டிவியில் புதிய பாடல்கள் என்று ஒரு நிகழ்ச்சி. நான்கு சிறுமிகளின் போட்டி. நானும் மார்க் போட்டுக் கொண்டு வந்தேன். "கண்ணும் கண்ணும்..." பாட்டு பாடியவர்களே என்னிடம் மார்க் பெற்றார்கள். பாட்டு போலவே தபேலா.ட்ரம்பெட் வாசித்த லக்ஷ்மண் ஸ்ருதி குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள்.நடுவர் மதுமிதா அவர்களும் அச்சிறுமிகளுக்கே பரிசு என்றார்கள். தன்னுடைய கமெண்டில் உச்சரிப்பு பற்றியும் கமகங்கள் பற்றியும் அழகாகப் பாடிக்காட்டினார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் நானும் இது மாதிரி ஒரு போட்டிக்கு நடுவர் குழுவில் ஒருவனாக இருந்தேன். ஹோட்டல் காரன் அழகப்பனுக்கு நாட்டியம் பற்றி என்ன தெரியும் கீதா நினைத்தது போல, மோட்டார்கம்பெனிக்காரனுக்கு சங்கீதம் என்ன தெரியும் என்று பிற நடுவர்கள் கேட்டனராம். என்னை அழைத்த அமைப்பாளருக்கு ஒரு நம்பிக்கை. நானும் பாரதியார் பாட்டு என்றால் சினிமாக்களில் வந்த அவருடைய பாடல்களைத்தானே மாணவர்கள் பாடுவார்கள், அதான் எனக்கு தெரியுமே என்று ஒப்புக்கொண்டேன்.
அன்று நன்றாகப் பாடிக்கொண்டு வந்த ஒரு மாணவன் ஒரு பாட்டில் ஒரு அடி மறந்து ஸ்டக் ஆகிவிட்டான். அவனாக நினைவு வந்து பாட சில வினாடி பார்த்துவிட்டு "நானொருவன்...." என்று அடியெடுத்து தந்தேன். கண்களாலேயே நன்றி கூறி தொடர்ந்து பாடி முடித்தான்.
டிவி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் தாயாரிடம் கேள்வி கேட்க அவர்களும் என் மகள் நன்றாகப் பயிற்சி செய்தாள். பரிசு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்கிறார்கள். இது பரிசு கிடைக்கவில்லையே என்ற கவலையுடன் பரிசு எப்படி மற்றவர்களுக்கு என்றும் அவர்களை நினைக்கதூண்டுமோ என்று எனக்குத் தோன்றுகிறது.
சரி, இன்றைய கேள்வி: "நானொருவன்......."என்று நான் அடி சொன்ன அந்த பாரதி பாட்டு எது?
இரண்டு படங்களில் வரும். ஆனால் ஒன்று இசைத்தட்டு மட்டும் வந்தது. ஏனோ படத்தில் இடம் பெறவில்லை.
8 comments:
தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே........நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ
அருமையான பாரதியார் பாட்டு!
அழகப்பனின் சங்கீத அறிவைப் பார்த்து கீதா வியந்த மாதிரி, இந்த மோட்டார்காரனுக்குத் தெரியாதது எதுவும் இல்லையே என மற்ற நடுவர்கள் வியந்திருப்பார்களே? :)
-RL
சகா!...அதான் எனக்கும் தெரியுமே!
"நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ..."
டி.ஆர். மஹாலிங்கம் பாடி...எந்தப்படம்?
படத்தில் வராத அப்பாடல் இடம்பெற்ற படம் மதுரைவீரன்! டி.எம்.எஸ் பாடியது.பாடல் முதல் வரி, " தீர்த்தக்கரையினிலே..."
சேரியா?
படித்ததுமே வாய் முணுமுணுத்தது "நானொருவன் மட்டிலும்-பிரிவென்பதோ
நரகத் துழலுவதோ?.." என்று. இவ் வரிகள் இடம் பெற்ற பாடல் "தீர்த்தக் கரையினிலே.."; இப்பாடல் இடம் பெற்ற ஒரு படம் 'வறுமையின் நிறம் சிகப்பு'; மற்றொரு படம் 'ஏழாவது மனிதன்' ஆக இருக்கும் என நினைக்கின்றேன்.
மற்றொரு படம் "இளமை ஊஞ்சலாடுகிறது" ஆகக் கூட இருக்கலாம். எது சரி சகாதேவன் சார்?
"அதான் ...தெரியுமே" :-)
சங்கீதம் மட்டுமா..
தங்களுக்குத் தெரிந்த
சகல விஷயங்களையும்
நீங்கள் பகிர்ந்து கொள்ளும்
விதம் வெகு நேர்த்தி!
இந்த இனிய
பொன்னான நன்நாளில் :-)
சகாதேவன்
சகல நலத்துடன்
நீடுழி வாழ blog வாசக
அன்பர் சார்பில் வாழ்த்துகிறேன்.
அம்பாள் ராஜராஜேஸ்வரியைப்
பிரார்த்திக்கிறேன்!
theertha karaiyiniley kannammaa.....
my favourite song by bharathi and t.r.mahalingam
anbudan nunivaal
ஆர்.எல்,
அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.நடுவர்கள் வியந்தார்களோ என்னவோ அரங்கம் கைதட்டி பாராட்டியது.
ராமலக்ஷ்மி,
புதிய படங்களில் இந்த பாட்டு முழுமையாக இடம் பெற்றதா என்று தெரியவில்லை. டி.ஆர்.மகாலிங்கம் பாடிய படம் நினைவில்லை.மற்றது மதுரைவீரன்
.உங்கள் பாராட்டுக்கும் 08/08 நாளை நினைவு கொண்டு வாழ்த்தியதற்கும் நன்றி
நானானி,
இதை,இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். டி.ஆர்.மகாலிங்கம் படம் எனக்கும் நினைவில்லை. டி.எம்.எஸ் பாடியது எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நுனிவால்,
நானொருவன் என்று ஒரு வார்த்தை தான் சொன்னேன். எல்லாரும் கண்டுபிடித்து விட்டீர்கள். இதுதான் பாரதி பாடல்களின் அருமை
நீங்கள் சொன்னது சரியே, வறுமையின் நிறம் சிகப்பில் பாடல் முழுமையாக இடம் பெறவில்லை. முதல் இரண்டு பத்திகளை மட்டும் MSV இசையில் SPB கமலுக்காக அற்புதமாகப் பாடியிருப்பார். பின்னணி இசையே இல்லாது இப் பாடல் தனித்து ஒலிப்பதும் ஒரு சிறப்பம்சமாகும். நீங்கள் download செய்து கேட்டு ரசிக்க வசதியாக URL அனுப்பியுள்ளேன்.
http://music.cooltoad.com/music/song.php?id=125515
Post a Comment