Sunday, December 12, 2010

அம்மா என்ன சொல்வாள்

பிரபலங்களின் அம்மா அவர்களிடம் என்ன சொல்லியிருப்பார்கள் என்று ஒரு கற்பனை.

மைக்கேல் ஆஞ்செலோ:
"நீ ஏன் எல்லா குழந்தைகளையும் போல சுவரில் வரையக் கூடாது? உத்திரத்தில் அதை அழிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

மேரி :
"உன் ஆட்டுக்குட்டி உன்னோடு ஸ்கூலுக்கு வந்தது சரி. ஆனால் அது எப்படி உன்னை விட அதிக மார்க் வாங்கிச்சு?

தாமஸ் எடிசன் :
"நீ மின்சார லைட் பல்ப் கண்டுபிடித்தது ரொம்ப சந்தோஷம். மணி பத்தாச்சு. லைட் ஆஃப் பண்ணிவிட்டு வந்து படு".

இந்த மூன்றும் ரோட்டரி நியூஸிலிருந்து சுட்டது. வரும் நாலும் நம்மது.

ராமானுஜம்
"பெரிய கணக்குப் புலின்னு பேரு. ஒருநாள் வீட்டுச் செலவு கணக்கு எழுதத் தெரியலே."

ரஜினிகாந்த்:
"கண்டக்டராகவே இருந்தால் இத்தனை வருஷத்தில் மிச்சக்காசு தராமலேயே எவ்வளவு சம்பாதித்திருக்கலாம். தினம் ஒரு வேஷம் போட்டு, நடிச்சு........ச்சே."

காந்தி :
"வக்கீல் வேலை பார்த்து தென் ஆப்பிரிக்காவிலே ரிட்டையர் ஆகியிருக்கக் கூடாதா? இப்போ என்.ஆர்.ஐ என்றால் என்ன பேர் பார்த்தியா?"

கருணாநிதி
:
:வாசிச்சுக்கொண்டிருந்தால் எத்தனை வாரிசுகள் வந்திருப்பாங்க? இசை வம்சமும் தளைத்திருக்கும்".

நீங்களும் யோசிச்சு எழுதுங்களேன்.