Wednesday, July 29, 2009

மேடைப் பேச்சிலும் சர்ப்ரைஸ்.

ஒரு மீட்டிங் போயிருந்தேன். நிகழ்ச்சி நிரல் தந்தார்கள். யார் யார் என்ன பேசப் போகிறார்கள் என்று லிஸ்ட் இருந்தது. அதில் மூன்றாவதாக பேசுபவர் என்ன டாபிக்னு போடவில்லை.முதல் இருவரும் தங்களை அழைத்ததும், எல்லோரையும் வணங்கி விட்டு என்ன சொல்லப் போகிறோம் என்று சொல்லி தொடங்கினார்கள்.

மூன்றாமவர் தன் முறை வந்ததும் மேடை ஏறினார். மைக் முன் வந்ததும் அவருடைய செல்போன் சிணுங்கியது. எடுத்து ஹலோ என்றவர்.

...............ராமனா.......நான் நல்லா இருக்கேன், நீஎப்படி இருக்கே....... இங்கே ஒரே வெயில், அங்கே மழை உண்டா..........சரி குற்றாலம் போனியா, சீசன் நல்லா இருக்காமே.......சரி சரி, நான் அப்புறமா பேசறேன், நான் மீட்டிங்கில் இருக்கேன். அடுத்து நான் தான் பேசணும்
என்று மைக் முன் நின்று பேசினால் ஸ்பீக்கரில் கேட்கும் என்றோ, டிவியில் "Walk when you Talk "னு டாக்டர் சொன்னதாலோ மேடையிலேயே அங்குமிங்கும் நடந்து கொண்டு பேசியவர்
...சரி எழுதிக்கிறேன் என்று, தன் சட்டைப் பையில் பேனா இல்லாமல், இறங்கி முன் வரிசையில் அமர்ந்திருந்த என்னிடம் வாங்கி, தன்னுடன் பேசியவரின் போன் நம்பரை எழுதி, ஓகே, நான் கூப்பிடுகிறேன்னு சொல்லி போனை ஆஃப் பண்ணி பாக்கெட்டில் வைத்தார்.

சபையில் இருந்த எல்லோருக்கும் எப்படி இருந்திருக்கும். ஆனால் இது தற்செயலாக நடந்தது இல்லை. விழா ஆர்கனைசரிடம் முன்பே சொல்லியதால் அஜென்டாவில் அவர் டாபிக் போடவில்லை. சரியாக அவர் மேடை ஏறியதும் கடைசி வரிசையில் இருந்த அவர் ஆள் ஒரு மிஸ்ட் கால் கொடுத்தார். எல்லாம் செட் அப் தான்.

மீண்டும் மைக் முன் வந்தவர், எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். இன்று நான் பேச வந்தது செல்போன் Etiquette (சரியான தமிழ் வார்த்தை ஒழுங்கு முறை என்று சொல்லலாமா) பற்றி, என்றார். முதலிலேயே என்ன செய்யக் கூடாதுனு செய்து காண்பித்து விட்டு பின் விவரமாக பேசினார்.

பப்ளிக் ஸ்பீக்கிங் என்று ஒரு புத்தகத்தில் பேச தொடங்குமுன் Startle the Audience என்று இந்த ஐடியா சொல்லியிருந்தது. அதை படித்ததும் உண்டான கற்பனைதான்.
எப்படி இருக்கு?

கதையல்ல நிஜம்

Racism ஐ எதிர்ப்பவரா நீங்கள்? இதைப் படிங்க. பிரிட்டிஷ் ஏர்வேஸ்ஸுக்கு ஒரு ஷொட்டு கொடுங்க.

ஜோஹானர்ஸ்பர்கிலிருந்து (காந்தியை ரயிலில் இருந்து பிரிட்டிஷ்காரர் தள்ளிவிட்ட தென் ஆப்பிரிக்கா ஊர்தான்) லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், எகானமி க்ளாஸில் இருந்த ஒரு 50 வயது வெள்ளைக்காரி ஏர்ஹோஸ்டஸை கூப்பிட்டு, நான் டிக்கெட் புக் செய்த போது யோசித்திருக்க மாட்டீர்கள், இப்போ பார், ஒரு கறுப்பு மனிதனை என் பக்கத்தில் உட்கார வைத்து விட்டீர்களே, என்க்கு வேறு சீட் கொடு என்று கோபமாக சொன்னார்.

ஏர்ஹோஸ்டஸ் மிகவும் பணிவுடன், ஸாரி, எகானமி க்ளாஸில் ஒரு சீட்டும் காலி இல்லை. கொஞ்சம் பொறுங்கள், என்ன செய்யலாம் பார்த்து வருகிறேன் என்று சொல்லி சென்றார். சில நிமிடங்களில் திரும்பி வந்தவர் வெள்ளைக்காரியிடம், பிஸினஸ் க்ளாஸிலும் சீட் இல்லை. காப்டனிடம் சொன்னேன். அவர் ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஒரு சீட் இருக்கு. ரூல் படி செய்யக்கூடாது ஆனாலும் ஒரு பயணி ரொம்ப வருத்தப் பட்டால் மாற்றி விடுனு சொல்லிட்டார் என்றவள், அந்த வெள்ளைக்காரி பேசுமுன், பக்கத்திலிருந்த கறுப்பு மனிதரிடம், எக்ஸ்யூஸ் மீ ஸார், உங்கள் ஹாண்ட் பாக்கேஜை எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஒரு சீட் இருக்கிறது என்றாள்

இது வரை பயணி போட்ட சண்டையையும், ஏர்ஹோஸ்டஸ் அதை சாமர்த்தியமாக சமாளித்ததையும் பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் எழுந்து நின்று கை தட்டினார்கள்.

ஈ மெயிலில் இதை அனுப்பியவர், சில நண்பகளுக்கு ஃபார்வர்ட் செய்யுங்கள். டெலிட் செய்யுமுன் ஒருவருக்காவது சொல்லுங்கள் என்று எழுதி இருந்தார். எத்தனை பேருக்கு சொல்லி விட்டேன்

Sunday, July 26, 2009

நம்மை பழி வாங்க நினைத்தால்........

...இவர்கள் என்ன செய்வார்கள்
ஈ மெயிலில் எனக்கு வந்த தகவல். நீங்களும் பாருங்களேன்