திரு.கே.வைத்தியநாதன் ,தி.நகர், அப்போலோ டைம்ஸ் (1.8.08) நாளிதளில் எழுதியிருக்கிறார்.
சில வருஷங்களுக்கு முன்னால் லிப்டன் இந்தியா லிட். தங்கள் சேல்ஸ்மன் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு டீ தூள் சப்ளை செய்யாததால் அவர்கள் எல்லோரும் ப்ரூக் பாண்ட்க்கு மாறிவிட்டார்கள் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுதியதாம். இந்த வழக்கில் வைத்தியநாதனின் சகோதரர், திரு.கே. சிவராமகிருஷ்ணன் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரானாராம்.
குற்றச்சாட்டு: "சேல்ஸ்மன் பாண் ஷாப்களுக்கு டீ தூள் சப்ளை செய்யவில்லை. அதனால் அவர் தண்டிக்கப்பட வேண்டும்"
தன் வாதத்தில் வக்கீல், சேல்ஸ்மன் பாண் (PAWN)ஷாப்களுக்கு செல்லாததில் தவறே இல்லை. அவருடைய வேலை டீ தூள் தரவேண்டியது பான் (PAN)ஷாப்களுக்குத்தான், என்று கூறினாராம். பிறகென்ன. ஒரு எழுத்துப் பிழையால் சேல்ஸ்மன் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பானதாம்.
(நன்றி: அப்போலோ டைம்ஸ்- 1 ஆக.08 நாளிதழ்)
2 comments:
ஆஹா! நிஜமாவே நல்ல வக்கீல்தான்.
பாண்...பான்! ஷிஃப்ட் போட்டு அடிச்சதா வந்த வினை!!
யாரோ யாரையோ ஏமாற்றி விட்டார்கள் போல என நினைத்தேன் தலைப்பைப் பார்த்து. தானே எழுதி கையெழுத்திட்டதில்தான் இந்தத் தகராறா:-)!
Post a Comment