Monday, June 8, 2009

TEA-SHIRT BAG தெரியுமா?

முன்னெல்லாம் என் அத்தை, வீட்டுக்கு வாங்கிவரும் சாமான் பொட்டலங்களை, அந்த நியூஸ்பேப்பர் கிழியாமல் பொறுமையாக பிரித்து, கட்டி வரும் சணல் கயிறை (ரப்பர் பேண்ட் வரவில்லை) முடிச்சு போட்டு சேர்த்து பந்தாக சுருட்டி வைத்திருப்பார்கள். மெட்ராஸிலிருந்து நாங்கள் ஊர் திரும்பும்போது ரயிலில் இரவு சாப்பிட இட்லியை வாழை இலையில் மடித்து சேர்த்து வைத்திருக்கும் பேப்பரில் பாக் செய்து சணலால் கட்டி தருவார்கள்.

இன்று உலகெங்கும் கடைகளில் சாமான் பாக் செய்து தரப்படும் ப்ளாஸ்டிக் பை செய்ய ஆரம்பித்தது ஸ்வீடன் நாட்டில். அது தோன்றிய வடிவைக் கொண்டு அதை Tea-shirt bag என்றே அழைத்தார்களாம். அமெரிக்காவுக்கே அது 1972ல் தான் வந்ததாம். இப்போ சிகாகோவில் ஹைவே, ஆறு/ஏரிகள், கடற்கரைகளிலெல்லாம் கிடக்கும் ப்ளாஸ்டிக் பை, பாட்டில்களை எடுத்து சுத்தம் செய்ய தன்னார்வர்களை அழைக்கிறார்கள். அவர்களும் வந்து செய்கிறார்கள்.

நம்ம ஊரில் எங்கே பார்த்தாலும், வீசி எறியப்பட்ட இந்த பைகள்தான் கண்ணில் படுகின்றன. குழந்தைகள் ப்ளாஸ்டிக் பை வைத்து விளையாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏர் கண்டிஷனர்களின் மூதாதையர்கள் ரோமானியர்கள். அவர்கள் வீட்டின் சுவர்களில் வாய்க்கால் (Aquaduct) அமைத்து அதில் தண்ணீர் விட்டு குளிர வைத்தார்கள். சில நூறு ஆண்டுகளுக்குப்பின் சீன பேரரசர் க்ஸுவான்சாங், தண்ணீரை ஸ்ப்ரே செய்து விசிறிகள் கொண்டு தன் அரண்மனையை கூலாக வைத்திருந்தாராம். 1842ல் கம்ப்ரஸர் கொண்டு ஐஸ் செய்து வைத்து காற்றை ஜில் ஆக்கினார்கள்.

கடைசியில் 1902ல், Willis Haviland Carrier மின்சாரத்தில் இயங்கும் ஏர் கண்டிஷனர்களை கண்டுபிடித்தார். இந்த சம்மரில் நாம் வியர்வை, கொசுக்கடி எதுவுமில்லாமல் தூங்குகிறோமே, அதற்கு இந்த ஏசி முன்னோடிகளுக்கு நன்றி சொல்வோம்.

9 comments:

goma said...

நம் ஊரில் அதை பனியன் bag என்பார்கள்.
டிஷர்ட்டில் தொடங்கி ஏசியில் முடித்த விதம் அருமை.
என்னுடைய கேள்விக்கு பதில் தர நீங்கள்தான் சரியான க்விஸ்மாஸ்டர்.

french door
french toast
french knot
french polish
french beans.என்னக்க இது ஒரே
french french ச்சா இருக்கே !எப்படிங்க இந்த பெயர் வந்தது.
பார்த்து சொல்றீங்களா.
சீக்கிரமா சொல்லுங்க இல்லேன்னா எனக்கு ஃப்ரென்ச் டென்ஷன்,ஃப்ரென்ச் பைத்தியம் எல்லாம் வந்திடும்

sahadevan said...

ஃப்ரெஞ்ச் டோர் - கார் ஷெட் கதவு
,, டோஸ்ட் - ப்ரெட்,முட்டை பலகாரம்
,, நாட் - எம்ப்ராய்டரி.புள்ளி
,, பாலிஷ் - வார்னிஷ்
,, பீன்ஸ் - யூ.எஸ்ல் கிரீன் பீன்ஸ்,லண்டனில் ரன்னர் பீன்ஸ்
நம்மூர் மார்கட்டில் பீன்ஸ் தான்

ஃப்ரெஞ்ச் பாலிஷ் மட்டும்தான் தெரிந்தது. மற்றதெல்லாம் கூகிள் உபயம்

goma said...

சகாதேவா
பதில் என்னக்கு திருப்தியாக இல்லை .ஏன் இந்த ஃப்ரென்ச் அடை மொழி ?அதான் நான் கேட்டது.
கேள்வி கேட்க நான் ரெடி பதில் சொல்ல நீங்க ரெடியா?

நானானி said...

கோமா கேட்ட ஃப்ரென்ச் டென்ஷன், ஃப்ரென்ச் பைத்தியத்துக்கு விளக்கம் சொல்லலையே...சகாதேவன்?

இல்லேன்னா எனக்கு ஃப்ரென்ச் வெறியே பிடிச்சிடும்.

goma said...

கோமா கேட்ட ஃப்ரென்ச் டென்ஷன், ஃப்ரென்ச் பைத்தியத்துக்கு விளக்கம் சொல்லலையே...சகாதேவன்...

இல்லேன்னா எனக்கு ஃப்ரென்ச் வெறியே பிடிச்சிடும்..
..
ஓஹோ ஃப்ரென்ச்லே இது வேற இருக்கா..நானானிக்கு .ஃப்ரென்ச் வெறி பிடிக்காம பார்த்துக்ற பொறுப்பு வேற சேர்ந்தாச்சு..

சகாதேவன் said...

கொஸ்டின் பாஸ்.
டிக்ஷ்னரியில் ஃரெஞ்ச் அது, ஃப்ரெஞ்ச் இது என்று 1 1/2 பக்கம் இருந்தது. ஏன் ஃப்ரெஞ்ச ஆனது என்று இல்லை.
அட நீங்களே சொல்லுங்கப்பா?

goma said...

ஃப்ரான்ஸ் போக டிக்கெட் எடுக்கப் போறேன்...நேரே அங்கேயே போய் கேட்டுட்டா போச்சு.

நானானி said...

அப்படியே..எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட்!!!!!!!!!!!!

goma said...

நானானி நீங்க எப்போ நித்திரை கொள்வீர்கள் என்று சொல்லுங்கள்..அதை அனுசரித்து டிக்கெட் எடுக்கிறேன்..நித்திரையில் வரும் கனவில்தான் நம் யாத்திரை.

[யாரோ ரெண்டு மாத்திரை பார்சல் என்று கூவுவது கேட்கிறது]