மிஸ்ஸியம்மா படம் பார்த்திருக்கீங்களா? இன்று கே டிவியில் பார்த்தேன்.
உடனே உங்களுக்கு, "பிருந்தாவனமும் நந்தகுமாரனும்.." ஞாபகம் வரும்.
அதில் எல்லா பாட்டுக்களுமே நன்றாக இருக்கும்.
ஜெமினியும் சாவித்திரியும் வேலை கிடைக்காமல் ஒரு பள்ளிக்கூடத்திற்கு ஆசிரிய/யை வேண்டும். தம்பதிகளாக இருக்கவேண்டும் என்ற விளம்பரத்தை பார்த்து இருவரும் வந்து, அப்படி சொல்லி சேர்ந்து கொள்வார்கள். பள்ளி நடத்தும் எஸ்.வி.ரெங்காராவின் மகள் மகாலக்ஷ்மிதான் மேரியாக கிறிஸ்துவ தம்பதியிடம் வளர்ந்தவள். தங்கவேலுதான் அதை கண்டுபிடிப்பார்.
நல்ல சிரிப்பு படம். நிறைய அருமையான பாடல்கள்.
படத்தில் சாவித்திரி (பி.லீலா பின்னணி) பாடும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
"எனை ஆளும் மேரிமாதா
துணை நீயே மேரிமாதா, என்றும்
துணை நீயே மேரிமாதா
பரிசுத்த ஆவியாலே
பரபுத்ரன் ஈன்ற தாயே
பிரபு யேசுநாதன் அருளால்
புவியோடு புனிதம் அடைந்தாய்
எனை ஆளும் மேரிமாதா...
நெறி மாறி வந்ததாலே
நகைப்பானதே என் வாழ்வே
கணமேனும் சாந்தி இல்லையே
அனுதினமும் சோதியாதே
எனை ஆளும் மேரிமாதா...." .
1 comment:
மிஸ்ஸியம்மா படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சகாதேவனின் அடுத்த பதிவு மிஸ்ஸியம்மாதான் .
நான் கணித்தது எதுவும் மிஸ் ஆனதே இல்லை.
நன்றி சகாதேவா.
அந்த படத்தை நான் முதல் முறையாகப் பார்த்து ரசித்தேன்.
இத்தனை நாள் இப்படி ஒரு நல்ல் படத்தை மிஸ் பண்ணிய மிஸ்ஸியம்மாவாக இருந்து விட்டேனே என்று வருத்தப் பட வைத்தது
Post a Comment