Saturday, January 11, 2014

ஜில்லா

          ஜில்லா

தியேட்டரில் சினிமா பார்த்து ரொம்ப நாளாச்சு. ஜில்லா பார்க்கலாம் என்று நானும் தாமரையும் மேட்னி ஷோ போனோம்.

ரொம்ப 'ஜில்'லா இருந்தது ஏஸி. தியேட்டரில் பாதி ஸீட் காலி. கூட்டத்தை பொருத்து ஏஸி டெம்பரேச்சரை கூட்டி/குறைத்து வைத்தால் என்ன?

அது போல சவுண்ட். பாட்டு வரிகள், ஏன் வசனம் கூட சில இடங்களில் புரியவே இல்லை. இளைய தளபதி ரசிகர் கூட்டம் அடித்த விசில், போட்ட கூச்சலில் ஏன் தியேட்டருக்கு வந்தோம் என்றாகி விட்டது.
 சில மாதங்கள் பொறுத்திருக்கலாம்.

விஜய், மோகன்லால் ஜோடி. ரஜினி, மம்முட்டி மாதிரி தளபதி சப்ஜெக்ட் தானோ என்று நினைத்தேன்.
 ஜில்லா வேற மாதிரி. படம் நல்லா இருந்தது. ஆனால் ஃபுல்லா சண்டை, வெட்டு, குத்து, டுமீல்தான்.

 ஓடும்

"முதல்ல நீங்க"

               "முதல்ல நீங்க"

சாலை பதுகாப்பு வாரம் அனுசரிக்க தொடங்கி 25 வருஷம் ஆச்சாம். இந்த வெள்ளிவிழா ஆண்டில் சிறப்பாக, ஜனவரி 11 முதல் 17 வரை கொண்டாடுகிறது இந்திய அரசு. "சாலையில் செல்கையில் 'முதல்ல நீங்க' என்று எப்போதும் சொல்லுங்கள்" என்ற தீம் அறிவித்திருக்கிறது.

விபத்துக்களை தவிர்க்கும் பொறுப்பு சாலைகளில் பயணிப்போரிடம் தான் இருக்கிறது என்று முதல்வர் இன்று தினமலரில் தன் வாழ்த்து செய்தியில் சொல்கிறார்.

முதல்ல நீங்க - அருமையான தகவல். கார் பைக் ஓட்டும்போது முந்திச் செல்ல முனைவோருக்கு முதல்ல நீங்கள் போங்க என்று வழி விடுங்கள். முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் உங்கள் வலது புறமிருந்து வரும் வண்டிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

அரசு என்னதான் கோடிக் கணக்கில் செலவு செய்து வேகத்தடை, சாலை மையத்தடுப்பு சுவர்கள், சிக்னல் பலகை, சிக்னல் விளக்கு, மலைப்பாதையில் உலோக தடுப்பு வேலிகள்,மாணவர்களுக்காக பாடப் புத்தகத்தில் சாலை விதிகளை அச்சிடுதல் செய்தாலும் 'விலையில்லா' உயிரை காப்பது நம் கடமை.

பைக் ஓட்டினால் ஹெல்மெட்டும், காரில் சீட் பெல்ட்டும் கட்டாயம் அணியுங்கள். செல்போனை ஸ்விட்ச் ஃஆப் செய்து விட்டு காரில் ஏறுங்கள். எங்காவது நிற்கும்போது மிஸ்ட் கால் பார்த்து கூப்பிட்டு பேசுங்கள்.
 மது வேண்டவே வேண்டாம்.

இலங்கையில் சாலை விதி என்று சொல்லவில்லை. "வீதி ஒழுங்கு" என்றுதான் சொல்கிறார்கள். நாமும் ஒழுங்காக செல்வோம்