Wednesday, August 8, 2007

வாங்க, இம்பாலா காத்துக்கிட்டிருக்கு

1950களில் எங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு பெண்/மாப்பிள்ளை அழைப்புக்கு பீடி கம்பெனி அதிபரிடமிருந்து ப்யூக் அல்லது சிமென்ட் கம்பெனி அதிபரின் கெடிலாக் திறந்த கார் வரும். நான் அவ்வாறு சென்றதும் என் மைத்துனரின் புதிய 1970 மாடல் இம்பாலா தான். எங்கள் வீட்டுகாரே 1947ல் அப்பா புதிதாக வாங்கிய ஷெவர்லெ ப்ளீட் மாஸ்டர். அதை இப்போது என் மகன் ரெஸ்டோர் செய்துகொண்டிருக்கிறான்.

பாப்புலர் சைன்ஸ் பத்திரிகையில் ஆண்டு தோறும் புதிய மாடல் ஷெவர்லெ, ப்ளிமத், போர்டு கார்களை சோதனை ஓட்டம் செய்து தர வரிசை எழுதுவார்கள். ஆர்வமுடன் படிப்பேன். பின் நான் தமிழ் நாட்டின் பெரிய ஆட்டோ டீலரின் ச்ர்வீஸ் பிரிவில் பணி புரிந்தபோது எல்லா வகை கார்களையும் சோதனை ஓட்டம் செய்திருக்கிறேன். அமெரிக்காவின் இந்த பெரிய கார்கள் மீது எனக்கு அத்தனை ஆசை.

மே மாதம் இங்கு வந்ததும் சாலையில் ஓடும் கார்களில் 7/10 ஜப்பான் கார்களைப் பார்க்கிறேன். உலகிலேயே அதிக கார் விற்கும் ஜெனரல் மோட்டார்ஸ் யு.எஸ்ஸிலேயே டொயோடாவிடம் போட்டியிட வேண்டியிருக்கிறது. க்ரைஸ்லர் கார்ப்போரேஷன், டெய்ம்லர்(ஜெர்மனி) கைக்குப்போய் இப்போது மீண்டும் கை மாறப்போகிறது. போர்டு மோட்டார் தன்னிடம் உள்ள பிரிட்டனின் லேன்ட்ரோவர், ஜாக்குவார் இரண்டையும் விட்டு விடும் போலிருக்கிறது.

ஒரு கார் விற்றால் அதில் $ 1000 தொழிலாளர்களின் இன்ஷுரன்ஸ்க்கு செலவாகுமாம். கேஸ்(பெட்ரோல்தான்) விலை உயர்ந்து கொண்டிருப்பதால் புதுக்கார்கள் விற்பனை முன்பு போல இல்லை.விளம்பரங்களில் 30 மைல்/கேலன் என்று புதிய கார்கள் கூவுகின்றன. கெடிலாக் டீலர்கள் ஜி.எம் ஒப்புதலுடன் வாரண்டி தாண்டியும் இலவசமாக வேலை செய்து தருகிறார்கள். போர்டு தன் ப்யூஷன் காரை, கேம்ரி(டொயோடா), அக்கார்ட்(ஹோண்டா) கார்களுடன் ஒப்பிட்டு, 400 டிரைவகளின் ஓட்டு மூலம் ப்யூஷன் தான் பெஸ்ட் என்கிறது. எப்படி இருக்கிறது?.

லீ அயகோக்கா(Lee Iacocca-என் உச்சரிப்பு சரிதானே) தன்னுடைய

"Where Have All tha Leaders Gone?" புதிய நூலில் கூறியவை.

* சென்ற ஆண்டு General Motors, Ford and Chrysler கம்பெனிகளின் தலைமைகளை அழைத்து ஆலோசனை செய்ய ஜார்ஜ் புஷ் காலதாமதம் செய்தது ஒரு காரணம்.

*தேர்தலிலோ, C E O பதவிக்கோ போட்டியிடுபவர்களிடம் "Nine C's of Leadership(First, Curiosity- last, Common Sense--Google பாருங்கள் ஹோம் மேக்கரிடமும் தேவை) கட்டாயம் இருக்க வேண்டும். யாரிடமும் 9-ம் முழுமையாக இல்லை.

* யு.எஸ்ஸின் ஆட்டோ தொழில் பழைய வலிமை பெற் நஷ்டத்தைத் தவிர்த்து, கார் தயாரிப்பாளர்கள், யூனியன்கள்,அரசு கூடி திட்டமிட வேண்டும்.



என் கவலை அமெரிக்க மூவேந்தர்கள் ஜப்பான் படையெடுப்பால் சிற்றரசர்கள் ஆகி விடுவார்களோ என்பதுதான்.

4 comments:

நானானி said...

சிகாகோவில் ஓடும் பல்வகை கார்களை கண்கள் குளிர நன்றாக மேய்ந்து கொண்டிருகிறீகள் என்று தெரிகிறது.என்னென்ன கார்களை ஓட்டிப்பார்த்தீர்கள்? சரியான கார் பைத்தியம்!

Anonymous said...

நல்ல பதிவு!
ஆனால் இம்முறை கேள்வியே கேட்கவில்லையே Quizmaster? Birthday special ஆதலால் no questions? வாழ்த்துக்கள் !!
:-)
-RL

சகாதேவன் said...

நானானி,
இங்கு நான் ஓட்டிய கார்கள்: மெர்சிடஸ், நிஸான், இம்பாலா

ஆர்.எல்.
கேள்வி விரைவில்.

சகாதேவன் said...

welcome and thank you doctor
sahadevan