பதவி, புகழ் எல்லாம் பெறுகிறார்கள். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி - இப்போது ராகுலும் தேர்தலில் நிற்கிறாராம்.
இங்கே ஸ்டாலின், கனிமொழி, அழகிரி என்று அவர்கள் ராஜ்யம்தான். கலை உலகில் மட்டும் ஏன் வாரிசுகள் திறமை இருந்தும் புகழ் பெற முடிவதில்லை?
எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்" என்று பாடி சிகரம் தொட்ட டி.எம்.செள்ந்த்ர்ராஜனின் மகன் (51) 25 வருடங்களாக இரு தலைமுறை இசை அமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர் மகன் டி.எம்.எஸ்.செல்வகுமார் என்று (9/4/09 குங்குமம் இதழில் ஆர்.எம்.திரவியராஜ் எழுதிய செய்தியை படித்ததும் ரொம்ப சங்கடமாக இருக்கிறது.
தூக்குதூக்கி படத்தில் சிவாஜிக்கு பின்னணி பாட சி.எஸ் ஜெயராமன் தான் சரி என படக்குழுவில் எல்லோரும் சொல்ல, இசை அமைப்பாளர் ஜி.ராமனாதன் சிவாஜியிடம், 'மதுரை பையன் ஒருவன் இருக்கிறான்.நம் படத்தின் ஒரு பாடலை பாடச் சொல்கிறேன். கேட்டுப் பாருங்களேன்' என்று சொன்னதால் பாடி பிரபலமானவர் செளந்தர்ராஜன். டி.எம்.எஸ். செல்வகுமாரை அப்படி தூக்கிவிட யாரும் இல்லாமல் போனது ஏன்?
இப்ப எல்லாம் பின்னணி பாடகர்கள் ரொம்ப பிஸி. அவர்களுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் ரிகார்டிங்க்கு வருவார்களாம். ரிகர்சல் பாடி பின் ரிகார்ட் செய்ய முடியாததால் ஒரு ஜூனியர் பாடகர் ட்ராக் பாட, டேப் செய்து வைத்திருப்பார்களாம். அதைக் கேட்டு முன்னணி பின்னணிப் பாடகர் பாடுவாராம். "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா" - காதல் கோட்டை படத்துக்காக இதை ட்ராக்கில் கேட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரொம்ப நன்றாக பாடியிருக்கிறாரே, இவரே இந்த பாட்டை பாடட்டும் என்று சொன்னதால் அந்த ஜூனியருக்கு சான்ஸ் கிடைத்ததாக படித்த ஞாபகம்.
"துள்ளாத மனமும் துள்ளூம்" என்று தூர்தஷ்னிலும், "சொக்குதே மனம்" என்று ஜெயா டிவியிலும் சினிமா பாடல் நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன அதில் கூட டி.எம்.எஸ் பாடிய பாடல்களை பாட அவர் பிள்ளைகளை அழைப்பதில்லை. அப்பா பாடிய எம்.ஜி.ஆர் பாட்டுக்களையும் சிவாஜி பாட்டுக்களையும் டி.எம்.எஸ் செல்வகுமாரும் டி.எம்.எஸ் பால்ராஜும் தங்கள் ரிதம் ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் மேடைகளில் பாடுகிறார்களாம். என் பாட்டுக்கள் என் பிள்ளைகளை வாழ வைக்கும் என்று வேதனையுடன் சொல்கிறாராம் டி.எம்.எஸ்.
டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகரான அழகிரி, அவருக்காக மதுரையில் ஒரு விழா நடத்தினார். அத்துடன் அவர் பிள்ளைகளை சினிமாவில் பாடவைக்க அவர் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் டி.எம்.எஸ் இனி வேதனைப் படமாட்டார்.
5 comments:
//ஆணையிட்டால், அது நடந்து விட்டால் டி.எம்.எஸ் இனி வேதனைப் படமாட்டார். //
கரைக்டா சொன்னீங்க.
சாகா வரம் பெற்ற அவர் பாடல்கள் அவர் குடும்பத்தை வாழவைக்கும். அதே நேரம் திறமைகள் ஒரு நாள் வெளி வந்தே தீரும்.
சீர்காழியின் கம்பீரம் அவர் மகனிடம் இல்லையே? கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தால் கிடைத்திருக்குமோ.
இந்த இருவரின் குரல்வளத்துக்கு இனிமேல் யாராவது பிறந்துதான் வரவேண்டும்.
//http://sivamgss.blogspot.com/2009/04/blog-post_5773.html//
kindly see it. Thank You for coming and commenting.
யார் என்ன செய்ய முடியும்.
வேதனைதான்.நாம் எழுதி ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்ளலாம்.
நல்ல பதிவு சார்.
நன்றி.
நனானி.
ரொம்ப சரியாய் சொன்னீர்கள்!
சீர்காழியின் பாடல்கள் காலத்தை வென்று நிற்கும் தனித்தன்மை ‘சீர்காழி பாடல்கள்’.
டி.எம்.எஸ் பாடியிருந்தாலும் அவை எம்.ஜி.ஆர்.- சிவாஜி பாடல்களே!
இருவரும் ஒப்பாரும் மிக்காரும் இல்லதவர்கள்.
சீர்காழியின் மகன் சிவசிதம்பரம் சினிமாவிலும், கர்னாடக சங்கீதத்திலும் ‘பத்மஸ்ரீ’ விருது வரை சாதித்து, உலகெங்கிலும் தமிழிசையால் பரப்பி, தற்சமயம் அவரது பாடல்களை ரீமிக்ஸ் செய்து அவரது மானசீக சீடர்களான புதிய பாடகர்கள் சாய் சோலார், மலேசியா ராஜ ராஜன்,முகேஷ் போன்றவர்கள் அடுத்த தலைமுறையில் பாடுகிறார்கள்.
காலங்களும், இசைதரமும்,ஒலிப்பதிவு முறைகள் மாறுகின்ற சூழலில் சிறிய மாற்றம் இயற்கையாய் நிகழும். நாம் என்ன நம் பெற்றோர் போன்று அப்படியே முழுமையாக இருக்கிறோமா? (இன்று எந்த சினிமா பாடலில்/குரலில் கம்பீரம் இருக்கிறது?).
இன்றளவில் பாடகர்களில், சீர்காழியாரின் கம்பீரமும், சங்கீத சரக்கும், செயல்திறமையும், இங்கிதமும் அவருக்கு நிறையவே இருக்கிறது.முயற்ச்சியும் பய்ற்ச்சியும் செய்துள்ளார்,அதைப் பாரட்டலாமே!
அவர் ஒரு கர்னாடக சங்கீத வித்வான், திரை-பக்தி பாடகர் மட்டுமல்ல, படித்த டாக்டர். மருத்துவத்துறை பேராசிரியராக சென்னை மருத்துவக் கல்லூரியில் பணிபுரிபவர். வடபழனி முருகன் ஆலய, கபாலீசுவரர் ஆலய அறங்காவலர் குழுத்தலைவர், தந்தையின் சரிதத்தை எழுதி ஜனாதிபதி கலாம் கையால் வெளிய்ட்டவர், தந்தைக்கு நன்றியோடு பவள விழா - சிறப்பு தபால் உறை நிகழ்ச்சி கண்டவர், பல்கலைகழகங்களில் உறுப்பினர்,பல துறை வித்தகர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். அனாவசியமாக அதிகம் பேசாமல் குரு பக்தியோடு சாதிப்பவர். சீர்காழியின் நல்ல வளர்ப்பு.
குரலில் மட்டுமல்ல, கெளரவமாக அனைத்திலும் கம்பீரம்.
Post a Comment