Friday, July 13, 2007

மலரும் நினைவுகள் வெடிக்கும்

வணக்கம் ப்ளாக்கர்ஸ். நான் சகாதேவன். இன்றுதான் வருகிறேன்.. நான் பேபிக்ளாஸிலிருந்து ஐந்தாம் க்ளாஸ் வரை கான்வென்டில் படித்தேன். ஒரு நாள் நானும் க்ளாஸ்மேட் வாட்ஸன்னும் அருகிலுள்ள பார்க்கில் கேந்திப்பூ நிறையப் பறித்து த் தோட்டக்காரனிடம் பிடிபட்டோம். எங்களுக்கு கிடைத்த தண்டனை லன்ச் டைம் முடியும்வரை பறித்த பூக்களை தலையில் வைத்துக்கொண்டு பள்ளி ஆபீஸ் வாசலில் நின்றோம். எங்களைப் பார்த்துசென்ற அக்கா எல்லோரும் சிரித்தார்கள். மதர் அலெக்ஸ் நீண்ட நாட்கள் இதை மறக்கவே இல்லை. அவர்களுக்கு 90 வயது தாண்டியிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் அவர்களை சென்னையில் சந்தித்த போது அவர்களே இந்த சம்பவத்தை சொல்லி சிரித்தார்கள்.எப்படி ஆரம்பிக்க என்று நினைத்த போது இதுதான் எனக்கு தோன்றியது. நானானி தன் ப்ளாக்கிங்ல் திருநெல்வேலி,கோவில்பட்டி,கடம்பூர்,திருவில்லிப்புத்தூர்,சாத்தூர்,சங்கரன்கோவில் இங்கெல்லாமென்ன கிடைக்கும் என சொன்னார்.நான் கேட்கிறேன். மணப்பாறை, மாயவரம், ஆத்தூர், பொள்ளாச்சி, விருதுநகர் எல்லாம் எதற்கு பேர் பெற்றவை. பாட்டு நினைவு வருதா. பாட்டில் கடைசியாக வரும் அறிவுரை என்ன. நானானீயா பார்க்கலாம்.
சதாதேவன்.

10 comments:

நானானி said...

ஹய்!! நாந்தான் பஸ்ட்!
ப்ளாக் உலகுக்கு வரும் சகோதரர்
சகாதேவனுக்கு இதோ என் பூங்கொத்து.
ஒரு ஈ வந்து கொல்லன் பட்டறையில்
வேலை செய்தாம்!
மணபாறை---மாடு
மாயவரம்---ஏர்
ஆத்தூர்---கிச்சலிச்சம்பா
மருதஜில்லா--ஆளு (நீங்கள் விட்டது)
பொள்ளாச்சி---சந்தை
விருதுநகர்--வியாபாரி
சர்தானா மகாதேவன் சர்தானா?
இதுக்கு மேல் பாட்டும் வேணுமா..?

நானானி said...

சகாதேவன்!
நீங்கள் குறிப்பிட்ட ரெவ்.மதர் அலெக்ஸ் எனக்கும் தலைமையாசிரியர்.about me-யில் என்னைப்ப்ற்றி சொல்லியிருப்பது அவர்கள் சொன்னதுதான்.
மதர் அலெக்ஸ் பற்றி தனிப் பதிவே
போடயிருக்கிறேன்.
பள்ளி ஆபீஸ் வாசலில் தலையில்
பூவோடு நின்ற இருவரில் நீங்களும் ஒருவரா...?அஹ்ஹாஹ்ஹா...!

நானானி said...

பாட்டில் கடைசியாக வரும் அறிவுரை
"சேத்த பணத்த சிக்கனமா செலவு செய்ய பக்குவமா அம்மா கையில்
கொடுத்து போடு.
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க!"

நானானி said...

இப்ப....நாந்தானே?... க்விஸ் மாஸ்டர்?

Anonymous said...

thank u for the invitation to view your blog .i felt happy that i participated in an inaguration function of a ezhuththu payanam.

சகாதேவன் said...

பலே நானானி, நான் எதிர்பார்த்தேன்.நான் இல்லை.னீதான்

ramkumari said...

Hello Mama !!
Welcome to the blogging world :)
I was Thinking and Thinking if it was your id...then I saw your profile .Creative Thoughts Demand An Applause !!! .

ரவி said...

என்ன நானானி மட்டும்தான் உங்களோட மொக்க போடுவாரா ? நாங்களும் போடுவோம் :)))))

தீப்பிடிக்கிற தலைப்பு வெச்சு எழுதுங்க :))

சகாதேவன் said...

நல்வரவு செந்தழல் ரவி, தீப்பிடிக்கும் தலைப்பு என்றால் இப்போது "வெட்டும் புலி"தான் நினைவு வருகிறது.

சகாதேவன் said...

Ramkumari,
Surprised ?
How do you like it.
comment on my posts.
Sahadevan