மணப்பாறை..... பாட்டில் வரும் அறிவுரை--"சேர்த்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண அம்மா கையில கொடுத்துப்போடு செல்லக்கண்ணு, அவங்க ஆற நூறு ஆக்குவங்க செல்லக்கண்ணு".என் அம்மாவின் சிக்கனம் பற்றி ஒரு வரி.
எல்லோருக்கும் புது சட்டை எடுக்கையில் அண்ணனுக்கு சில்க் சட்டை எடுப்பாள். எனக்கில்லையா என்று கேட்டால்,'அவனுக்கு சின்னதானதும் அது உனக்குத்தானே' என்பாள்.அப்படி எனக்கு எத்தனை சட்டை கிடைத்தது தெரியுமா.ருசியாக சமைப்பதிலும் சிறந்தவள்.குண்டான் நிறைய தயிர் சாதம் பிசைந்து பழங்கறி,சுண்டக்கீரையுடன் நிலவிரவில் மொட்டைமாடியில் எங்கள் மத்தியில் அமர்ந்து எங்கள் கைகளிலேயே தருவாள்.அமுதம்.
ஆறு சதுர அடிக்கு புள்ளி வைத்து , புள்ளி விலகாமல் கோடு தவறாமல் அம்மா பொங்கல் .கோலமிடுவதை நாங்கள் உட்கார்ந்து ரசிப்போம். அன்று பத்திரிகைகள் கோலப்போட்டி நடத்தியிருந்தால் முதல் பரிசு அவளுக்கே. நவராத்திரி கொலுவிற்கு பொம்மை வாங்குவதிலும் நேர்த்தியாக 9 படிகளில் அடுக்குவதிலும் மிக்க ஈடுபாடு உடையவள்.
என் அம்மாவுக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று-
"சுந்தரி சொளந்தரி நிரந்தரியே,
சூலியெனும் உமையே-குமரியே".
படத்தில் ஹீரோயின் தோழியுடன் பாட ஹீரோ உடன் பாடுவார். என் அக்கா இருவருடன் என்னையும் பாடச்சொல்லி கேட்டு ரசிப்பாள்.
புதிய ஜில்லா கலெக்டர் பதவி ஏற்றதும் தன் உதவியாள்ரிடம் ஊரில் யாரை முதலில் சந்திக்க வேண்டும் என்று கேட்பாராம். அதற்கு அவர் என் அப்பா பேரைச்சொல்லி அவரே உங்களைப்பார்க்க வருவார் பாருங்கள் என்பாராம். கலெக்டர் என்றால் ஜில்லாவின் முதல் மனிதர் என்று அவரை வரவேற்பார் என் அப்பா. குடும்பம், தொழில், பொது வாழ்க்கை என்று எல்லா வகையிலும் சிறந்து வாழ்ந்தார்.
இன்று ஒரு கேள்வி. -சகோதரிகள் லலிதா,ப்த்மினி, ராகினி மூவரும் சேர்ந்து நடித்த படம் எது.? அடடா ஒரு க்ளூ தந்துவிட்டேன் போலிருக்கிறதே.
8 comments:
vedivaal
oru nalla kudumba chiththiram paarppathu pole irukkirathu .pasaththaith thoyiththu ezhukireer.nilaachoru ondru pothum anaivaraiyum katti izhukka. anony
வெடிவா..ல்!
அம்மாவைபற்றி அருமையாக சொல்லிடீங்க!
லலிதா,பத்மினி,ராகினி சுந்தரி,சௌந்தரி,நிரந்தரியாக நடித்தபடம்....தூக்குத்தூக்கி!
சிவாஜிக்கு டி.எம்.ஸ் தான் என்று
பத்திரம் எழுதிக்கொடுத்த படம்.
வெடிவா...ல்!
அம்மாவைப்பற்றி மிக அருமையாகச் சொன்னீர்கள்!!
லலிதா,பத்மினி,ராகினி சேர்ந்து நடித்த படம்...சுந்தரி,சௌந்தரி,நிரந்தரி?
தூக்குத்தூக்கி! ஓகேயா?
vedivaal
i can make out from your messages ["malarum ninaivugal" ]that you are very much attached to your akkaas.childhood memories and school days memories are always freshens our mind and thought.the word NILAVIRAVIL came out of your mind shows how much you cherished the moonlight dinner.
G.Ram
வெடிவா...ல்!
அம்மாவைப்ற்றி அருமையாக சொல்லிவிடீர்!
லலிதா, பத்மினி, ராகினி சேர்ந்து ந்டித்த படம்...சுந்தரி, சௌந்தரி, நிரந்தரியாக மூவரும் ஒரு தூக்குதூக்கியிருப்பார்கள். சரியா?
உங்கள் அம்மாவைப் பற்றிய நினைவுகள் அருமை.
ராமலக்ஷ்மி,
அருமை என்று என் அம்மாவே சொன்னது போலிருக்கிறது.
ஏன் தெரியுமா?
சகாதேவன்
ஹிஹி..தெரியுது தெரியுது!
Post a Comment