"உங்கள் வாழ்க்கையை எழுதுவது பற்றி" என்ற புத்தகம், சமீபத்தில் படித்தேன். அதில் சுயசரிதை மாதிரி இல்லாமல் -பள்ளிக்கூடம்,சொந்தம், பார்த்தவர்கள், பரந்த உலகம், ஊர்கள், நினைவுகள், கல்வி, புத்தகங்கள் என்று அத்தியாயங்களாக எழுதி இருந்தார் ஆசிரியர். உடனே எனக்கு ப்ளாக் செய்ய ஐடியா கிடைத்தது. ஹைஸ்கூல் படிக்கும்போது ஒருநாள் தமிழ் ஆசிரியரை சித்திரமாக வரைந்தேன். அருகில் இருந்த மாணவர்கள் சத்தமாக சிரிக்கவும் ஆசிரியர் படத்தை வாங்கி பார்த்துவிட்டு என்னை 'வெடிவால்' என்று திட்டினாலும் நன்றாக வரைந்திருக்கிறாய் என்று பாராட்டினார்.டிவி விளம்பரத்தில் "நாங்கள் படிப்பது நெ1 பேப்பர்.அப்ப நீங்க" என்று கேட்டதும் நான் சொல்கிறேன் - நான் படிப்பது 'சிகாகோ ட்ரிப்யூன்', ஆம் நான் இப்போது சிகாகோவில் மகள் வீட்டில் பேத்தி பேரனுடன் விளையடிக்கொண்டிருக்கிறேன்.அமெரிக்கா என்ற்தும் கெடிலாக்,ப்யூக்,ஓல்ட்ஸ்மோபைல்,ஷெவர்லெ,க்ரைஸ்லர்,டாட்ஜ்,ப்ளிமத் என்றுகார்கள் பார்க்கலாம் என்று வந்தேன். இங்கோ டொயோடா, ஹோண்டா, நிஸான், ஹ்ன்டே என ஜப்பான் கார்கள் இங்கேயே தயாரிக்கப்ப்ட்டு அதிகம் விற்பனையகிறது. "ரீதிங்க் அமெரிக்கன்" என அமெரிக்கன் கார் விளம்பரத்தில் காண்கிறேன்.
முன்னால் ஒரு புத்தகத்தில் படித்தேன். அமெரிக்கவுடன் இன்னொருநாடு ராணுவம் ப்ற்றி பேசியதில் இருநாடுகளும் 2 ஜெனரல்களை எக்சேஞ்ச் செய்ய முடிவனதாம். அதற்கு மற்ற நாடு - 'எங்களுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் & ஜெனரல் எலெக்ட்ரிக் வேண்டும் -.என்ற்தாம். அன்று விளையாட்டாக எழுதப்பட்டாலும் என்ன ஆகும் என்று தெரியவில்லை. லாங் லிவ் அமெரிக்கா.
4 comments:
சுஸ்சுவாகதம்! வெடிவால்!
சகாதேவன்...பஞ்சபாண்டவரில்
ஐந்தாவது பாண்டவர்!
சிகாகோ ட்ரிப்புயூன் படிப்பதாக எழுதியிருந்தீர்கள்.சிகாகோவிலேயே
இருந்து கொண்டு chicago tribune-னின் former editor & publisher
colonel Robert R.McCorm1ick-ன்
reasearch center, cantigny park
போனீர்களா? கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்.
நீங்கள் தேடிய,கெடிலாக்,ப்ளைமௌத்,டாட்ஜ்,செவர்லே,க்ரைஸ்லர் etc..etc..கார்களெல்லாம் உபயோகித்த கார்கள் என்ற பிரிவில்
காட்சி அறைகளில் கொத்துகொத்துதாக
நின்றிருக்குமே...!பார்க்கவில்லையா?சிலவை சாலைகளிலும் ஓடும்.அதுவும் க்ரைஸ்லர்..பழைய ப்ரிபெக்ட்(prefect ford)மாதிரி ஒன்று ஓடுமே அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
படம் பிடிப்பதில்தான் கில்லாடி என்றால் படம் வரைவதிலும்தானா? So, உங்கள் ஆசிரியர் அளித்த பெயர்தானா "வெடிவால் "? உங்கள் பெயரிலேயே (ஆங்கிலத்தில்) 2 எழுத்துக்களை இடம் மாற்றி வைத்துக் கொண்டீர்களோ என நினைத்தேன் முதலில். அமைதியாய் தோற்றமளிக்கும் உங்களிடம் சின்ன வயதில் அத்தனை வால்தனமா? தலையில் பூ சுமந்தீர். ஆசிரியரை சித்திரம் தீட்டி திட்டுக்கள் சுமந்தீர். வேறேன்னன்ன குறும்புகள்?
வெல்கம் ராமலக்ஷ்மி,
பள்ளி நினைவுகள் யாராலும் மறக்க முடியாது இல்லையா.அதுதான்.
நன்றி.
Post a Comment