ராதா ஜெயலக்ஷ்மி
பெயர்கள் ஞாபகம் இருக்கா? 'காஞ்சனா' -கே.ஆர்.ராமசாமி, லலிதா பத்மினி நடித்த பக்ஷிராஜா பிலிம் தயாரிப்பு.1954னு நினைக்கிறேன். அதில் ஒரு கல்யாண கச்செரி சீனில் ராதா ஜெயலக்ஷ்மி பாடுவார்கள்."சலமேலரா சாகேதராமா" கீர்த்தனை. அதன் பிறகு இன்று வரை யாரும் அந்த கிருதியை பாடி நான் கேட்டதில்லை. அன்றிலிருந்து நான் அவர்கள் ரசிகன். இருவரும் கஸின்ஸ்
.பக்தி பாடல்கள் . ஹெச்.எம்.வி, கொலம்பியா ரிகார்டுகளில் நிறைய பாடியிருக்கிறார்கள். பிறகுதான் சபாக்களில் கச்செரி செய்ய தொடங்கி பிரபலமானார்கள்.
ஜி.என்.பி பாணியிலேயே பாடியதால், வயலினிஸ்ட் மைசூர் டி.செளடையா,
"G.N.B IN SAREES" என்று பாராட்டுவாராம். 1981ல் சங்கீத் நாடக அகாடமி அவார்ட் பெற்றார்கள்.
சினிமாவிலும் பின்னணி நிறைய பாடினார் ஜெயலக்ஷ்மி. டைட்டிலில் ராதா ஜெயலக்ஷ்மி என்றே வரும்.
மாங்கல்யம் (ஒட்டும் இரு உள்ளங்கள.)
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (வெண்னிலாவும் வானும்..)
மோட்டார் சுந்தரம் பிள்ளை (மனமே முருகனின் மயில் வாகனம்..)
மனோகரா (சிங்கார பைங்கிளியே பேசு)
இன்னும் பல இனிய பாடல்கள்.
1990க்கு பிறகு இசை ரசிகர்களும் சபாக்களும் இவர்களை மறந்து விட்டார்களோ என்னவோ. சென்ற மாதம் ஜெயலக்ஷ்மி அவர்கள் மறைந்த செய்தி சென்னை ஹிந்து இதழில் பார்த்தேன். மற்ற நாளிதழ்களிலோ, டிவியிலோ வந்த மாதிரி தெரியவில்லை. ராதா ஜெயலக்ஷ்மி பாடிய "பண்டு ரீதி கோலு" என்ற தியாகராஜர் கிர்த்தனை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.
http://www.youtu.be/a25osFeLkgM