பார்த்தால், பாறை 1/3 அளவிலும் 2/3 அளவிலும் பிளவு பட்டு இருந்தது. அம்மன் ஆணை படி பிள்ளைகளுக்கு தந்தாராம். பத்தமடைக்கு தெற்கே 10 கிமீ தொலைவில் உள்ள இந்த இசக்கி அம்மன் தான் எங்கள் குலதெய்வம். சின்ன வயதில் அப்பா, அம்மாவுடன் சென்றிருக்கிறேன்.
நேற்று ஆடிச் செவ்வாய். ரொம்ப நாட்களூக்குப் பிறகு நான், தாமரை(என் மனைவி), என் அண்ணன், மதினி எல்லோரும் சென்றோம். கோவிலில் முன் போல அடுப்பு கட்டிகளில்லாமல் அடுப்பே வைத்திருந்தார்கள்.
மதினிஅதிலும் அட்வான்ஸ். காஸ் ஸ்டவ் கொண்டு வந்திருந்தார்கள். சர்க்கரைப் பொங்கல் இட்டு, புது சேலை, மாலை எல்லாம் சமர்ப்பித்து வணங்கி வந்தோம்.
3 comments:
1/3,2/3 என்று பாறை பிளந்து நின்று ,குடும்பம் பிளவு படாமல் , தீர்ப்பு சொன்ன இசக்கி அம்மனைப் பற்றி அழகாக எடுத்துச் சொன்னீர்கள். இதுவரை நான் அறிந்திராத விஷயம் இது .
நன்றி சகாதேவன்
புதுத் தகவல், குலதெய்வம் கோவிலுக்குப் போய் வழிபடுவதே பெரும் பலன் தரும். படங்கள் நல்லருக்கு. நான் ஓல்ட் மாடலில்
வரட்டியே அடுப்பாகக் கொண்டு பொங்கல் வைத்தேன். உங்கள் மதனி
ரொம்ப ஹைடெக்...!மினி காஸடுப்பிலேயே பொங்கலிட்டுவிட்டார்களே!!!!!சூப்பர்.
தாமரை பொங்கலிடவில்லையா?
கல் மூலம் அம்மன்
சொல்லிட்ட தீர்ப்புக்கு மறு சொல்லுண்டா என்ன?
படங்களும் அருமை.
Post a Comment