அமெரிக்கர்கள் ஏன் தங்கள் காரை நிறுத்திவிட்டு பப்ளிக் ட்ரான்ஸிட் (பஸ், ரயில்) உபயோகிக்க வேண்டும் ?
பாட்டில்,கேன், காகிதம்,ப்ளாஸ்டிக் எல்லாம் ஏன் ரீசைக்கிள் செய்ய வேண்டும் ?
இந்த இரு கேள்விகளுக்கும் தன்னிடம் 400மில்லியன் காரணங்கள் உண்டு என்கிறார், ப்ராங்க் டி ஜியகோமோ, தன்னுடைய பதிப்பான மெட்ரோ-மேகஸினில்.
2006ல் யு.எஸ் ஜனத்தொகை 300மில்லியன் அடைந்து விட்டதாம். இன்னும் 36 ஆண்டுகளில் 400 மில்லியன் ஆகும் என டிமோக்ராஃபர்கள் சொல்கிறார்கள். இந்த 100மி கூடுதல் மக்கள் காற்று, தண்ணீர் தவிர ஏற்கனவே நெருக்கடியான சாலைகள், ஹைவே எல்லாவற்றிலும் பங்கு கேட்பார்கள்.
பப்ளிக் ட்ரான்ஸிட்களில் பயணிகள் எண்ணிக்கை கூடிவருகிறது. ஆனாலும் மக்கள் கார் ஒட்டுவதைக் குறைப்பதில்லை. 2043ல் தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நீர்,காற்று,சுத்தமான உணவுக்காக போட்டி போடுமே என உணர மறுக்கிறார்கள்.
2006ல் பயணிகள் எண்ணிக்கை கடந்த 49 ஆண்டுகளில் 10 பில்லியன் ஆனதாம். இதை வரைபடமாக சித்தரித்தால் 1 கேலன் கேன்களை உயரமாக அடுக்கினால் பூமியிலிருந்து சந்திரனைத் தொடுமாம். எரிபொருள் எவ்வளவு மிச்சம் ?
ஹாஃப்மன் எஸ்டேட்டிலிருந்து எல்ஜின் அல்லது ஷாம்பர்க் செல்ல ட்வுன் பஸ் இல்லையே என்று எனக்கு வருத்தம் தான். ஊரில் செய்யும் அந்த தொழிலை இங்கே செய்தால் என்ன என்று கூடத் தோன்றுகிறது.
3 comments:
விஜயகாந்த் ரேஞ்சுக்கு புள்ளி விவரங்கள் கொடுத்திருக்கிறீர்கள்.
ஓட்டுனர் அருகே உள்ள பெட்டியில்
பயணிகள் பயணத்துக்கான காசுகளை--$1.75 எங்கு ஏறினாலும் எங்கு போவதானாலும், போடுவதும்.வீல் சேரில் வருபவரை ஏறுவதற்கு உதவுவதும், வரப்போகும் நிறுத்தத்தை முன்னரே அறிவிப்பதும்,
சைக்கிளோடு ஏறும் சிறுவனுக்கு சைகிளை பின்னால் க்ளாம்ப் செய்ய உதவுவதும் மிகவும் ரசிக்கக்கூடியவை. இவற்றையெல்லாம் இங்கே உங்கள் சேவையில் முயன்று பாருங்களேன்.
விஜயகாந்த் ரேஞ்சா?
ஒரு புது ஐடியா.
ஃப்ளைட் கான்சல் ;
க்ரீன் கார்ட் ;
சோ. வ. மு. க ;
என்ன ஒரு 4 வருடத்திற்கு ஊருக்கு முடியாதே ?
Thanks, I'm waiting for you to start :) I will be on this for my daily commute, just like I did going to College !
-baby.
Post a Comment