Friday, August 3, 2007

கேட்டதில் பிடித்தது.

சிவாஜி படம் எடுத்த கதை பற்றி டிவியில் சொன்னார்கள். பாடல் எழுதியவர், ரகுமான் வேகமான மெட்டு இசைத்த போது தான் கட கட கட என்றும் மொறு மொறு மொறு என்றும் வரி சொன்னதாகச் சொன்னார். எம்.எஸ்.வியும் கவியரசும் இப்படி பாட்டு உருவாக்கியதை பாலச்சந்தர் எப்படி படமாக்கினார் பாருங்கள்.
இனிமையான சந்தத்தை அருமை என்று கவியும், கடினமான சந்தத்திற்கு வரி சொன்னதும் சபாஷ் என்று இசையும் பாராட்டிக் கொண்டதைக் கேட்ட உடனிருந்த பாலசந்தர் ஸ்ரீதேவி சந்தம் சொல்ல கமல் வரி சொல்வதாக ஒரு காட்சி அமைத்தார் வருமையின் நிறம் சிகப்பு படத்தில் .
தந்தன தந்தன தான தந்தன தந்தானா என்று எம்.எஸ்.வி சந்தம் சொல்ல கவியரசு சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி என்று பல்லவி சொல்கிறார். ஜானகியும் எஸ்.பி.பியும் பாடினார்கள். மீண்டும் படம் பாருங்கள்.

1 comment:

நானானி said...

இப்படி கவிஞரும் எம்ஸ்வியும் இணைந்து பாட்டு உருவான விதம் பற்றிய செய்திகள் அந்தப்பாடலைவிட
கேட்க சுவையாயிருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும்.