Tuesday, May 12, 2009

மயிலே மயிலே இறகு போடு,


என்று நாம் கேட்டாலும் போடாது. முருகா முருகா கடலை போடு (நிஜக்கடலைதாங்க- இப்போது கடலைபோடுதல் என்றால் அர்த்தம் வேறு) என்று தினமும் எங்கள் வீட்டு வாசலில் வந்து, கேட்டு சாப்பிட்டு விட்டு என்றைக்காவது ஒரு இறகு போட்டுச் செல்லும். பேத்திகளும் அதை எடுத்து சாமி படத்திலும் புத்தகத்திலும் வைத்திருக்கிறார்கள்.

நண்பர்கள் என்னிடம், "எல்லார் வீட்டு வாசலிலும் அவர்கள் கார், பைக் நிற்கும். உங்கள் வாகனம் அருமை" என்கிறார்கள்.

எங்கள் பகுதியில் சில மயில்கள், வாழ்கின்றன என்றே சொல்லலாம். பூட்டியுள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில்தான் வாடகையில்லாமல் இரவு வாசம். பகலில் இரை தேடி செல்கின்றன.ஒரு நாள் அரிசி, பொட்டுக்கடலை என்று தாமரை போட்டதால் அவை தினமும் வாசலில் வந்து நிற்கும். தாமரையும் வாடா, வாடா என்று சொல்லி ஒரு கை பொட்டுக்கடலை போடுவாள். பேத்திகளுடன் நானும் வாசல் படியில் உட்கார்ந்து பார்ப்பேன்

ஒருநாள் மேகமூட்டமாக இருந்ததால் தோகை விரித்து அழகாக ஆடியது. கேமராவை எடுத்து வருவதற்குள் மயிலுக்கு மூட் போய்விட்டது போல. பறந்து விட்டது. மயில்களை நிறைய படங்கள் எடுத்தேன். பிட் மே மாதப்போட்டிக்கு சப்ஜெக்ட் பறவைகள் என்றதும் செலக்ட் செய்து இந்த படம் அனுப்பினேன்

9 comments:

ராமலக்ஷ்மி said...

மயில் வீடு தேடி வருமென முன்னரே ஒரு பதிவில் சொல்லியிருந்தாலும் இங்கு விவரித்திருக்கும் விதத்தில், மயில் தோகையை விரித்தாற்போல காட்சி கண் முன் விரிகின்றது.

அருமையான படம். வாழ்த்துக்கள்!

goma said...

சகாதேவன்
இதுக்குத்தான் சொல்றது கேமரா எப்பவும் கையோடு இருக்கணும்.
மயிலுக்கு மூடு எப்போ வரும் எங்கே வரும்னு சொல்லமுடியாது....ஆனா கேமரா இல்லாத நேரம் கரெக்டா வரும் .

goma said...

இது புதுசு
மயிலே உனக்கனந்தகோடி நமஸ்காரம்
சகாதேவன் வெற்றிபெற ஆடுவாய்...

goma said...

ஆத்தா ஆடு வளத்தா,கோழி வளத்தா..மயிலு வளக்கலை ஏன்னா ,அது தாமரை போட்ட கடலையிலே
மயங்கி எங்க ஆத்தை விட்டு அவா ஆத்துக்குப் பறந்து போயிடுதே[கமல் குரலில் தொடங்கி சிவாஜி பாணியில் முடிக்கவும்]

MSATHIA said...

சகாதேவன்,வால் பகுதி அளவுக்கு முகம் போகஸ்ல இல்லையே. இன்னும் கொஞ்சம் சரியா போகஸ் பண்ணி எடுத்திருக்கலாமோ?

lucky said...

beautiful photograph........all the best to win the contest

சகாதேவன் said...

ராமலக்ஷ்மி, கோமா, சத்யா, லக்கி, எல்லோருக்கும் நன்றி.
சத்யா, நான் ஷட்டர் ஸ்பீட் 1/1000 வைத்திருக்க்ணும்.
தரையில் இருக்கும் கடலையை மயில் கொத்தி எடுத்த ஸ்பீட் தான்.

நானானி said...

//ஒருநாள் மேகமூட்டமாக இருந்ததால் தோகை விரித்து அழகாக ஆடியது. கேமராவை எடுத்து வருவதற்குள் மயிலுக்கு மூட் போய்விட்டது//

நாந்தான் அப்பவே சொன்னேனே, காமரா இல்லாமல் வெளியே வர வேண்டாமுண்ணு. நல்ல அரிய சந்தர்ப்பத்தை வெகு அருகிலிருந்து க்ளிக்கி எங்களுக்கும் காட்ட விட்டுவிட்டீர்களே...சகாதேவன்?
இதுக்குத்தான் பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்.

சகாதேவன் said...

வாங்க நானானி,
கொஞ்ச நாள் ஊரில் இல்லையா. கிரக சஞ்சாரம் இன்னும் முடியலையோ என்று நினைத்தேன்.

சகாதேவன்