Wednesday, July 29, 2009

கதையல்ல நிஜம்

Racism ஐ எதிர்ப்பவரா நீங்கள்? இதைப் படிங்க. பிரிட்டிஷ் ஏர்வேஸ்ஸுக்கு ஒரு ஷொட்டு கொடுங்க.

ஜோஹானர்ஸ்பர்கிலிருந்து (காந்தியை ரயிலில் இருந்து பிரிட்டிஷ்காரர் தள்ளிவிட்ட தென் ஆப்பிரிக்கா ஊர்தான்) லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், எகானமி க்ளாஸில் இருந்த ஒரு 50 வயது வெள்ளைக்காரி ஏர்ஹோஸ்டஸை கூப்பிட்டு, நான் டிக்கெட் புக் செய்த போது யோசித்திருக்க மாட்டீர்கள், இப்போ பார், ஒரு கறுப்பு மனிதனை என் பக்கத்தில் உட்கார வைத்து விட்டீர்களே, என்க்கு வேறு சீட் கொடு என்று கோபமாக சொன்னார்.

ஏர்ஹோஸ்டஸ் மிகவும் பணிவுடன், ஸாரி, எகானமி க்ளாஸில் ஒரு சீட்டும் காலி இல்லை. கொஞ்சம் பொறுங்கள், என்ன செய்யலாம் பார்த்து வருகிறேன் என்று சொல்லி சென்றார். சில நிமிடங்களில் திரும்பி வந்தவர் வெள்ளைக்காரியிடம், பிஸினஸ் க்ளாஸிலும் சீட் இல்லை. காப்டனிடம் சொன்னேன். அவர் ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஒரு சீட் இருக்கு. ரூல் படி செய்யக்கூடாது ஆனாலும் ஒரு பயணி ரொம்ப வருத்தப் பட்டால் மாற்றி விடுனு சொல்லிட்டார் என்றவள், அந்த வெள்ளைக்காரி பேசுமுன், பக்கத்திலிருந்த கறுப்பு மனிதரிடம், எக்ஸ்யூஸ் மீ ஸார், உங்கள் ஹாண்ட் பாக்கேஜை எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு ஃபர்ஸ்ட் க்ளாஸில் ஒரு சீட் இருக்கிறது என்றாள்

இது வரை பயணி போட்ட சண்டையையும், ஏர்ஹோஸ்டஸ் அதை சாமர்த்தியமாக சமாளித்ததையும் பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் எழுந்து நின்று கை தட்டினார்கள்.

ஈ மெயிலில் இதை அனுப்பியவர், சில நண்பகளுக்கு ஃபார்வர்ட் செய்யுங்கள். டெலிட் செய்யுமுன் ஒருவருக்காவது சொல்லுங்கள் என்று எழுதி இருந்தார். எத்தனை பேருக்கு சொல்லி விட்டேன்

7 comments:

வந்தியத்தேவன் said...

ஆங்கில வடிவத்தையும் தாருங்கள் அப்போதான் பலருக்கு அனுப்பமுடியும்

Unknown said...

இது நிஜமல்ல, கதை.

சகாதேவன் said...

வெல்கம் c
தலைப்பை மாற்றி விட்டேன்

வாங்க வந்தியத்தேவன்,
ஆங்கில வடிவத்தையும் தந்திருக்கிறேன்.
அனுப்புங்கள்

சகாதேவன் said...

c,
இது நடந்ததுதானாம்.
அதான் ஆங்கில வடிவத்தை
தந்துவிட்டேன்

சகாதேவன் said...

என்ன இருந்தாலும் நாம் தமிழ் பதிவு எழுதுகிறோம்.அதான் தமிழிலேயே இருக்கட்டும் என்று திருத்தி விட்டேன்

goma said...

ஜோஹானர்ஸ்பர்கிலிருந்து (காந்தியை ரயிலில் இருந்து பிரிட்டிஷ்காரர் தள்ளிவிட்ட தென் ஆப்பிரிக்கா ஊர்தான்)

பிறர்கின்னா முற்பகல் செயின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் என்று வள்ளூவர் சொன்னது இதைத்தானோ....

யாசவி said...

story or true but intresting