Tuesday, May 26, 2009

பொது வாழ்க்கை அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம்

நான் சொல்லலீங்க, பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அன்றே சொன்னது. நாளை அவரது நினைவு நாள். ஆண்டுக்கு இரண்டுமுறை அவரை நினைப்பதோடு அவர் சொன்னதையும் நினைத்துப் பார்ப்போம். 2008 மே என் பதிவின் ரிபீட் தான்


"நான் ஒரு நாளாவது பிரதமராக இல்லாமல் ஒரு இந்தியக் குடிமகனாக(பிரஜைதான்)என் தினசரி வேலைப்பளுவிலிருந்து ஓய்வு பெற நினைக்கிறேன்" என்று பிரதமர் நேரு, ஏப்ரல் 29, 1958 அன்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கூறிவிட்டு தன் சக அங்கத்தினர்களிடம் ஐடியாவும் அனுமதியும் கேட்டார்.
நேரு மேலும் சொன்னார். "சில வாரங்களுக்கு முன் நான் மாற்றம் இல்லாத வேலை செய்வதாலும், களைப்பாலும் ஒரு மாற்றம் வேண்டி அவ்வாறு சொன்னேன். எல்லோரும் எனக்கு உடல் நிலை சரியில்லை என்று நினைத்து விட்டார்கள். பத்திரிகைகளும் தங்கள் ஊகங்களை எழுதின. உழைக்க வேண்டும், புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இன்னும் உண்டு. மக்களுடன் எனக்குரிய இணைப்பு உறுதியாக உள்ளதுடன் அவர்களுக்காக மேலும் உழைத்து, அவர்கள் குறை தீர்க்க வேண்டும் என்ற என் ஆசை தீரவில்லை. உடல் அளவில் நான் நன்றாகவே இருக்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் திறமையாக பணி புரிவேன் என்று நம்புகிறேன்".
மே 1, 1958 அன்று நடந்த காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நேரு இவ்வாறு நினைக்க காரணம் என்ன என்று விவாதித்தார்கள்.
நேரு, தான் உடல் நிலை சரியில்லாததால் ஓய்வு விரும்பவில்லை என்றும், பல விஷயங்கள் காங்கிரஸ் கட்சியிலும் நாட்டிலும் வித்தியாசமாக நடப்பதுதான் என்றார். பொது வாழ்க்கை சரியான வழியில் செல்லவில்லை என்றும் அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது என்றார். காங்கிரஸ் கட்சியில் மட்டும் நான் சொல்லவில்லை நாடு முழுவதும்தான் என்று கூறி அதனால்தான் என் வழக்கமான தினசரி வேலையிலிருந்து ஓய்வு பெற்று அமைதியாக யோசித்துப் பார்க்கவே விரும்புகிறேன் என்றார்.
ஹிந்து நாளிதளில் This Day That Age பகுதி படிப்பீர்களா? 2008 மே 1, மே 3 இதழ்களில் நான் படித்ததுதான் இது.

3 comments:

ராமலக்ஷ்மி said...

//பதவி, அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது//

மிகச் சரி.

நேருவின் நினைவு நாளில் அவர் சொன்னதை நினைவு கூர்ந்து, சிந்திக்க வைத்திருக்கிறீர்கள்.

goma said...

அவ்வப்போது பதிவிட்டாலும் நீங்கள் எடுத்தாளும் கருத்துக்கள்,”இந்தியர்கள் நாம் ,தலைவர்களாக,தொண்டனாக , குடிமகனாக இப்படி இருக்க வேண்டும் ஆனால் இப்படி இருக்கிறோமே”என்று ஏங்குவது ஆணித்தரமாகத் தெரிகிறது.

நானானி said...

ஆக...ஒண்ணுமே நல்லாலே நாட்டிலே. அறுவருப்பாகவும்(ஸ்பெல்லிங் சரியா?)அசிங்கமாகவும் இருக்கு. சேவையா? அது எங்கேயிருக்கு? சமையலறையில் மட்டும்தான் இருக்கு.
வீடுக்கொரு மகன் ராணுவத்துக்கு வேண்டுமென்றார்கள், அன்று.
வீட்டுக்கொரு மந்திரி வேண்டுமென்கிறார்கள் இன்று.
இதைக் கண்டிக்க யாருமேயில்லையா?