Tuesday, August 14, 2007

ஆக, பதினைந்தன்று என்ன செய்வீங்க?

வருடாவருடம் தீபாவளி போல சுதந்திர தினமும் விடுமுறையும் வந்து விடும். எல்லா டிவியிலும் எதைப் பார்க்க என்று நம் சுதந்திரத்தைப் பறிக்கும் அளவு நிகழ்ச்சிகள்.
முன்னெல்லாம் சுதந்திர தினத்தன்று சென்னை கடற்கரையில் கவர்னரும் நெல்லை வ உ சி மைதானத்தில் கலெக்டரும் கொடியேற்றுவதைப் பார்க்க கூட்டம் அலைமோதும். இப்போது கிரிக்கெட் மாட்ச்கூட வீட்டிலிருந்தே பார்க்கலாம்.
எங்கள் வீட்டில் நான் டிவி பார்க்கையில் தேசீய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்பேன். வீட்டில் எல்லோரும் முதலில் சிரித்தாலும், இப்ப எழுகிறார்கள்.
அப்ப நீங்க?

9 comments:

நானானி said...

நானும்தான்.

சகாதேவன் said...

என்ன சிரிப்பீர்களா அல்லது எழுந்து நிற்பீர்களா?
சகாதேவன்

தறுதலை said...

¸¡ó¾¢ ¦¸¡û¨¸Â ¸¨¼À¢Êô§Àý. Å¢§¾…¢ காந்தி கொள்கைய கடைபிடிப்பேன். விதேஸி ஸாமான் ஏதும் கிடையாது. ஸ¤தேஸி ஸாமான்கள்தான்.
"வெள்ளையனை வெளியேற்ற தன் கையே தனக்குதவி"ங்றத இன்னக்கினாலும் கடைபிடிக்காட்டா எப்படி?

.............
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

Anonymous said...

siriththuk kondey ezhundhu nirpeyn.....yaarellaam sirikkiraarkazh....yaarellaam nijamaana desa bakthiyudan nirkiraarkazh endru sarvey nadaththuveyn.[ithu en 15+ sil].matrapadi national anthamai avamathikkum nokkamillai....irundhaalum sirippavarkazhai yellaam nirka vaiththa sakathevan neerthanaiyaa unmaiyaana india kudimakan.happy august 15th.anbudan nunivaal

சகாதேவன் said...

thank you nunivaal, for your comment and greetings.
sahadevan

சகாதேவன் said...

அய்யா சுதேசி,காந்தி இன்னும் என்னென்னமோ சொன்னார். அவற்றையும் கடைப்பிடியுங்கள்.
தறுதலை யார் என்று பார்க்கலாம் என்றால் உங்கள் ப்ரொஃபைல் மூடியிருக்கிறது. உங்கள் ப்ளாக்கில் மாறுதலை செய்து ஆறுதலை அளியுங்கள்.
சகாதேவன்.

Anonymous said...

"தாயின் மணிக்கொடி பாரீர்!-அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்" என எம்மை சின்ன வயதில் எம் தாத்தா ஒவ்வொரு ஆகஸ்டு பதினைந்தன்றும் மாவட்டக் கலெக்டர் கொடி ஏற்றுவதைக் காண நெல்லை வ.வு.சி மைதானத்துக்கு அழைத்துச் செல்வார். இப்போதோ இந்நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் குறைந்து சுதந்திர தினம் என்பது மற்றுமொரு விடுமுறை நாள் என்கிற போக்கே மேலோங்கி நிற்பது வருந்தத் தக்கதே!

சகாதேவன் said...

ராமலக்ஷ்மி,
டிவியில் ஜன கண மன என்று ஏர்டெல்லுக்காக தாத்தாக்களும் பாட்டிகளும் ஆளுக்கொரு வார்த்தையாகப் மெதுவாகப் பாடியதைப் பார்த்தீர்களா? பள்ளிக்குழந்தைகளுக்கு ஒத்திகை கொடுத்து அழகாக அதற்குரிய வேகத்தில் பாடச் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
சகாதேவன்.

Anonymous said...

Super-ஆகத்தான் இருந்திருக்கும். பார்க்கிற அத்தனை குழந்தைகளையும் ஜன கண மன கற்றுக் கொள்ளத் தூண்டியும் இருக்கும்.