் தான்.
ஜோஷ் 21 : ஜானா, ஜான் டேவிட் 19(twins)
ஜில் 18 : ஜெஸ்ஸா 16 : ஜிங்கர் 15 ஜோஸப் 14
ஜோஸையா 13 : ஜாய் அன்னா 11
ஜெடிடியா, ஜெரெமையா 10 (twins)
ஜேஸன் 9 : ஜேம்ஸ் 8 : ஜஸ்டின் 6
ஜாக்ஸன் 5 : ஜொஹன்னா 3
ஜெனிஃபர் 2 : ஜோர்டன் கிரேஸ் 8 மாதம்
கடைக்குட்டிக்கும் ஜே யில் பெயர் யோசிக்கிறார்கள்.
பிள்ளைகள் ஜே யில் ஆண்/பெண் பேர்கள் லிஸ்ட் எடுத்து ரெடியாக இருக்கிறார்கள்.ஜே யில் பெயர்களை தங்களுக்கு PEOPLE.com மூலம் அனுப்புமாறு ஜிம் பாப் தம்பதி கேட்கிறார்கள்.
நானும் நம்ம ஊர் பேராக யோசித்தேன்.
ஆண்- ஜம்பு, ஜெகன்
பெண்- ஜானகி, ஜாஸ்மின்
நல்லாயிருக்கா? நீங்களும் எழுதுங்களேன்
தம்பதிக்கு ஜே ஜே.
வாழ்த்துக்கள்
நன்றி - msn.com , people.com