Tuesday, February 5, 2008

344/365 - என்ன மார்க்கா?

இல்லையாம்.அரசு போக்குவரத்து அதிகாரி சொல்கிறார்-"மார்க் என்றால் மகிழ்ச்சி அடையலாம்.ஆனால் சென்ற வருடம் 365 நாட்களில் 344 விபத்துக்கள் என்றால் மனம் பதைக்கிறது".
சாலை விதிகளை மதித்து, மனநிலை பாதிக்கப்பட்டபோது வண்டி ஓட்டாமல், போட்டி போடாமல், பழுதடைந்த சாலைகளில் வேகமாகச் செல்லாமல் இருந்தால் விபத்தைத் தவிர்க்கலாம். மீறி விபத்து நடந்தால் அடி பட்டவர்க்கு முதலுதவி, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ப்பது எல்லாம் செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுரை செய்திருக்கிறார். விபத்து ந்டந்த இடத்தில் கூடும் மக்களின் அடிக்குப் பயந்து டிரைவர் ஓடிவிடுகிரார்களே.

சென்ற மாதம் சாலை பாதுகாப்பு வாரம் நடந்தது. சாலைக்கே பாதுகாப்பு இல்லையே?. ஒரு இதழில் படித்தேன். சாலை போட்டுக்கொண்டிருக்கும் தொழிலாளர்களிடம் தொண்டர்கள் கேட்கிறார்கள் -"சீக்கிரம் ரோடு போட்டு முடியுங்கள், நாங்கள் போஸ்ட் நடுவதற்குத் தோண்ட வேண்டாமா?" மழை வேறு சாலையைக் குழி குழியாக ஆக்கி விடுகிறது. சம்பந்தப்பட்ட இலாகா உடனே ரிப்பேர் செய்வதில்லை.

சாலை விபத்து என்றால் டிரைவர்கள் மட்டுமே காரணம் என்று ஆகி விடுகிறது. ஒரு நாய் குறுக்கே ஓடினாலே ப்ரேக் போட்டு அதை காப்பாற்ற முயல்கிறார்கள். ஆள் வந்தால் செய்ய மாட்டார்களா? இப்போது கொலைமுயற்சி என்பது வரை டிரைவர் மேல் வழக்கு பதிவு செய்யப்படுமாம். குறுக்கே ஓடி வந்தவர் காயத்துடன் தப்பினால் அவர் மேல் தற்கொலை முயற்சி வழக்கு போடுவார்களா?

சாலை விதிகள் இனி பள்ளிப்பாடமாகவே இருக்க வேண்டும். நான் 1963-ல் மெட்ராஸ் சென்ற புதிதில் ஒரு நாள் மவுண்ட் ரோடிலிருந்து ஸ்கூட்டரில் பீச் ரோட்டில் ரைட் திரும்புமுன் 'நில் கவனி' சைன் பார்த்து மெதுவாக வந்து இருபுறமும் பார்த்து, கியர் மாற்றி ரைட் திரும்பினேன். வ்சில் சத்தம் கேட்டு நிறுத்தினால் போலிஸ்காரர். நில் கவனி சிக்னலில் நீ காலை ஊன்றி நின்றிருக்க வேண்டும் என்றார். பின் மாணவன் என்றதும், லைசன்ஸை வாங்கிப் பார்த்துவிட்டு, சரி இனி பார்த்துப் போ என்றார்.

ஜனத்தொகை பெருகியது போல வாகனத்தொகையும் பெருகிய நிலையில் சாலையில் கண்காணிப்பதற்கு காவலர்கள் இல்லை போல. சிக்னலில் ஆம்பர் விழுந்துவிட்டால் வேகமாக க்ராஸ் ச்ய்துவிடுகிறார்கள். இதெல்லாம் ட்ரைவிங் ஸ்கூலிலேயே ந்ன்றாகக் கற்றுத் தர வேண்டும். ஒரே மாதத்தில் லைசன்ஸ் எடுத்துத் தருவது ஒன்றுதான் அவர்கள் எண்ணம்.

எல்லோரும் பைக், கார் வாங்குவது முன்னேற்றம்தான். ஒரு மணி முன்னதாக புறப்பட்டு சைக்கிளிலோ ப்ஸ்ஸிலோ சென்றவர்கள் இப்போது 10 நிமிடத்தில் ஆபீஸ் -ஸ்கூல் போய் விடலாமே என்று அவசரமாகப் போகிறார்கள்.ட்ராக் மாறாமல் செல்வதுமில்லை.ஓவர்டேக் செய்ய சாலையின் வலது புறத்துக்கே வந்து எதிரில் வரும் வண்டிக்கு இடைஞ்சல் ஆகிறார்கள். சமயத்தில் இடது புறமாகவும் முந்துகிறார்கள்.

பெடஸ்ட்ரியன் க்ராஸிங் என்று ஒரு ஒழுங்கு கிடையாது. மார்க் செய்யப் பட்ட இடத்தில்தான் க்ராஸ் பண்ன வேண்டும். வண்டிகளும் நின்று அவர்களுக்கு வழி விட வேண்டும். இதையெல்லாம் யார் சொல்வது, யார் கேட்பது?
ட்ராஃபிக் காவலர்கள் இடைஇடையே கண்ட்ரோல் செய்யும்போது விதி மீறுபவகளுக்கு ஸ்பாட் ஃபைன் போட்டு தினசரிகளில் செய்தியாக வ்ந்தால் எல்லொருக்கும் ஒரு பயம் வரும்.

பாதசாரிகள், டிரைவர்கள் என்று சாலை உபயோகிப்பவர்கள் அனைவரும் கவனமாக இருந்தால்தான் விபத்தைத் தவிர்க்கமுடியும்

சகாதேவன்

4 comments:

நானானி said...

ஃப்ரீ லெஃப்ட் லேனில் வந்து ரைட்டில் போக வேண்டிய வாகனம் வந்து நின்று இடதுபுறம் செல்ல வேண்டியவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதை என்னவென்பது? சாலைப் பாதுகாப்பு 99.9% மக்கள் கைகளில்தான் இருக்கிறது. கடுமையான சட்டங்களுக்கே நம்மவர்கள் பயப்படுவார்கள்..பணிவார்கள்.

சகாதேவன் said...

நானானி,
சட்டம் மட்டும் போதாது.மக்கள் அதை மதித்து நடக்க வேண்டும். டிவியில் எத்தனை நிகழ்ச்சிகள்? ஒன்றிலாவது சாலை விதிகளை குழந்தைகளுக்குக் கற்றுத்தரவும், பெரியவகளுக்கு நினைவு படுத்தவும் தினம் ஒரு அரை மணி நேரம் ஒதுக்கக்கூடாதா?
சகாதேவன்

lucky said...

whatever you have mentioned is 200% true....many youngsters ride the vehicles just for the sake of fun and they do not realise the importance of human life......how many people are wearing the helmets...the helmets are hanging at the sides or at the back of the vehicle.....verrrrrrrrrrry strict road rules can only change the situation

சகாதேவன் said...

லக்கி,
ஹெல்மெட், காரில் சீட் பெல்ட் அணிவது இரண்டும் தவறினால் ஃபைன் போட வேண்டும்.அதற்கு உடனே ரசீதும் தர வேண்டும்.
ட்ராஃபிக் காவலர்களும் நாள் முழுக்க வெயிலில் நின்று என்னதான் செய்வார்கள்?
திருநெல்வேலியில் நிறைய இடங்களில் ஒரு வழிப்பாதை அமைக்க வேண்டும்.
ஃப்ளை ஒவருக்குத் தான் இப்போது அவசரம்.
சகாதேவன்