Saturday, August 29, 2009

வீட்டிலே இருக்கும்போது லாண்ட்லைனில் பேசுறது காமன் சென்ஸ்

டிவி விளம்பரங்கள் பார்க்கிறோம். அதில் தினம் கேட்கும் வார்த்தைகள் எங்காவது கேட்டால்...........


நேற்று பகல் ஹோட்ட்லில் சாப்பிட்டு வெளியே வந்தோம். சர்வர் பின்னால் ஓடி வந்து, சார் பையை மறந்துட்டீங்களே. நீங்கள் எதிரே ரிஜிஸ்ட்ரார் ஆபீசிலிருந்து சாப்பிட வந்ததை பார்த்தேன். இந்தாங்க, உங்க பத்திரம், பத்திரமா பார்த்துக்கங்க, என்றான்

நண்பன் லட்டு தந்தான். ஓ, திருப்பதி போனியா? ரொம்ப கூட்டமோ, செலவு என்ன ஆச்சுனு கேட்டேன். சே என்னை மொட்டை அடிச்சுட்டான்யான்னு சொல்றான்.

டப்பாவில் இருந்த கடைசி சாக்லெட்டை வாயில் போடுற நேரத்தில் அவள் வந்துட்டா.எந்த ஸ்கூல்? டீச்சர் சொல்லிக்கொடுக்கலே, ஷேரிங் அப்படின்னா. ஒண்ணுதான் இருக்கு எப்படி பாதியாக்கனு கேட்டா,
சும்மா கடிச்சுடுங்கங்கிறா.

வீட்டில் ஒரு நாள் என் செல்ஃபோனை எங்கே என்று தேடினேன். அவசரமா பேசணும் யாராவது பார்த்தீங்களா என்றேன். வீட்டிலே இருக்கும்போது லாண்ட்லைனில் பேசுறது காமன் சென்ஸ் அப்படினு சொல்றா என் பேத்தி.

ராமு, சோமு, சீனு மூவரும் வந்தார்கள். சீனு சட்டை எல்லாம் மண்ணா இருந்தது. என்னை பார்த்ததும் நான் விழுந்துட்டேன் என்று சொன்னான். ராமு நீ தள்ளி விட்டாயான்னு கேட்டா சொல்றான் , நா தள்ளல ஸார். சோமு, நீயான்னா, அவனும் நா தள்ளல ஸார்ங்கிறான்

4 comments:

goma said...

உங்களை மாதிரி டீவி ரசிகர்கள் இருக்றவரைக்கும் விளம்பர லொள்ளுகளை யாரும் அசைச்சுக்க முடியாது...அசைச்சுக்க முடியாது....அப்பப்ப வந்தாலும் அழகாத்தான் சொல்றீங்க...

நானானி said...

ஆனா...எனக்கு நாக்கு தள்ளிடுத்து.
லல்லாருக்கு உங்க விளம்பர பின்னூட்டங்கள்!!!

சகாதேவன் said...

கோமா,
நீங்க டிவியில் விளம்பரம் வந்ததும் சானல் மாற்றுபவரா?
3 ரோஸஸ் டீ, அம்மா, அப்பா கண்ணைப் பொத்தி சர்ப்ரைஸ் சொல்ல குழந்தைகள் கேக்கையும், கிப்டையும் கொண்டு வருவாங்களே, டண் டணா டண், 104 டிகிரி காட்டுவாரே, அந்த ஐடியா, நடிப்பு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

நானானி,
நல்லா இருக்கா? நன்றி

goma said...

எனக்கு பிடித்த லேட்டஸ்ட் விளம்பரம்.

”....இன்னும் ரெண்டு சக்கரம்தான் பாக்கி அங்கிள் அதுவும் சீக்கிரமே வாங்கிடுவேன்...”

என்று தன்னம்பிக்கையோடு சொல்லி ,சைக்கிளில் விரையும், ரின் சிறுவன்.