சைனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் எல்லாம் அமெரிக்காவில் திரும்பப் பெறப் படுகின்றன. பெயிண்டில் ஈயம் அதிகம் காணப்படுகிறதாம். சில வகை பொம்மைகளில் உள்ள சின்ன காந்தங்களை குழந்தைகள் விழுங்கிவிட்டால் வயிற்றைக் கிழித்துவிடுமாம். என்ன பயங்கரம்?
நான் ஊருக்குச் செல்கையில் என் பேத்திகளுக்கு துணியால் ஆன ஸாப்ட் டாய்ஸ்தான் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
சீன அரசும் இப்போது தரக்கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறதாம். நம் ஊரில் செய்யப்படும் மரப்பாச்சி, செப்பு, தலையாட்டி பொம்மைகளை எல்லாம் பெயிண்ட் அடிக்காமல் (நம்ம பெயிண்டில் ஈயம் அளவு தெரியாதே) ஏற்றுமதி செய்தால் என்ன என்று தோன்றுகிறது.இங்கு வாழும் இந்தியக் குழந்தைகளுக்குக் கூட அவை தெரியாது.
3 comments:
மூன்றுமாதம் முதல் ஒரு வயதுவரைஎதை எடுத்தாலும்
வாயில் வைத்துதான் உலகை றிந்துகொள்ள முயலும் குழந்தைகளுக்கு எப்படித்தான் இப்படிப்பட்ட பொருட்களை மனசாட்சியில்லாமல் தயார் செய்கிறார்களோ? அதி உஷாராக இருக்கும் அமெரிக்கர்கள் எப்படி அனுமதித்தார்களோ? காலம் கடக்குமுன் விழித்துக்கொண்ட வரை சந்தோஷம்! உங்கள் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு என்வாழ்த்துக்கள்!! செய்யூ!!
மறக்காமல் பேத்திகளுக்கு சாஃட்டாய்ஸ் வாங்கிச்செல்லவும். இரண்ட்டிரண்டாக!
இதுதான் உலகம்.
சகாதேவன்
திருநெல்வேலி டவுண் கோயில் வாசலில், ஓலைப் பெட்டியில் கிடைக்கும் செப்புச் சாமான்கள் சிறந்த kitchen set. நாங்கள் விளையாடி மகிழ்ந்த மரப்பாச்சி, செப்பு, கோலாட்டக் கம்புகள் இவை இன்னும் எனது 4 வயது தங்கை மகளுக்கு அறிமுகமாகவில்லை. உங்கள் பேத்திகளுக்கு இவற்றோடு பரிச்சயம் உண்டா? [கேட்டேனே ஒரு கேள்வி! :-)] நவீன Barbie, அதன் Kitchen accessories-வுடன் இவற்றால் போட்டியிட்டு இன்றைய குழந்தைகளைக் கவர முடியுமா என்பது சந்தேகமே! ஒருவேளை export செய்தால் அன்னிய தேசத்தில் புதுமை காரணமாகத் தாக்குப் பிடித்தாலும் பிடிக்கும்தான்.
Post a Comment