என் அக்கா மகன் கல்யாணம் சென்ற புதனன்று நடந்தது. அதிகாலை முகூர்த்தம் என்பதால் நிறைய டயம் கிடைத்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் நலுங்கு விளையாடச்சொன்னோம். முன்னெல்லாம் எங்கள் வீட்டில் இதற்காகவே ஒரு பித்தளை தேங்காய் உண்டு அவர்கள் உருட்டி விளையாட. கல்யாணமோ உட்லண்ட்ஸில். நிஜத் தேங்காய் வைத்து தொடங்கினோம்.
அடுத்து பல்லாங்குழி. வீட்டில் கூட இப்ப எல்லாம் கிடையாது. பல்லாங்குழியா, அப்படின்னா? என்று மாப்பிள்ளையும் பெண்ணும் கேட்டார்கள். வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தோம். பல்லாங்குழியும் கைவசம் இல்லை.யாருக்குத் தோன்றியதோ
அந்தாக்ஷிரி விளையாடலாம் என்றார்கள்.
மாப்பிள்ளை முதலில் தொடங்க பெண், அவர் விட்ட எழுத்தில் பாடணும் என்றதும் இருவரும் குழியாக பாடினார்கள். "இஞ்ஜி இடுப்பழகா" பாட்டை இருவரும் ஒரு டூயட் மாதிரி பாடி முடித்தார்கள்.
நாங்கள் விளையாட ஸ்க்ராபிள் வாங்கி வைத்திருந்தோம். அதையும் அவர்கள் அழகாக ஆடி தாங்கள் மகிழ்ந்ததோடு எங்களையும் மகிழ்வித்தார்கள்.
பிறகு அப்பளம் நொருக்கல். சாப்பாடு நேரம் நெருங்கியதால் சுமார் ஒரு டஜன் அப்பளம் நொருங்கியது.
என்ன, உங்கள் வீட்டு கல்யாண நலுங்குக்கு புது ஐடியா கிடைத்ததா?
7 comments:
சகா!
என் சின்னக்கா கல்யாணத்தில் இப்போதுபோல் ஸ்ராபிள் எல்லாம் கிடையாது. அறுபதுகளில் பெண்ணும் மாப்பிள்ளையும் அப்போது பிரபலமான லக்ஸிகன் விளையாடினார்கள். நலுங்கு நல்லாவே ரசித்திருக்கிறீர்கள்!!!!
நல்ல யோசனைதான். ஆமா அதென்ன அப்பளம் நொறுக்கல்? ஒருவேளை நொறுக்குத்தீனி போல அப்பளத்தை நொறுக்கி, சாப்பிடறத தான் அப்டி சொல்லறாய்ங்களோ?:P
இயல்பா எழுதியிருக்கிங்க:)
வாழ்த்துக்கள்..
ரசிகா, அப்பளம் நொறுக்கல் தெரியாதா? மாப்பிள்ளை, பெண் இருவரும் தங்கள் இருகையிலும் சுட்ட அப்பளம் வைத்துக்கொண்டு மற்றவர் தலைக்கு மேல் அடித்து நொறுக்கி போடுவார்கள். நீங்கள் எந்த ஊர்.
"பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
ஒற்றை நாணயம்..."-
எனப் பல்லாங்குழியில் எத்தனை வட்டம் என்றே தெரியாமல் "பாடித் திரியும் பறவை"களிடம் நம் "பசுமை நிறைந்த நினைவுகளை"த் திணிக்கப் பார்த்தால் அப்படித்தான் கேட்பார்கள். எப்படியோ, அந்தாக்ஷ்ரி, ஸ்க்ராபிள் எனக் கலக்கிய நலுங்கு 'நவீனம்' என்றால், நானானி நினைவு கூறும் அறுபதிகளில் லக்சிகன் விளையாட்டு இடம் பெற்ற நலுங்கு 'அதிநவீனம்'!
ஹலோ சகா! "ஆர்தி நீங்கள் கெட்டிக்காரர்" என தங்களிடம் நானானியின், (நம்மை) முட்டாள்(களாக்கிய) தினப் பதிவின் பின்னூட்டத்தில் பாராட்டு பெற்ற நான், நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபடி 'ராமலக்ஷ்மி'யாக தங்கள் வலைப் பதிவுக்கு வருகிறேன்.
after publishing 'be silent' you too became .waiting for your idukai.
Post a Comment