Sunday, July 6, 2008

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்

4/7 வெள்ளியன்று தென்காசியில் ஒரு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்காக இரு நண்பர்களுடன் சென்றேன்.

மெல்லிசைக் குழு வல்லிசை முழங்கிகொண்டிருந்தார்கள். இசைக்குழுவினர் தங்கள் வால்யூம் லெவலை சபையின் அமைப்பு, விருந்தினர் எண்ணிக்கை என்று அநுசரித்து வைத்துக் கொண்டால் கேட்க நன்றாக இருக்கும், கல்யாண வீட்டில் உறவினர், நண்பர்களை பல நாட்களுக்குப் பிறகு சந்திப்போம். அவர்களுடன் பேசமுடிவதில்லை.

பாடிக்கொண்டிருந்த பெண் பாட்டுக் கேற்றபடி ஆட்டம் போட்டாள். கல்யாண வீட்டில் பாட என்று பாடல்களைத் தேர்வு செய்து ரிஹர்சல் பார்த்து வந்து பாடினால் கேட்க சுவையாக இருக்கும்.

குழுவின் லீடர் ஒரு கேள்வி கேட்டார், பதிலை சீட்டில் எழுதி தருமாறும் நிறைய சரியான பதில் இருந்தால் குலுக்கல் முறையில் பரிசு என்றும் சொன்னார்.

"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....." மலைக்கள்ளன் படத்தில் செளந்தரராஜன் பாடிய இப்பாட்டை எழுதியவர் யார்? இதுதான் கேள்வி.

படத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் அது. மேடை ஏறி அந்த பாட்டை பாடவேண்டும் என்று சொல்லியிருந்தால் கூட தாளம்/வரி பிசகாமல் பாடியிருப்பேன். யார் எழுதியது என்று மறந்து விட்டேனே என்று வெட்கமாக இருந்தது.

வந்த சீட்டுக்கள் எல்லாமே--உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி, கா.மு.ஷெரிப்----தவறான பதில் என்று சொல்லிவிட்டார்.
படத்தின் வசனகர்த்தா மு.கருணாநிதியே இந்தப் பாட்டெழுதினாரோ என நினைத்தேன்.
நாமக்கல் கவிஞரோ? கதை தானே அவருடையது?

நீங்கள் யாராவது சொல்லுங்களேன்

6 comments:

ராமலக்ஷ்மி said...

நாடறிந்த கருணாநிதியும் இல்லை,
நாமக்கல் கவிஞரும் இல்லை எனில்
சின்னப் பயலே சின்னப் பயலே எனப்
பாடிய பட்டுக் கோட்டையாரா?

சகாதேவன் said...

அது நாமக்கல் கவிஞர்தானாம்.

நானானி said...

கொஞ்சம் லேட்! பரவாயில்லை.
நானும் பட்டுக்கோட்டையாரைத்தான் சொல்ல வந்தேன். காரணம் படத்தில் டைட்டில் பாட்டை எழுதியவரும்
அவர்தான். அதை வைத்து ஒரு
ஃப்ளூக்கில் அடிக்கலாமென்று. ஹி..ஹி..!

goma said...

மேடை ஏறி அந்த பாட்டை பாடவேண்டும் என்று சொல்லியிருந்தால் கூட தாளம்/வரி பிசகாமல் பாடியிருப்பேன்.what a pity, tenkasi music lovers missed a golden oppertunity .i am not joking .really i mean it

சகாதேவன் said...

எத்தனை காலம் ஆனாலும்
மறக்க முடியாத பாடல் அது.
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
சகாதேவன்

கோவை விஜய் said...

இந்த வருடம் குற்றாலச் சாரல் கொஞ்சம் வீளையாட்டு காட்டுகிறதா? கேரளவிலே மழை குறைவாமே.மரத்தையெல்லம் வெட்டி மழைக்கு ( சாரலுக்கு)தடா போட்டுவிட்டார்களே!

தி.விஜய்
pugaippezhai.blogspopt.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 20 மறுமொழிகள் | விஜய்