Monday, November 2, 2009

அதுக்குள்ள ஆறு மாசம் ஆச்சா

சாக்லேட் விளம்பரத்தில் தூங்கி எழுந்த கும்பகர்ணன் கேட்பாரே, அது போல நான் சிகாகோ வந்து ஆறு மாசம் ஆச்சு. ஆனா நான் தூங்கல்லீங்க. நான் யு.எஸ் போறேன்னு சொன்னதும் என் நண்பர் கேட்டார், 'என்ன பேபி சிட்டிங்கா?'.

பேரன் (2 1/2) பேத்தி(9) உடன் விளையாடி, கதை சொல்லி, சன் டி வியில் எல்லா சீரியலும் பார்த்து, ஆறு மாதம் போனதே தெரியலே.

இன்று மாலை ஊருக்கு போகிறேன். ஊர் போனதும் ஜெட் லாக் எல்லாம் முடிந்ததும் ப்ளாக் எழுதுகிறேன். Bye Bye

5 comments:

Anonymous said...

Bye Bye

ராமலக்ஷ்மி said...

WELCOME BACK!

பேத்தியும் பேரனும் மிஸ்பண்ணுவார்கள் ரொம்பவும் என சொல்ல வந்தால், இங்கே இந்தியாவில் உங்களுக்காக வான்வழி மேல் மீன்விழிகள் வைத்துக் காத்திருக்கும் பேத்திகளையும் நினைக்க வேண்டியிருக்கிறதே:)!!

நானானி said...

ஹாட்ர்டி வருக!
சகாதேவரே!
//மீன்விழிகள் வைத்துக் காத்திருக்கும் பேத்திகளையும் நினைக்க வேண்டியிருக்கிறதே:)!!//

அதானே!?!?

goma said...

இப்படியே இருந்தா எப்படி.
அமெரிக்கா போய் வந்து ”அதுக்குள்ளே ஆறுமாசம் ஆச்சா”ன்னு பதிவு போடலாம்னு இருக்கீங்களா.

சகாதேவன் said...

வான்வழி, மீன்விழி - அழகான உவமைகள், ராமலக்ஷ்மி.
பேத்திகள் ரொம்ப மிஸ் பண்ணியிருக்கிறாங்க, நானானி.
அதுக்குள்ள 47 நாளாச்சு, கோமா.
அடுத்த பதிவு விரைவில் எதிர்பாருங்கள்.