Wednesday, June 17, 2009

பீலியெய் சாகாடும்...........மிகுத்துப் பெயின்

மயிலிறகுதான் என்றாலும் அதை அளவுக்கு மேல் ஏற்றினால் வண்டி அச்சு முறிந்து விடும் என்ற வள்ளுவர் (குறள் 475) சொல்லைக் கேட்காமல் வைக்கோல் லோடு ஏற்றிச் செல்லும் நம்மூர் லாரியின் படம், கோமா தன் பதிவில் ( valluvam-rohini.blogspot.com அதையும் பாருங்கள் ) விட்டிருந்தார்.



கன்டெயினர் லாரியிலிருந்து எடுத்தது போலிருக்கும் இந்த வைக்கோல் லாரியைப் பார்த்ததும் படம் எடுத்தேன். இது சிகாகோவிலேங்க. வள்ளுவர் சொல்லை அமெரிக்கர்கள் எப்படி கேட்கிறார்கள் பாருங்கள்.


6 comments:

goma said...

wah..super
எவ்வளவு அழகா centre of gravity பார்த்து வண்டி குடை சாயாமல் கொண்டு செல்கிறார்கள்.

goma said...

எதிரே வரும் வாகனங்களுக்குச் சிரமம் தராமல் கண்டைனர் லாரி போல் அமைப்பாக இருக்கிறது....
இவையெல்லாம் அங்கே இயந்திரங்கள் செய்கின்றன...என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது

நட்புடன் ஜமால் said...

குறள்-களை ஞாபகமூட்ட இது போன்ற வழிகள் நலம்.

naanani said...

சால மிகுத்து பெயின் ஆனாலும் அங்கெல்லாம் நம்மூர் போல் அல்லாமல் பொறுப்போடும் அக்கரையோடும் எடுத்துச்செல்வதால் எந்த சாகாடும் வாராது காண்.

சகாதேவன் said...

வாங்க கோமா
உங்கள் பதிவு பார்த்த மறு நாளே நான் இந்த லாரி பார்த்ததும் படம் எடுத்தேன்

நானானி,
தினம் தமிழ்மணம் பார்க்குமுன் 9-வெஸ்ட் பார்ப்பேன். என்ன லாங் லீவ். சீக்கிரம் வாருங்கள்.

நட்புடன் ஜமால்,
புது வருகைக்கு நன்றி. திருக்குறள் கூகிளில் இருக்கிறது. ஓய்வு நேரத்தில் பாருங்கள்
அடிக்கடி வாருங்கள்

ராமலக்ஷ்மி said...

நீட்!