Wednesday, December 5, 2007

கல்யாண சமையல் சாதம்

கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
சாப்பிட்ட பிறகு பார்த்தால்
எல்லா இலையிலும் மீதம்.

முன்னெல்லாம் கல்யாண வீட்டில் முகூர்த்தம் முடிந்ததும் இலை போட்டு சாப்பிட அழைப்பார்கள். பாயில் உட்கார்ந்து நாமே தண்ணீர் விட்டு இலை கழுவியதும் உப்பு, ஊறுகாயில் ஆரம்பித்து பரிமாறுவார்கள். ஒரு "நாலு குழி சட்டி"யில் பொரியல், கூட்டு, அவியல், பச்சடி என்று கேட்டு அதனதன் இடத்தில் இடுவார்கள். சாப்பிடும்போதுஇலையைப் பார்த்து மீண்டும் பரிமாறுவார்கள். நாம் வேண்டியதை வாங்கிக் கொள்ளவும் பிடிக்காததை ஒதுக்கி விடவும் முடியும். இலையில் எதுவும் வீணாகாமல் போகும்.

எங்கள் வீட்டுக் கல்யாணப் பந்தியில் என் அருகே அமர்ந்த என் அண்னனின் நண்பர் திரு.கந்தசாமி அவர்கள் என்னிடம் சொன்னார், " உன் இலையில் மிளகாய், கரிவேப்பிலை, முருங்கைக்காய் தோல் ஆகியவைதான் இருக்கலாம். வேறு எதுவும் மிச்சம் வைக்கக்கூடாது" என்றார். அன்றிலிருந்து 45 வருடங்களாக அப்படித்தான் சாப்பிடுகிறேன்.

இன்று எதிலும் அவசரம்.முகூர்த்தம் முடியும் முன்பே இலையில் எல்லா கறிகளும் பரிமாறி, நாம் அமர்ந்தபின் சாதம் கொட்டுவார்கள். ஆமாம், பெரிய அகப்பையில் சாதம் இடுவார்கள். இரண்டாவது ரவுண்டு வர அவர்களுக்கு பொறுமை இல்லை. காரணம் பரிசாரகர்கள் யாருக்கும் இந்த வேலைக்கு வேண்டிய அனுபவமும் கரிசனமும் கிடையாது. சமையல் கான்ட்ராக்டர்களும் அவர்களுக்கு ட்ரெயினிங் கொடுத்து அனுப்புவது இல்லை. கடைசியில் எல்லா இலைகளிலும் எல்லா பதார்த்தங்களூம் மீதமாகி குப்பையாக வீசப்படுகின்றன. விருந்தினர்களும் வீணாக்காமல் சாப்பிடும் வழக்கம் கொள்ள வேண்டும்.

பஃபே ஸ்டைலிலும் இப்படித்தான். ஒருமுறை, சர்வர் அவியல் ஒரு பெரிய கரண்டியில் எடுத்தான். நான் கொஞ்சம் போதும் என்றால் அவன் கொஞ்சம்தான் விழும் என்றான். நான் கரண்டியை அவனிடமிருந்து வாங்கி முழுவதையும் சட்டியில் தட்டிவிட்டு பாதி கரண்டி மட்டும் எடுத்துக்கொண்டேன்..

எல்லா சமயமும் இப்படி உணவு வீணாவதைப் பார்க்கும் போது மிகவும் சங்கடமாக உள்ளது. அளவாகப் பரிமாறி எல்லோரையும் நிறைவாக சாப்பிட வைத்து, மிஞ்சும் உணவை அருகில் உள்ள அனாதை விடுதியிலோ, முதியோர் இல்லத்திலோ கொடுத்தால் அவர்களும் மணமக்களை வாழ்த்துவார்களே? ஏன் செய்யக்கூடாது?

13 comments:

goma said...

எத்தனையோ விஷயங்கள் மாற்றுவதற்கு சாத்தியமில்லாத அளவுக்குப் பெருகி விட்டன.நம் கைகளில் இல்லாத பிரச்சனைகளை நினைத்து வருந்துவதில் என்ன பலன் சொல்லுங்கள் சகாதேவன்.நம் ஆதங்கத்துக்கு, வடிகால்தானே ,இந்த வெடிவால்.
வடித்துவிடுங்கள் வேதனை வெடித்துச் சிதறும்

நானானி said...

உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான் சகா! 'கல்யாண சமையல் சாதம்' படைப்பவர்கள் உங்கள் யோசனையை மனதில் கொண்டால் செலவும் குறையும் வீணாவதும் தடுக்கப்படும்.புளி ஏப்பம் விடுபவர் வயித்தை விட பசி எப்பம் கொள்பவர் வயிறெல்லாம் நிறையும்.
ஒரு செய்தி...நான் கறிவேப்பிலையையும் இலையில் விடமாட்டேன். ஹஹ்ஹஹஹ்ஹா..ஆஹஹ்ஹஹ்ஹா...!

சகாதேவன் said...

கோமா,
மாற்றங்கள் நேர்வது சரிதான். நமக்கு வயதானதாலோ என்னவோ முன் போல் எதுவும் இல்லையே என்று நினைக்கிறேன்.
சகாதேவன்.

lucky said...

sahadevan your articles are very interesting and your nickname is still more attractive...i am a new comer to the blog.... visit my blog and log your comments

Chittoor Murugesan said...

மிக நல்ல கருத்து. 1098 க்கு போன் செய்தால் போதும் என்று எனது ஆர்குட் நண்பர் ஒருவர் மெயிலினார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

எழுத்தாளர்களுக்கு டிப்ஸ் என்ற என் பதிவிற்கான மறு மொழி சூப்பர். மிக உன்னத நகைச்சுவை உணர்வு கொண்டிருக்கிறீர்கள். இந்த கேடு கெட்ட அமைப்பில் பைத்தியம் பிடிக்காதிருக்க உதவுவது ந.உணர்வு ஒன்றே.

sailappan said...

Everybody knows that this is a false prestige in providing more items of food in the menu which normally one cannot eat.varattu gowravam must vanish from the minds of many people so that Saghadevan will be happy. Annaal ennalo.

ராமலக்ஷ்மி said...

'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்..' ஜகத்தினை அழிக்க யாரும் புறப் பட வேண்டாம்!
Atleast, உணவை வீணாக்காமலாவது இருக்கலாம்! மிக நல்ல கருத்து.

ராமலக்ஷ்மி said...

விசேஷங்களில் பார்த்துப் பார்த்துப் பரிமாறப் பட்ட காலமெல்லாம் பழங்கதைகளாகிப் போச்சு! இப்போ பெரும்பாலும் city-களில் buffet system-தான்.
'வாருங்கள்; வரிசையில் நின்று வாழ்த்துங்கள்;எடுத்துப் போட்டு சாப்பிடுங்கள்; வாசலைப் பார்த்துப் போய் கொண்டே இருங்கள்'தான்.
அதுவும் சில இடங்களில் ஆளில்லா மேஜையில் அடுக்கி வைத்திருக்கும் தாம்பூலப் பையையும் நாமாகவே எடுத்துக் கொண்டு நடையைக் கட்ட வேண்டும். காரணம், உறவே கூடி ஊரை உபசரித்தது ஒரு காலத்தில். உறவு கூடுவதே பெரிய விஷயமமாகி விட்டது இந்தக் காலத்தில்! முதலில் வேடிக்கையாய் இருந்தாலும் இப்போது எல்லாம் பழகி விட்டது.
"முன் போல் எதுவும் இல்லையே என்று நினைக்கிறேன்".
கால மாற்றம் என்ற பெயரில் எல்லாவற்றையும் ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது. என்ன செய்வது சகா?!?

cheena (சீனா) said...

சகாதேவன்

என்ன செய்வது - அவசரமான உலகத்தில் இது மாதிரி இலையில் மிஞ்சுவது அதிகமாகி விட்டது.

சரியாய் விடும்

என்னது நானு யாரா? said...

நண்பரே! இந்த பதிவின் சுட்டியை தந்து சென்றமைக்கு நன்றி! உங்களின் பதிவை படித்து பார்த்தேன். உணவு வீனாவதை மிகவும் நன்றாக நகைசுவையுடன் சுட்டி காட்டி இருக்கிறீர்கள்.

நீங்கள் சொன்னது போல் இப்போது கூலிக்கு மார் அடிப்பவர்கள் தான் இருக்கிறார்கள். உண்மையான அன்போடு உணவை வீனாக்காமல் பரிமாறுவது மிகவும் அரிதாகி விட்டது.

நன்றி நண்பரே! உங்களை போன்ற மூத்த பதிவர்கள் தொடர்ந்து என் வலைபக்கம் வந்து நிறை குறைகளை சுட்டி காட்ட வேண்டுகின்றேன்.

Chittoor Murugesan said...

வாத்யாரே பார்த்திங்களா.. "மூத்த "ன்னுட்டு கிழவாடின்னிட்டிங்க. என் வயசுதான் 43 . செத்தா சொல்லிக்கிற மாதிரி ஒரே பைசா கூட சாதிக்கலை . என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்க துரை !

பால கணேஷ் said...

மண்டபத்தில் முகூர்த்தம் முடியும் முன்னரே இலைகளில் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டு இருப்பதை நானும் கவனித்து வேதனித்து இருக்கிறேன். நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கீங்க. ராமலக்ஷ்மி மேடம் சொன்ன மாதிரி உறவுகள். உபசரிப்புகள் எல்லாமே ஃபார்மலாகி விட்டது. கான்ட்ராக்டர்கள்தான் முக்கியக் காரணம் என்ற உங்கள் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. நல்ல பகிர்வு.

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் பதிவுகளை இப்போதுதான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். கல்யாண சமையல் சாதம்! பிரமாதம்!