Wednesday, December 3, 2008

இந்த காரைப் பார்த்திருக்கிறீர்களா?







1948ல் ஆஸ்டின் A 40 என்று ஒரு அழகிய கார் வந்தது.

49 - 50ல் என் சித்தப்பா ஒரு புது கார் வாங்கினார். அவர் மத்தியானம் தூங்கும்போது என் கஸின் அதை எடுத்துக்கொண்டு வருவான். நாங்கள் இருவரும் டிரைவர் ரவீந்திரனுடன் ஹைகிரொளண்ட் சென்று ஓட்டிப் பழகினோம். ஊரில் அது போல வேறு யாரிடமும் இருந்ததாக நினைவில்லை.

"காஞ்சனா" என்று ஒரு படம் வந்ததே அதில் ஒரு பாடல் காட்சியில் இந்த பெடல் கார் வரும். A 40 காரே குட்டி போட்டது போல அத்தனை அழகு. சித்தப்பாவும் நீண்ட நாள் தன் A40 காரை வைத்திருந்து பின் ஸ்பேர் சாமான்கள் கிடைக்காததால் விற்று விட்டார். அதன் பின் நான் அந்த காரை மறந்துவிட்டேன்.

நேற்று தினமணி நாளிதழில் செய்தி- "பெடல் கார்- உலகப்போருக்குப் பிறகு ஆஸ்டின் நிறுவனம் குழந்தைகளுக்காக வடிவமைத்த பெடல் கார் 'J40' தற்போது லண்டனில் உள்ள அருங்காட்சியத்தில் விற்பனைக்கு வந்துள்லது. ரூ 1.5 லட்சம் வரை இது ஏலம் போகும் என எதிபார்க்கப்படுகிறது".

ஆர்வத்துடன் கூகிளில் ஆஸ்டின் J 40 என்று அடித்து ப்ரொளஸ் செய்தால் கிடைத்த தகவல்:

1948 ஆஸ்டின் A 40 காரை அப்படியே ஸ்கேல் மாடலில் (நீளம் 5' 3"; அகலம் 2' 3 1/2" ; உயரம் 1' 10" ) 1949 லிருந்து 1971 வரை தயாரிப்பில் இருந்ததாம். அமெரிக்கா, டென்மார்க், கனடா நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியானதாம். ஆரம்பத்தில் இதன் விலை 27 பவுண்டு.


இன்று ஏலத்தில் என்ன விலை போகுமோ?

1 comment:

நானானி said...

ஆஹா! A40 ஆஸ்டின் கார்! நானும் இந்தக்காரில்தான் முதன் முதல் சாராள்தக்கர் காலேஜ் கிரவுண்டில் கியரில் போட்டு மெதுவாக மூவாகும் படி செய்துதருவார் அதன் ட்ரைவர் ஏறி உக்கார்ந்து ஸ்டீரிங்கை மட்டும் அசைத்து அசைத்து மைதானத்தை வலம் வருவேன். சின்னக்காவை ஹாஸ்டலிலிருந்து வீட்டுக்குக் கூட்டிப்போகப் போகும் போது. மற...க்க முடியாத சம்பசம் அது!!

மேலும் 'வள்ளியின் செல்வன்' படத்தில் ஜெமினியின் குட்டிப்பையன் இதே பெடல்காரில் அமர்ந்து வருவான். ஞாபகமிருக்கா?