Friday, September 28, 2007

கிரிக்கெட்- விளையாட்டா? வியாபாரமா?

1983க்குப் பிறகு 2007ல் இந்தியா உலகக்கோப்பை வென்றது பெருமைதான்.ஆனால் அன்று உள்ள விதிகள் என்ன? பின் ஒன்டே மாட்ச் வந்தது. இன்று ட்வென்டி- 20. வியாழனன்று நாடு திரும்பிய கிரிக்கெட்டர்களுக்கு(வீரர்கள்/ஹீரோக்கள் அல்ல) அளிக்கப்பட்ட வரவேற்பும் பரிசளிப்பும் மிகையானது. 30 கிலோமீட்டருக்கு ட்ராஃபிக் ஜாம். மழையில் பைத்தியங்கள்(மக்கள்தான்) காத்து நின்று கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. வான்கடே ஸ்டேடியத்தில் மேட்ச் பார்க்கக்கூட இவ்வளவு கூட்டம் வருமா என்று தெரியவில்லை.
ஆசியக்கோப்பை வென்ற ஹாக்கி ப்ளேயர்களுக்கு இத்தனை பரிசு தரப்பட வில்லையே என்று கேள்வி எழ, ஒரு முன்னாள் கிரிக்கெட்டர் டிவியில் விளக்குகிறார்- ஆசியக்கோப்பையை விட உலகக்கோப்பை பெரியதாம். செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத், டென்னிஸ் சான்யா மிர்ஸா இவர்கள் எல்லாம் நாடு திரும்பிய போது இத்தனை வரவேற்பும் பரிசும் தரப்பட்டதா?
ஒரே ஒவரில் 6 சிக்ஸர் அடித்த ரவி சாஸ்திரி என்ன பரிசு வாங்கினார்? அது ரஞ்சி ட்ரோஃபி என்பதால் பேர் மட்டும்தானா. இன்று 1 கோடி ரூபாயாம், போர்ஷே காராம்.
பத்திரிகையும் "இந்தியா பாகிஸ்தானுடன் மோதல்" என்றும் "பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது" என்றும்தான் எழுதுகிறது. இது என்ன யுத்தமா? விளையாடுகிறது, ஜெயித்தது என்று எழுதினால் என்ன.
ரேடியோவில் ரன்னிங் கமென்டரி கேட்ட காலத்திலிருந்தே கிரிக்கெட் மக்களைக் கவர்ந்த கேம்தான்.பள்ளிக்கூடங்களில் இப்போது மைதானமே கிடையாது. கட்டிடங்கள்தான் உயர்ந்து கொண்டிருக்கின்றன.மற்ற விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து கல்வித்துறை மாணவர்களுக்கு விளையாட்டையும் கற்பித்து உடல்பயிற்சியுடன் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவதையும் வளர்க்க வேண்டும்.

2 comments:

cheena (சீனா) said...

இங்கு எல்லோர் மனதிலும் எழும் கேள்விதான் இது - கிரிக்கட்டைத் தவிர மற்ற ஆட்டங்களை பொதுவாக மக்களோ அரசுகளோ கண்டு கொள்வதே இல்லை. உலக செஸ் சாம்பியன் ஆனந்தின் ஆர்வம் மிக்க கேள்வி சம்பந்தப்பட்டவர்களைச் சிந்திக்க வைக்கட்டும். அவருக்குத் தக்க அங்கீகாரமும் மரியாதையும் பரிசுகளும் தர அரசுகள் முன் வர வேண்டும். கிரிக்கட்டிற்கு இணையாக அனைத்து விளையாட்டுகளும் நடத்தப்பட வேண்டும்

சகாதேவன் said...

சீனா, வாருங்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் எழுத வந்தேன். நன்றி.