Monday, October 5, 2009

அ முதல் ஃ வரை : ஏ டு இஸட் வரை

இந்த வரிசைகளில் அறம், ஆறுவ்து......என்றும் அம்மா, ஆசை என்ற வரிசைகளில் எழுதி விட்டார்கள். நாம் என்ன் எழுதலாம் என நினைத்த போது, அ,ஆ வரிசையில் சினிமாவும், ஏ டு இஸட் வரிசையில் நமக்குப் பிடித்த கார் பெயர்களும்தான் ஈஸின்னு தோன்றியது. கதை, நடிப்பு, பாட்டு என்று என்னால் மறக்க முடியாத படங்கள் நினைவு வந்தன.
அ : அடுத்த வீட்டுப் பெண்
நல்ல காமெடி. அஞ்சலிதேவி, தங்கவேலு நடித்தது.
"வனிதாமணியே...நீ வாராய் அமுத கனியே..
ஹம்ஸத்வனி ராகம்னு நினைக்கிறேன்.
ஆ : ஆடிப்பெருக்கு.
"தனிமையிலே இனிமை காண முடியுமா..." நல்ல பாட்டு. இந்த காட்சியில் சரோஜாதேவி அழகாக நடித்திருப்பார்.
இ : இல்லறஜோதி.
மாடர்ன் தியேட்டர்ஸ் படம். கண்ணதாசன் வசனம். அனார்கலி நாடகத்தில் சிவாஜிதான் சலீம். ஓ.ஏ.கே தேவர் (ராஜாமான்சிங்) அனார்கலியிடம், "நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்,
நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்" என்று சொல்வார்.
"உனக்கும் எனக்கும் உறவு காட்டி உலகம் சொன்னது கதையா" -
ஜிக்கி பாடிய நல்ல பாட்டு.
ஈ : ஈரம்
ஒற்றை எழுத்தில் தீ, நீ என்று படங்கள் உண்டு. ஈ வந்ததா?
ஊருக்கு வந்ததும் நான் பார்க்க நினைக்கும் படங்களில் ஒன்று.
உ : உத்தமபுத்திரன்
பி.யு.சின்னப்பா படமும் உண்டு. நான் சொல்வது சிவாஜி கணேசன் படம். "யாரடி நீ மோஹினி கூரடி என் கண்மணி.." பாட்டுக்கு ஹெலனுடன் அழகாக ஆடுவார். பியுசி படிக்கும்போது க்ளாஸ் கட் பண்ணி மேட்னி பார்த்தேன். அண்ணனுக்கு தெரிஞ்சு என்னை திட்டினார். நல்ல வேளை அப்பாவிடம் சொல்லவில்லை.
ஊ : ஊர்க்காவலன்
ரஜினியின் இன்னொரு ஃபார்முலா படம்
எ : எதிர்பாராதது
ஸ்ரீதர் வசனம். சிவாஜி, பத்மினி, நாகையா நடித்தது.
"சிற்பி செதுக்காத பொற்சிலையே."
ஜிக்கி பாடும் இப்பாட்டை ஏ.எம்.ராஜா சோகமாக பாடுவார்
ஏ : ஏழை படும் பாடு
Les Miserable என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல். நாகையா நடித்தது.
Javert என்ற் போலீஸ்காரராக சீதாராமன் நடித்ததால் ஜாவர் சீதாராமன் ஆனார்.(பட்டணத்தில் பூதமாக வருவாரே)
ஐ : ஐந்து லட்சம்
ஐ என்றதும் நினைவு வந்த படம்
ஒ : ஓளி விளக்கு
எம்.ஜி.ஆர் நடித்த ஜெமினி படம். அவர் ஆஸ்பத்திரியில் இருந்த சமயம்.
"ஆண்டவனே உன் காலடியை நான் கண்ணீரில் நீராட்டினேன் - இந்த ஓருயிரை வாழவைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன் முருகையா
என்று ஒரு பாட்டு.
ஓ : ஓர் இரவு
"துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா"
ஒள : ஒளவையார்
றம்....றுவது என வரிசையில் பாடியவர். அந்த நாளில் நடிக்க ஒரு லட்சம் வாங்கிய நடிகை கே.பி.சுந்தராம்பாள். சின்ன ஒளவையாக பேபி சச்சு, குமரியாக குசலகுமாரி தோன்றினார்கள்.
எங்க அப்பாவுடன் நாங்கள் சேர்ந்து பார்த்த ஒரே படம்.
ஆயுத எழுத்து
இது அக்கன்னாவுக்காக.
மணிரத்னம் படம்


A to Z கார்கள் பார்க்கலாமா?

Austin A 40.
சித்தப்பா காரில்தான் நான் ஓட்டப் பழகியது.


Buick. Lacrosse தான் டாப் ஆஃ தி லைன். கனடாவில் ஃப்ரென்ச் பேசும் இடங்களில் மட்டும் அது Allure எனப்படுகிறது. ஃப்ரென்சில் வேறு அர்த்தமாம்.
Chevrolet.
எங்க வீட்டு கார். அப்பா 1947ல் வாங்கினார். பழைய மாடல் கார்கள் எதையுமே அமெரிக்க சாலையில் காணமுடியவில்லை. இது கூகிளில் எனக்கு கிடைத்த படம். எங்க காரைப் போலவே ரெஸ்டோர் ப்ண்ண வேண்டிய நிலையில்தான் இங்கேயும் இருக்கின்றன


இது யார் தெரிகிறதா?

Citroen

Dodge
Edsel-
ஒரு போர்ட் கார்.
ஹென்றி ஃபோர்டின் மகன் பேராம் Edsel கொஞ்ச ஆண்டுகள் தான் வந்தது.
Fiat. அப்பா எனக்கு வாங்கித் தந்தது பியட் 1100.
Grand Prix. போனியாக்(Pontiac) காரின் ஒரு மாடல்.
Hillman அந்நாளில் இந்தியாவில் நிறைய கார்கள் வந்தன.
Imperial . க்ரைஸ்லரின் டாப் கார்
Jaguar யு கே யில் தயாராகும் ஸ்போர்ட் கார்.
Kaiser அமெரிக்க கார். இப்போ தயாரிப்பில் இல்லை
Lincoln Continental

ப்ரெஸிடென்ட் கென்னடி இந்த திறந்த காரில் செல்லும் போது தான் சுடப் பட்டார்
Morris Minor 50களில் இந்தியாவில் வந்தது.
Nova செவர்லேயின் 4 சிலிண்டர் கொண்ட சின்ன கார். நோவா என்றால் ஸ்பானிஷ் மொழியில் Won't go என்று அர்த்தமாம். பின்னாளில் வரவில்லை. இப்போ சின்ன கார்கள் செய்ய மூன்று கம்பெனிகளும் நினைக்கின்றன.
Nissan அமெரிக்காவில் 3 வது இடத்தில் இருக்கிறது
Odyssey ஹான்டாவின் வேன். மகள் எனக்கு டைரக்ஷன் சொல்ல நான் அமெரிக்க சாலைகளில் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்
Opel ஜெனரல் மோட்டார்ஸின் ஜெர்மன் கார்
Plymouth இது ஒரு ராக் பெயராம்.
50களில் இந்தியாவில் ப்ரீமியர் ஆட்டொமொபைல்ஸ் தயாரித்தது.
Quest நிஸானின் ஒரு மாடல். நம்முரில் Qualis (டொயோடா) இருக்கிறதே

Rolls Royce







சார்ல்ஸ் ரோல்ஸ் -ம் ஹென்றி ராய்ஸ் சேர்ந்து தயாரித்தது.
Studebaker
Thunderbird
Vauxhall ஜெனரல் மோட்டார்ஸின் பிரிட்டிஷ் கார்.
Willys ஜீப்
Xylo மஹிந்திரா இன்னோவா வுக்கு போட்டியாக தயாரிக்கும் கார்
Yaris டொயொடாவின் இன்னொரு மாடல்
Zodiac , Zephyr
Zen. மாருதி கார்
நிறைய கார் படங்கள் பதிய வேண்டும் என்று நினைத்தேன். போதுமா