
திருநெல்வேலி ஜங்ஷனில் அமைந்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி உயர்நிலைப் பள்ளி(ம.தி.தா இந்து......)யின் 150வது ஆண்டுவிழாவின் முதல் நிகழ்ச்சி நன்கொடையாளர் தினம்.




அந்நாளில் ரூ. 1,00,000 வழங்கிய வள்ளல்களை நினைவு கூறும் வகையில் பள்ளியின் கல்விச் சங்கம் இன்று 30/06/2011 கொண்டாடியது.

நெல்லை மாநகராட்சி மேயர் திரு,ஏ.எல்.சுப்பிரமணியன் எல்லோரையும் வரவேற்றுப் பேசினார். கல்விச் சங்க்த்தின் தலைவர் திரு.எஸ்.மீனாட்சிசுந்தரம் தலைமை உரையில் திருநெல்வேலியில் ம.தி.தா, புனித சேவியர், புனித யோவான் பள்ளிகள்தான் அந்நாளில் பிரபலம். அதில் ம.தி.தா முதலில் தோன்றியது என்றார்.
கல்விச் சங்கத்தின் செயலாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிய திரு.அம்மையப்ப முதலியாரின் திரு உருவப் படத்தை கல்விச் சங்கத்தின் நன்கொடையாளர் வழிவழி உறுப்பினர் திரு.T.சந்தீஷ் திறந்து வைத்தார்.


சிறப்பு விருந்தினர் திருமதி உஷாராமன் - முதல்வர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சங்கர்நகர்)தன் உரையில் மகாகவி பாரதி, வ.உ.சி, போன்ற கவியும் சுதந்திரப் போராட்ட வீரரும் பயின்ற பள்ளியின் ஆண்டுவிழாவில் தம்மை பேச அழைத்ததை பெருமையாக் கருதுவதாகக் கூறி மாணவ மாணவியருக்கு அந்த தலைவர்கள் போல வாழ வேன்டும் என்று அறிவுரை கூறினார்.
கல்விச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் திரு.தளவாய்.தி.ராமசாமி நன்றி கூறினார். வெள்ளி (01/07), சனி(02/07) இருநாளும் முனைவர்.கு.ஞானசம்பந்தன் நடுவராக பட்டிமன்றம் - சின்னதிரையும் வெள்ளித்திரையும் மக்களை பண்படுத்துகிறதா? பாழ் படுத்துகிறதா? -என்ற தலைப்பில் பட்டிமன்றம் உட்பட சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பள்ளியின் பழைய மாணவனாக நானும் கலந்து கொண்டு நினைவுகளில் மூழ்கி எழுந்து வந்தேன். நினைவுகள் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்
13 comments:
நினைவலைகள் அடிக்கக் காத்திருக்கிறோம்
நல்ல பகிர்வு. உங்கள் நினைவுகளோடு பயணிக்கக் காத்திருக்கிறோம். தொடருங்கள்.
மதி தந்த பள்ளியை மனம் நிறைந்த நன்றியுடன் சென்ற வருடம் சுற்றிப் பார்த்த நினைவையும் கிளப்பி விட்டது இப்பதிவு.
நல்ல பதிவு.
உங்களது பள்ளிக்கு 150 வருடங்களாகின்றன. வாழ்த்துக்கள்.
எங்கள் ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூரில் 156 வருடங்கள் முடிந்த சி.எம்.எஸ்.. பள்ளி இருக்கிறது.
நன்றி ஐயா.
Sir,
Are you living in tirunelveli. WHich year you studied in MDT.
We are trying to connect all old students
Pl share more about you ?
( do not post this )
நல்ல பகிர்வு.
குட்டி என்ற ஷண்முக சிதம்பரம் விழாவிற்கு வர வில்லையா
வாங்க ராமச்சந்திரன்,
நான் நெல்லைக்காரநதான். 1956-ல் எஸ்.எஸ்.எல்.சி.
ஹலோ ராம்ஜி,
குட்டியின் அப்பா திரு.ரத்னசபாபதி அவர்கள் எங்கள் பள்ளியில் ஒரு போட்டோ க்ளப் தொடங்கி எங்களுக்கு போட்டோ எடுக்க பயிற்சி அளித்தார்கள். குட்டியும் என் நண்பர்தான். முதல்நாள் நிகழ்ச்சி மட்டும்தான் என்னால் செல்ல முடிந்தது. அன்று அவர் வர்வில்லை.
நீங்களும் ம.தி.தா வின் பழைய மாணவரா?
I am proud of working as drawing teacher in M D T HINDU Hr Sec School which is 150 years old...
நான் படிக்கும்போது டிராயிங் டீச்சர், திரு டி.சுப்பிரமணியம் அவர்கள். சிந்துபூந்துரையில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வளவில்தான் இருந்தார். லீவு நாட்களில் தன் வீட்டிலேயே எனக்கு பாரதியார் படம் வரைந்து வாட்டர் கலர் பண்ண எல்லாம் சொல்லித்தருவார். நீங்கள் எந்த ஆண்டு திரு சொக்கலிங்கம்?
சகாதேவன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!
முதன்முறையாக வந்தேன்...வருகிறேன்
"மதி தா என்று நான் கேட்ட ம.தி.தா பள்ளி"....மதி தந்ததா? அதைச் சொல்லவேயில்லையே! சும்மா...!
great schooll
Post a Comment