இவைதான் புது வருடம். என்ன வித்தியாசம்? நாளை காலையும் சூரியன் வழக்கம் போல கிழக்கில்தான் உதிக்கும். பால்காரர் வருவார், பேப்பர் வரும். டிவியில் குடியரசு தலைவி, பிரதமர், முதலமைச்சர், நடிகநடிகையர், மற்றும் பலர் வாழ்த்து சொல்வார்கள். இன்று இரவு 12 மணி வரை கொண்டாட்டம் என்று கூத்து நடக்கும். நாமும் பார்க்கும் எல்லோருக்கும் ஹாப்பி நியூ இயர் சொல்வோம். ஏன் வருடம் முழுதும் தினம், ஹாப்பி டுடே சொல்லக்கூடாது.
புத்தாண்டு தீர்மானம் என்று ஏதாவது நினைத்து மறுநாளே மறந்து விடுவோம். புது டைரி வாங்கி மார்ச் மாதம் வரை எழுதுவோம்.
என் தீர்மானங்கள்:
தினம் முடியாவிட்டாலும் வாரம் ஒரு பதிவு எழுத வேண்டும். விசேஷ வீடுகளில் மட்டுமே சந்திக்கும் உறவினர்கள் வீட்டுக்கு மாதம் ஒரு முறையாவது சென்று வரணும். கடிதம் எழுதும் பழக்கம் அடியோடு போய்விட்டது. நிறைய எழுதணும். நம்மிடம் வேலை பார்ப்பவர் யாரும் சொன்னதை செய்யவில்லை அல்லது தப்பாக செய்தாலோ கோபப் படக்கூடாது.இப்போது ஆள் கிடைப்பதே அரிது. தினம் குட் மார்னிங் போல ஹாப்பி டுடே சொல்லணும். இந்த தீர்மானங்களை நாளை மறந்துவிடக் கூடாது
ஹாப்பி டுடே
7 comments:
உங்களுக்கும்..."ஹப்பி டுடே!!
ஹப்பி எவ்ரி டே!!!சேரியா?
அடுத்த பதிவுக்கு இன்னும் ஒரே வாரம்தானிருக்கு...ஞாபமிருக்கட்டும்!!!
ரொம்ப சரிங்க. ஹவ் அ நைஸ் டே ஆல் த்ரூ த இயர்.
ஒவ்வொரு தினமும்
புது தினமே
ஒவ்வொரு கணத்தையும்
பயனுடன் கழிப்போமே!
kadathakala sogagalai marakka,kadathagala elappugalaimarkka enakku newyear thevaipadukirathe 2sogathil 1sogathai kalithal meethi 1sogamthane
enathu karuthum eattrukolapaduma.
Good one, but I think wishing others a happy new year is the summation of all the "Happy today - Everyday " we want to wish others ,We can also consider it as a day specially designed so that we wish our near and dear ones to let them know we care ,even if we don't wish them everyday .
Happy New Year !! :) :)
இந்த விஷயத்தில் என் அபிப்பிராயம் உங்களோடு ஒத்துப் போகிறது.
நான்கு வருடஙக்ளுக்கு ஒரு முறை பிப்ரவரிக்கு ஒரு நாள் எக்ஸ்ட்ரா.அவ்வளவுதான் .
நீ ஹேப்பி நான் ஹேப்பி .
i am ok you are ok .
i too accept with your idea............ festival or anything for that matter is always one more day in life....i personally feel that the day you do some good to others is a HAPPY DAY.........wish you and your family a very happy 365 days in 2009
Post a Comment