Monday, February 1, 2010

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே

கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக்குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே

பசுவைத் தேடி கன்னுக்குட்டி
பால் குடிக்க ஓடுது
பறவை கூட இரையெடுத்து
பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது
தாத்தா தெரியுமா
பாத்தா புரியுமா
தனித்தனியா பிரிஞ்சிருக்க
எங்களால முடியுமா
எங்களால முடியுமா
கோழி ஒரு கூட்டிலே......

அடுத்த வீட்டு பாப்பா இப்போ
அம்மா அப்பா மடியிலே
அதிர்ஷ்டமில்லா பொண்ணுக்குத்தான்
சேர்த்து பார்க்க முடியலே
அம்மா மறக்கலே
அப்பா நினைக்கலே
அங்கும் இங்கும் சேர்த்து வைக்க
எங்களுக்கும் வயசில்லே
உங்களுக்கும் மனசில்லே
கோழி ஒரு கூட்டிலே...

டிவியில் "குழந்தையும் தெய்வமும்" பார்த்தேன். கணவன் மனைவி பிரிந்து வாழ, லல்லி, பப்பி என்ற இரட்டை குழந்தைகள், இங்கொன்றும் அங்கொன்றுமாக வளர்கின்றன. ஒரே பள்ளியில் படிப்பதால் இருவரும் திட்டமிட்டு இடம் மாறி அப்பா அம்மாவை சேர்த்து வைக்கிறதுதான் கதை.அத்தனை விஷயமும் இந்த பாட்டிலே இருக்கும்.

ஷிவானி வந்து, தாத்தா நான் போகோ பார்க்கணும், ரிமோட் கொடு என்றாள். இரும்மா இந்த பாட்டு முடிந்ததும் தந்து விடுகிறேன் என்றேன். அவளுக்கும் குட்டி பத்மினி பாடிய பாட்டு பிடித்திருந்தது. என்னுடன் முழு படம் பார்த்தாள்.

இப்போ குழந்தைகள் பார்க்கிற மாதிரி படமும் இல்லை. பாட்டும் இல்லை. "டாடி மம்மி வீட்டில் இல்லே, தடை போட யாருமில்லே.." எப்படி இந்த பாட்டு.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே

2 comments:

ராமலக்ஷ்மி said...

இந்தப் பாடலும் காட்சியும் எனக்கும் பிடிக்கும்.

//குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே//

உண்மை.

நல்ல பகிர்வு. நன்றி.

goma said...

எதிலும் தரமும், அர்த்தமும் இருக்க வேண்டும் ,என்று எதிர்பார்த்து ,அவை இல்லையென்ற ஆதங்கம் வழக்கம் போல் இந்த பதிவிலும் தெரிகிறது